Tuesday, May 12, 2009

VIJAY - AN UNBIASED REVIEW BY SIBY

நான் தீவிரமான விஜய் ரசிகன் ( வில்லு வரை!!) இப்போது ரசிகன். கில்லி அடித்தவர் இன்று வில்லு முறிந்து சோர்ந்து போய் இருக்கிறார்.

இதற்கு முழு காரணம் விஜய் மட்டுமே! முதலில் நல்ல படித்த இல்லை என்றால் நல்ல அனுபவம் உள்ள டைரக்டர்களிடம் மட்டும் படம் பண்ண வேண்டும் . எல்லாத்துக்கும் மேல கதை ஒழுங்கா இருக்கனும்.

கில்லி , போக்கிரி ரெண்டும் விண்ணை தாண்டும் வெற்றி பெற்றதுற்கு காரணம் கதையுடன் கூடிய Heroisms இருந்ததால் மட்டுமே. ஆனால் அது ரெண்டுமே ரீமேக். என்ன கொடுமை சார் இது ??

சரி , அது போகட்டும் என்று இசை பக்கம் வந்தால், அஜித்துக்கு யுவன், சூர்யாக்கு ஹாரிஸ், விஜய்க்கு ? ? ? இசைக்கு கூட பெரிய ஆள் இல்லை என்றால் ??

இது எல்லாம் போதாதுன்னு திடீர்னு "விஜய் அரசியலில் நுழைகிறார்" அப்படினு சொல்லி, எரியுற கொள்ளில எண்ணைய ஊத்திட்டாங்க.

ஒரு நல்ல பெரிய டைரக்டர் 49-வது படம் பண்ணுவார்னு எதிர் பாத்தேன். ஆனாலும் கதையவிட Build-up தான் முக்கியம்னு விஜய் முடிவே பண்ணிட்டாரு போல. படத்துல விஜய் கதாபாத்திரம் பெயர் "போலீஸ் ரவி" ன்னு கேட்டதும் நொந்து noodles ஆய்ட்டேன்.

சூர்யா பெரிய directors படத்துல மட்டும் தெளிவா நடிக்கிறார். விக்ரம் அடுத்த கட்டத்துக்கு போயாச்சு. சிம்பு தெளிவா இருக்காரு. அஜித் பக்குவம் ஆய்ட்டாரு.

விஜய் 50-வது படத்துக்கு ரொம்ப எதிர்பாத்தேன். கலைப்புலி.S.தாணு, ஐஸ்வர்யா ராய், A.R.Rehman அப்படி பெருசா நெனச்சேன், கடைசில காத்து போன பலூன் மாதிரி இருக்கிற Tamanna தான் Heroine-aam, பேரரசு பட வில்லன் மாதிரி பெயர் இருக்கிற "சங்கிலி"முருகன் தான் producer, Telugu படம் tune போடுற Manisharma தான் Music director!!

"வேட்டைக்காரன்" Light man, make -up man, coffee boy, இதுல யாரு வேணாலும் director-aah இருக்கலாம்.

சச்சின் டெண்டுல்கர் கூட அடிக்காம அவுட் ஆயிட்டா, team-la இருந்து வெளிய "கல்தா" குடுத்து அனுப்பி வெச்சுடுவாங்க. விஜய் இத மனசுல நல்ல வெச்சுக்கணும்.

ரஜினிக்கு ஒரு குசேலன், அவ்ளோ தான்."Super star" தரைய தொட்டுடாரு.
விஜய்க்கு "அழகிய தமிழ் மகன்" , "குருவி" , "வில்லு". தளபதி உஷார் !!

குருவி அடி வாங்குனா கூட மானம் போகல. "தசாவதாரம்" audio release, Chennai Super Kings ambassador, அப்படி இப்படின்னு ரெக்கை கட்டி பறந்தாறு . ஆனா வில்லு மண்ண கவ்வ வெச்சுட்டு.

மக்கள் தெளிவா இருகாங்க. தளபதி தெளிவா இருக்கனும். இல்ல அடுத்த செட் heroes like Jai, Jeyam Ravi, Simbhu kooda ஓவர்டேக் பண்ணிடுவாங்க.

இது 100% கடுப்போடு எழுதுகிறேன் !!

Friday, May 8, 2009

Funny Knights !! Just for Fun
டீவியில் நிகழ்ச்சிகள் பார்பதைவிட எனக்கு விளம்பரங்கள் பார்ப்பது ரொம்பபுடிக்கும் ஆனா இப்ப வரும் IPL + 20:20 உலககோப்பை விளம்பரங்கள் என்னை ரொம்ப டென்சன் ஆக்குது.எங்க பிஸ்கோத்த சாப்பிட்டு கவரை கொண்டுவந்தா பைனல்ஸ் போகும் டீமோட உட்காந்து ஆய் போகலாம்...எங்க குளிர்பானத்தை குடிச்சுட்டு மூடிய கொண்டுவந்தா வின்னிங் டீமோட ஒன்னுக்கு அடிக்கலாம் என்ற ரீதியிலேயே அனைத்து விளம்பரங்களும் வருது. எப்படா இந்த 20:20 முடியும் என்று இருக்கு.
எல்லா விளம்பரங்களும் இதே ரீதியில் தான் வருது:(


Download "VETTAIKAARAN" Intro Song

Click Here to Download