Friday, September 18, 2009

Dr.Ilayathalapathy Vijay Jokes collection :: Ultimate Comedy !!

நிருபர் : மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள்காலையில என்ன செய்விங்க...

நடிகர் விஜய் : நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்.

***********************************************************************************

நிருபர் : சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள்சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க...

நடிகர் விஜய் : சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்லவெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்கமுடியலைன்னா பார்த்து கோங்கன்னா....

***********************************************************************************

கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..

விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..

விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்

கவுண்டமணி: நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?

விஜய்: ??!!!

***********************************************************************************

ராஜ சேகர ரெட்டி இறப்பதற்கு காரணம் என்ன தெரியுமா ?

விஜய் காங்கிரஸில் சேருகிறார் என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் இறந்துவிட்டாராம் .இப்படி நடக்கும் எதாவது ஒரு நிகழ்வை( இதற்க்கு முன் மைக்கல் ஜாக்சன் இறப்பு , பன்றி காய்ச்சல் போன்றவற்றை விஜயை தொடர்பு படுத்தி விடுகின்றார்கள்)

***********************************************************************************

விநாயகர் சிலை முன்னாடி ராமா, ராமா ராமே கிட்ட வில்ல கேட்டேன் என பாடிய அதி புத்திசாலி விஜய் மட்டும் தான் .

***********************************************************************************

ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு "வேட்டைக்காரன்" படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

***********************************************************************************
போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?

கைதி : படம் பார்க்கணும்...

போலீஸ் : சரி "வேட்டைக்காரன்" போகலாமா ?

கைதி : அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

***********************************************************************************

ஒருவர்: அங்கே என்ன அவ்வளவு கூட்டம்??

மற்றொருவர்: யாரோ "வேட்டைக்காரன்" படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

***********************************************************************************

விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....

இளையதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....

***********************************************************************************
நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?

விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.

நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?***********************************************************************************
வடிவேலுவின் தங்கச்சி: ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய "வேட்டைக்காரன்" பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூனு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்..அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

வடிவேலு:படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற மாதிரியே நடிக்குறது?

***********************************************************************************
அருணாசலம் ரீமிக்ஸ் ;;

ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?

ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,

***********************************************************************************
விஜய் பிரபுதேவாவிடம் : இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?

பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!

***********************************************************************************

No comments: