Wednesday, November 25, 2009

Athae Neram Athae Idam Movie Review

தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,அப்புறம்"ஏன்டா படத்தில் நடித்த ஜெய்யே படம் ஒரு வாரம் கூட ஓடாதுனு சொன்னார் நீ போய் ஏன் பார்த்தேன்னு கேக்காதிங்க". இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குங்க அது என்னனா மொக்கை படங்களை பார்ப்பதால் நமக்கு மன வலிமையும், சகிப்பு தன்மையும் வளர்வதாக சுவாமி கில்மானந்தா ஏற்கனவே என்கிட்டே சொன்னாருங்க.அதனால்தான் நான் என் சகிப்பு தன்மையை வளர்க்க இந்த படத்தை பார்க்க போனேன்னு சொன்ன நீங்க நம்பவா போறீங்க......

ரைட், அப்புறம் படத்துக்கு வருவோம். ஜெய் ஒரு விஷயத்தை தப்பா சொல்லிட்டார் அதாவது ஒரு வாரம் படம் ஓடும்னு சொன்னார் ஆனா எனக்கு என்னவோ இன்னைக்கு நைட் ஷோ வரைக்கும் ஓடினாலே பெருசு என்று தோன்றுகிறது.படம் அவ்வளவு மொக்கையான்னு கேக்காதிங்க ஏன்னா?நான் படத்தை முழுசா பார்க்கவில்லை, மரண மொக்கைனு கூட சொல்லலாம்.மழை டைம் மற்றும் மொக்கை படத்துக்கு மட்டும் புல் ஏ.சி போடுறானுங்க அதான் இன்டெர்வல் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் பார்த்தேன்... முடியலை.....

நியாயமா நான் படம் ஆரம்பிச்சு அரை மணி நேரத்தில் வெளியே வந்துருக்க வேண்டும் ஆனால் தியேட்டரில் வந்த கமெண்ட்ஸ் படத்தை விட காமெடியாக இருந்ததால் சிரித்து ரசித்தேன்.நான் முதல் பாடலுக்கு தான் என்ட்ரி கொடுத்தேன் அதனால் பிரேம்ஜி தான் பின்னணி இசை அமைத்தாரா என்று தெரியவில்லை ஒரு வேலை பிரேம்ஜிதான் பின்னணி இசை என்றால் "ரொம்ப கஷ்டம்".

இப்போ தியேட்டரில் நடந்த சுவாரிசியமான விஷயங்கள்.

தியேட்டர் நொறுக்ஸ்:

படத்தில் பெரிய மைனஸ் குழந்தைதனமான வசனம்

# விஜயலட்சுமி அழகாய் வர்ணிக்க ஜெய் கூறும் ஒரு வசனத்துக்குரசிகர்கள் கொந்தளித்து போய் விட்டார்கள்...

" அவளுக்குக்காக ஆயிரம் தாஜ்மகால கட்டலாம் மச்சி" என்பார்.

#விஜயலட்சுமி அவர்கள் அடிக்கடி" ஐ கப்பல் " "ஐ ரெயின்போ"என்று கூறும் வசனங்களில் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.

# படம் ஆரம்பித்து இருபது நிமிடம் டி.வி. சீரியல் மாதிரிசென்றது, பின்னாடி இருந்து ஒருத்தர்"யோ சீக்கரம் படத்தை போடுங்கயா".என்றார்.
அனைவரும்குபீரென்று சிரித்தனர்.இன்னொருவர் சிறிது நேரம் கழித்து"எப்பா சேனல் மாத்துங்கப்பா" என்றார்.

# இதில் ஜெய் சில கருத்துக்களை அள்ளி தெளிக்கிறார்,அது தான் செம காமெடி.

# படத்தின் ஒளிப்பதிவு தரத்தை பார்த்த ஒரு ரசிகர் அவர்நண்பரிடம்"டேய் ஷகீலா நடிச்ச மலையாள படம் மாதிரி படம் தெரியுது".

#படத்தில் பெரிய காமெடி இந்த சீன்தாங்க....
விஜயலட்சுமி சின்ன பசங்க கூட கண்ணாமூச்சி விளையாடும்போது பார்க்கில் உள்ள இந்த பெஞ்ச்க்கு கீழ் தான் ஒளிந்துஇருப்பார், அதை பார்க்காத ஜெய் அவரின் கையை மிதித்துவிடுவார் ஒடனே லவ் ஸ்டார்ட்......

# படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து...ஒருவர் டிக்கெட் போட்ட அவரின் நண்பனிடம்" ராமசாமி கொடுத்த காசு ஊ ஊ ஊ,...".இன்னொருவர் " யோவ் என் அம்பது ரூவாய கொடுங்ககிளம்பி போய்டுறேன்" என்று கத்தினார்.

# அனைவரும் கொலைவெறியில் உக்காந்து இருக்க,டாய்லெட் போயிட்டு வந்த நண்பர் அவர் நண்பரிடம்"எந்த முக்கியமான 'சீன்'னும் மிஸ் ஆகலையே" என்று சவுண்ட்டாககேட்டார்,அப்புறம் தியேட்டர் முழுவதும் சிரிப்பு சத்தம் தான்.

# ஒரு வசனம் விஜயலட்சுமி ஜெய்யிடம்"எல்லா லவர்ஸ்க்கும் பிடிச்ச இடம் எது" என்று கேட்பார்பின்னால் நண்பர்கள் "சுடுகாடு, சுடுகாடு" என்று கத்தினார்கள்.


# படத்தில் ஒரு காட்சியில் மழையில் விஜயலட்சுமியை நனையாமல் போய் லைப்ரரியில் விடுவதாக ஒரு கோட்டை வைத்து மறைத்து இருவரும் அண்ணா நகர் பூங்காவில் இருந்து இ.சி.ஆர் ரோட்டுக்கு நடந்தே வருவார்கள் திருப்பியும் அண்ணா நகர் போவார்கள். இதை கண்டு கோபம் அடைந்த பின் சீட் நண்பர்"இவங்க தலைல எல்லாம் இடி விழாத".என்றார்.

# விஜயலட்சுமி சீன் காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டாங்கபோல.... ஆனா யார் பாக்கறது???...

# லொள்ளு ஜீவா பல டைம் மொக்கை போடுகிறார், ஏதோஅந்த பாரில் நடக்கும் காமெடி ஓகே.

# தியேட்டரில் கேட்ட முக்கா வாசி வசனம் இது தான்* மச்சான் முடியுல....* சும்மா இருந்த என்னை கூட்டு வந்து.....* எவன்டா இந்த படத்துக்கு கூப்ட்டது....

# நான் பாதி பார்த்ததுக்கே போஸ்ட் கொஞ்சம் பெருசா போகுதுமீதி படம் பார்த்தா அவ்வளவு தான்....

பரிந்துரை : உங்களுக்கு வேண்டாதவங்க மற்றும் எதிரிகளை தூன்பத்தில்ஆழ்த்த அதே நேரம் அதே இடம் டிக்கெட்டை இலவசமாகவாங்கி கொடுத்து அனுப்புங்கள்.அதுக்கு அப்புறம் உங்க சைட்வரவே மாட்டங்க..... அப்புறம் படத்தை முழுசா பார்த்தவங்ககடைசியில் என்ன ஆச்சுன்னு பின்னூட்டத்தில் போடுங்க...Final Verdict :
அதே அடி அதே (பயங்கர) வலி.

1 comment:

chandru said...

vijay padatha paarthuthaan niraya sahipu thanmai.. mana valimai koodi irukume... kavala padathey nanmba innum valimai kooda.. vettaikaran.. appuram sura.. innum irukilla..