Friday, June 12, 2009

Kuruvi Review by our Kalaignar

இளைய தளபதி விஜயின் குருவி படத்தை சிறப்புக் காட்சியாக கலைஞருக்கு போட்டுக் காண்பித்து, விமர்சனம் எழுதித்தரச் சொல்லி தலையை சொறிகிறார், அந்த படத்தின் இயக்குனர் தரணி. பேரன் உதயநிதியின் படம் என்பதால் அரைமனதாக ஒப்புக் கொள்கிறார் கலைஞர், இனி கலைஞரின் விமர்சனம் இங்கே,

********
குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !

உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வருவது தான் குருவி.

இந்த படத்தை சிறப்புக் காட்சியாக எனக்குப் போட்டுக் காட்டினார்கள், தம்பி தரணியின் மற்றொரு தங்கமான படைப்புதான் குருவி. அன்பு தம்பி இளைய தளபதி என்னும் இளைய சூராவளி விஜயின் மற்றொரு வெற்றிப் படம் தான் குருவி.

தமிழகத்தில் இந்த படத்தை எடுத்து இருந்தால் பொதுமக்களே எதிர்த்திருப்பார்கள். காரணம் அமைதிச் சோலையான தமிழகத்தில் கொத்தடிமை முறை என்பது திமுக முதல் முறை அரியணை ஏறிய போதே ஒழிக்கப்பட்டுவிட்டது. தம்பி தரணி அண்டை மாநிலம் கடப்பாவில் நடக்கும் கொத்தடிமையை களைவதற்கு கடப்பாடு கொண்டு தன்னாலான முயற்சியை நன்றாக செய்து இருக்கிறார்.

கண்குளிர மலேசிய காட்சிகள், சீறிப்பாயும் காளையென விஜயின் அதிரடி சண்டைக்காட்சிகள். மின் தூக்கியில் அடைக்கப்பட்டு மீண்டுவரும் இளைய தளபதி விஜய், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனோகராவை நினைவு படுத்துகிறார். அழகு பதுமையாக வனிதை திரிசா காதல் பாடல்களில் இளைஞர்களின் மனைதை கொள்ளையடிக்கிறார். பாடல் காட்சிகளில் பம்பரமாக சுழன்றாடும் விஜய் பரவசப்படுத்துகிறார். அன்று தாயைக் காத்த தனயனாக மனோகரா இன்று தந்தையை காட்கும் தனயனாக வெற்றிவேலுவாக விஜய் என் நினைவுகளையெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னால் இட்டுச் செல்கிறார். முதல் பத்து நிமிடங்கள் (மட்டும்) வந்தாலும் சின்னக் கலைவாணர் விவேக்கின் நகைச்சுவை நம் நாடி நரம்புகளையெல்லாம் சிரிக்க வைக்கிறது.

படத்தின் சிறப்பென ஆசிஸ்வித்யார்த்தியின் அருமையான நடிப்பு, தம்பி சுமனின் வில்லத்தனம், தம்பி வித்யாசாகரின் தரமான இசை, கழக உடன்பிறப்பு மணிவண்ணனின் குணச்சித்திர நடிப்பு இப்படி எதைவிடுவது எதைச் சொல்வதென்றே இந்த படத்தைப் பார்த்த நான் திக்குமுக்காகிவிடுகிறேன்.

கனவு பாடல்களுக்காக வனிதை திரிசாவா, திரிசாவுக்காக கனவுப் பாடல்களா ? உங்களோடு சேர்ந்து எனக்கும் ஐயம் ஏற்படுகிறது. முதல் (தர) காட்சிகளில் வந்து இளமையை கிள்ளிச் செல்கிறார் படர்ந்த பருவக் கொடி மாளவிகா.

குருவி - இது வணிகம் சார்ந்த திரைப்படம் அல்ல. ஏழை எளியவர்களின் கொத்தடிமை துயர் துடைக்கும் பாடம். கழக உறுப்பினர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து, பயன்பெற்று தம்பி விஜயையும், இயக்குனர் தரணியையும் தாராளமாகப் போற்றலாம்.

குருவி மூன்றெழுத்து
விஜய் மூன்றெழுத்து
தரணி மூன்றெழுத்து
திரிசா மூன்றெழுத்து
சுமன் மூன்றெழுத்து
விவேக் மூன்றெழுத்து

மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !

பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம், இதில் அரசியல் எதுவும் இல்லை.

Tuesday, June 9, 2009

Ideas to Dr.Vijay to make his movie a Hit

தற்சமயம் துவண்டு கிடக்கும் விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.

யோசனை1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.

யோசனை2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம்பார்க்க வருபவர்களுக்கு விணியோகிக்கலாம்.

யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது

யோசனை4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.

யோசனை5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.

யோசனை6: திரையரங்க வாயிலில் ஆம்புலண்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீணமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடணடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம்.இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.

யோசனை7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசணங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.

யோசனை8: குறிப்பாக‌ நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்

யோசனை9: டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" என படித்துவிடுகிறார்கள்.எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.மசாலா புயல் பேரரசுவிடம் கன்ச‌ல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.

யோசனை10: குருவி,வில்லு போன்ற பேரடிகளை மறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து,முத்துக்காளை ஆகியோரைப் போல காமெடி வேடங்களில் நடிக்கலாம்.காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள் சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.

யோசனை 11: உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோ விடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்துவிடுவார்கள்.

யோசனை 12: 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பதெல்லாம் பழைய ஃபேஸன். பேசாமல் நீங்கள் 10 ஜோடிக்கு இலவச விவாகரத்து என அறிவித்து அதைத் தலைவர் கலைஞ‌ர் தலைமையில் ஒரு விழாவாக எடுத்தால் பிரபலம் ஆகிவிடலாம். பாராட்டுவிழா என்றாலே எப்போ,எப்போ என துடியாய் துடிக்கும் தலைவர் கலைஞர் இந்த வித்தியாச விழாவிற்கு உடணடியாக ஒப்புக்கொள்வார்.அது மட்டுமின்றி "விவாகரத்தான் விஜய்யே " என்ற தலைப்பில் ஒரு கடிதம் ஒன்றும் எழுதி அதை வழக்கம் போல அப்பாவித் தொண்டர்களைப் படிக்க வைத்து தண்டித்து விடுவார்.

பின்குறிப்பு: இனிமேல் எந்த மாதிரி படங்களை ரீமேக் செய்யலாம்:

மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால் இனி போனியாகாது.
* மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படஙகளை ரீமேக் செய்து நடிக்கலாம்
* எம்ஜியார் நடித்த “ரிக் ஷாக்காரன்” படத்தை "திரிஷாக்காரன்" என்ற பெயரில் ரீமேக் செய்யலாம். மெரினா பீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு வச்சிட்டாய்ங்கே ஆப்பு" என அருமையான டூயட் போட்டு அசத்திவிடலாம்
* பழைய ராமராஜன் படங்களை ரீமேக் செய்து "எங்க ஊரு எருமக்காரன்" என்ற பெயரில் நடிக்கலாம்.