Sunday, August 23, 2009

Kandasamy - Movie Review

ஏழைங்கன்னாலே நெம்ம தமிழ்சினிமா காரவீகளுக்குத்தான் ரொம்ப பிரியம். எப்படியாவது அவங்க கண்ணீர தொடச்சி அவங்க வாழ்க்கைல ஒரு டார்ச் லைட்டையாவது அடிக்கோணும்னு ரெம்ப காலமா கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அறுபது வருஷத்துக்கு மொன்னால வந்த மலைகள்ளன்ல தொடங்கி ரெண்டு வருஷம் முன்னால வந்த சிவாஜி வரைக்கும் ஏழைங்க ஏன் ஏழைங்களா இருக்காங்கனு சொல்லிட்டே இருக்காங்க. இந்த ஏழைங்களுக்கு பிலிம் காட்டியே பல சினிமாக்காரங்க பணக்காரங்க ஆகிருக்காங்க.
அந்த வரிசைல நேத்தும் ஒரு படம் ரிலீஸாகிருக்கு. கந்தசாமி. கறுப்பு பணத்தையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல பதுக்கி வக்கிறாங்க அதான் இந்தியா ஏழை நாடா இருக்கு. அதெயல்லாம் இங்க கொண்டு வந்துட்டா போதும் எல்லாஞ்சரியாகிடுமாம். பணக்காரங்க கிட்ட இருக்கற காசெல்லாம் ஏழைக்கு கிடைச்சிட்டா போதும் நாட்டுல எல்லாரும் சமம்தானு தாணு பல நூறு கோடி செலவளிச்சு சொல்லிருக்காரு. பாவம் தாணு பரம ஏழை போலருக்கு.ச்சே என்னே உயர்ந்த உள்ளம். ஏழைங்க மேல என்னே பரிவு.. ச்ச்ச்சுச்சுசுசுசு..
ஒரே இஸ்கூல்ல படிச்ச பயலுவ வேற வேற அரசாங்க உத்தியோகத்தில இருந்துகிட்டு அது மூலமா நாட்டையே ஆட்டிப்படைக்கிற பெரிய பணக்காரங்க... ஓகே ஓகே கூல் நீங்க ரமணானு மனசுக்குள்ள நினைக்கிற எனக்கு கேக்குது. அதேதான்.
அந்த பணக்காரங்க கிட்டருந்து எடுத்த காச ஏழை மக்களுக்கு குடுக்கறாரு. அதுக்கு டெக்னிக் என்னானா போருர் முருகன் கோயில் மரத்துல உங்க கொறைய எழுதி போட்டா போதும். கந்தசாமி உங்க பிரச்சனைய சோல்வ்,... ஓகே ஓகே கூல் இது அந்நியன் மாதிரி இருக்கா.. அதான் இல்ல ஏன்னா அதுல வெப்சைட்ல போடுவாங்க இதுல கைல எழுதி மரத்துல கட்டுவாங்க டிபரன்ஸ் புரியுதா!
அப்புறம் ஸ்பைடர்மான்,பேட்மான் அதாங்க சிலந்தி மனிதன் , வௌவால் மனிதன் மாதிரி இவரு ஒரு சேவல்மான் (COCK-MAN ). இங்கிலீசுல சொன்னா அமெரிக்காகாரன் சிரிப்பான். விக்ரம் சேவலாட்டமே கொக்கரக்கோனு நல்லா காமெடியா பண்றாரு.. லேடீஸ் கெட்டப்ல வந்து டேன்ஸ்லாம் ஆடறாரு. நடிக்கதான் அவ்ளோவா வாய்ப்பில்ல. சும்மா விக்ரம் நிறைய உழைச்சாருனா என்னத்தா உழைச்சாருனுதான் தெரியல. ஒரு வேள நாலு வருஷம் ஒரு படத்தில நடிக்கறதுக்கு பேரு உழைப்பாருக்கும் போல.
சுரேயானு ஒரு பொம்மனாட்டி. நல்லா படம் பூரா பாப் கட்டிங் பண்ணிகிட்டு நெஞ்சு இடுப்பு வயிறு தொப்புள்னு ஏழைகளுக்கு ஹெல்ப் பண்றாங்க. சாரி ஏழைகளுக்கு ஹெல்ப் பண்ற விக்ரம லவ் பண்றாங்க. ஆனா பாவம் அவங்களயும் அவங்க குரலையும் சிங்க் பண்ணா ஏதோ பிளஸ்டூ பையன கூட்டியாந்து லேடிஸ் வேசம் போட்டு நடிக்க வச்ச மாதிரி இருக்கு. சுசி கணேசன் சின்னதா ஒரு பாத்திரத்தில வராரு. சின்ன பாத்திரம்னா கிண்ணம் , ஸ்பூன் , டம்ளர் மாதிரி. பாவம்!
வடிவேலு எப்பவும் போல நல்லா அடிவாங்குறாரு. பாவமா இருக்கு.
அவரோட இயக்கம்? அவருக்கு படம் எடுக்கவரலைனு எவன் சொன்னான். அவருக்கு படம் எடுக்க வரும் ஆனா வராது. பாவம்ங்க கொஞ்சம் ஓவரா படம் எடுத்துட்டாரு. மொக்கையா ஒரு கதை , அதுக்கு பல கோடி ரூவா பட்ஜெட்டு. மனசுக்குள்ள ஷங்கருனு...!. அதுக்காக ஷங்கர் படத்தோட கதையவேவா படமா எடுக்கணும். சுசி கணேசன் பாவம்.
படம் பூரா கேமரா நம்ம முகத்தில பிளாஷ் அடிச்சுகிட்டே கிடக்குற எஃபெக்ட்டு. எடிட்டிங்னு ஒரேடியா ஒரு ஒரு சீனையும் ஓவரா எடிட்டிடாடய்ங்க போல. ஆனாலும் பின்னாடி சீட்டு ஆயாவுக்கு கண்ணு அவிஞ்சி போற அளவுக்கா. பாவம்யா மக்க பொழச்சு போகட்டும் விட்டுருங்க!
படம் பூரா செம மியூஜிக். தேவி சிரி பிரசாத் நல்லா பண்ணிருக்காப்ல. ஆனா வேற படத்துக்கு இப்படி பண்ணிருக்கலாம். இந்த படத்துல இது ஓட்டல.
போனவாரம் உலகப்படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பாத்து நொந்தேன். இந்தவாரம் ஹாலிவுட் படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பார்த்து... ம்ம் விதி வலியது.
படம் பார்த்துட்டு வெளிய வரும்போது கேர்ள்பிரண்டு திட்டிகிட்டே வந்துச்சு. ஏன்மா இப்படி திட்ற பாவம் எவ்ளோ காசு செலவழிச்சு கஷ்டப்பட்டு உழைச்சு படம் எடுத்துருக்காய்ங்கனு சொன்னேன். உழைச்சிட்டா போதுமானு கேட்டா..! ஐயாம் கப்சிப்.
இதே ரேஞ்சுல இன்னும் மூணே படம். தமிழ்சினிமாவ ஆண்டவானலயும் காப்பத்த முடியாது. அம்புட்டுதான்.
கந்தசாமி - ஹிஹி.. பாவம் தாணு!
பின் குறிப்பு - மத்தபடி கலைப்புலி தாணுவுக்கு எங்கருந்துதான் இவ்ளோ பணம் வருதோ தெரியல. எவ்ளோ அடி வாங்குனாலும் தாங்குறாரு. ஏற்கனவே பல பேருகிட்ட வாங்கியும் புத்தியில்லாத மனுசன். ரொம்ப்ப்ப்ப்ப நல்லவரு போல.. ம்ம்..

Pokkisham - Movie Review

பொக்கிஷம் - கொலைவெறியோடு ஒரு இலக்கியம்

இரண்டு வருஷமா ஒரு நல்ல படம் எடுக்கறேனு எதையோ எடுத்துருக்காய்ங்க.. தெரியாம தியேட்டர்க்குள்ள போனதுக்கு, மூன்றரை மணிநேரம் ம்ம்ம்ம் முடியல மூக்குல ரத்தம் வந்துருச்சு.. இது மாதிரி பத்து படம் எடுத்தா போதும் இனிமே எவனும் தியேட்டர் பக்கமே வரமாட்டான். இதுக்கு என் ஆருயிர் நண்பரையும் அழைச்சிட்டு போயி அவருகிட்ட அசிங்க அசிங்கமா திட்டு வாங்கினதுதான் மிச்சம்.

எனக்கு தேவைதான்.எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான். எனக்கு தேவைதான்.

முக்கால் படம் பாத்தவனுக்கே இந்த எபெக்ட் . முழுப்படம் பாத்தவீங்க உயிரோட வீட்டுக்கு போனாய்ங்களானே தெரியல.இந்த கருமத்த பாக்கறதுக்கு பன்றிக்காய்ச்சல் வந்து செத்துருங்க..

மொத்தத்தில் பொக்கிஷம் - பொக்கிசப்பொட்டியில் காஞ்ச சாணி.

STATUTORY WARNING - WATCHING POKKISHAM IS INJURIOUS TO YOUR MENTAL HEALTH.

மத்தபடி இடைவேளையில் புகைபிடிக்க தடை இருந்தும் ரசிகர்களின் நிலைகண்டு மனமிரங்கி சிகரட் பிடிக்க அனுமதித்த தியேட்டர் உரிமையாளர் வாழ்க..!

Tuesday, August 18, 2009

11 Important Questions to all Girls, Answer if u can :-D

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்வி ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.