Friday, January 1, 2010

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்

இந்த ஆண்டு இதுவரை 125 நேரடி தமிழ் திரைப்படங்கள்
வெளியாகியுள்ளது.இதில் நான் பார்த்தது வெறும் 44 தமிழ்
படங்கள் மட்டுமே,அதாவது மூன்றில் ஒரு பங்கு.ஆனால்
அந்த 44 படத்தில் பல சூர மொக்கை படங்களை பார்த்துள்ளேன்
என்பது குறிப்பிடத்தக்கது.


மொக்கை படத்தை பற்றி தப்பா எடை போட்டுட கூடாது...
அமெரிக்காவில் ஒரு ஆய்வில் மொக்கை படத்தை பார்ப்பதால்
சகிப்பு தன்மை கண்டமேனிக்கு வளர்வதாக தெரிவித்து உள்ளனர்.


என்னை பொருத்த வரை மொக்கை படம் என்பது பொறுமையை
சோதிப்பதாக அமைய வேண்டும்...இன்றும் பலராலும் மொக்கை
படம் என்று அறியப்பட்டு வரும் குளிர் நூறு,மதுரை சம்பவம்(ஹீரோவை விட்டுடுங்க!!),சிந்தனை செய் போன்ற படங்கள் என்னை பொருத்தவரை நல்ல டைம் பாஸ் படம் ஒரு முறை தாரளமாக பார்க்கலாம் என்பேன்...... இந்த லிஸ்ட் நான் பார்த்த மொக்கை படங்களின் வரிசையே அப்புறம் எங்கப்பா அழகர் மலை,சிவகிரி,மரியாதை, ஆறுமுகம் படம்னு எல்லாம் கேக்க கூடாது நான் அந்த படங்களை பார்க்கவில்லை என்பது தான் உண்மை(நம்புங்க!!).


10. குரு என் ஆளு - ஆளை உடு சாமி!!

நான் இந்த படத்தை ப்ளாக் எழுத வந்த பின்னர் தான் பார்த்தேன்
என்றாலும் இந்த படத்தை பற்றி விமர்சனம் வேற போட
வேண்டுமா என்று எண்ணி விமர்சனம் எழுதுவதை கைவிட்டு
விட்டேன்....விவேக் காமெடி செம மொக்கை.


9.இந்திர விழா: ஆண்டவா...

மொக்கை படமென்று தெரிந்தாலும் நமீதா இருக்கிறார் என்ற ஒரு காரணத்துக்காக தெரியாம தியேட்டருக்குள் போய்ட்டேன்...உள்ளே போன அங்கே விவேக் பெரிய மொக்கை போட்டாரு....

8.குங்கும பூவும் கொஞ்சு புறாவும்: பறந்து போச்சே....

இந்த படத்தில் டைட்டில் மற்றும் பாடல்கள் மட்டும் தான் நன்றாக இருந்தது.....ஹீரோவை கண்டால் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


7.யோகி: போகி புகை...!

அமீரை நாங்கள் இயக்குனராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம்...
படத்தை பற்றி வேறு எதுவும் சொல்ல விருப்பமில்லை...


6.மாசிலாமணி: மொக்கை மணி!!

அருமையான மொக்கை படம்... நகுலுக்கு முக பாவனைகள்
பயங்கரமா வருது.....அவரு சில காட்சிகளில் என்ன பீலிங்க்ஸ்
பண்ராருனே புரிய மாட்டிக்குது...(அதனாலதான் நான் இன்னும்
கந்தகோட்டை படம் பார்க்கவில்லை)


5. வாமணன்: கோமணம் கிளிஞ்சது!!

படத்தில் பெயர் மட்டும் தான் நல்லா இருந்தது...சந்தானம் காமெடி
ஒ.கே....மற்றபடி வாமணன் பற்றி சொல்வதருக்கு ஒன்னும்
இல்லை...

4.நான் அவனில்லை பார்ட்-2 : பார்ட்-3 வருமோ??

இந்த படத்தில் நான் என்ன எதிர்ப்பார்த்துட்டு போனேன்னோ அது
கொஞ்சம் கம்மி...மற்றபடி கதை திரைக்கதையெல்லாம் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் அந்த கடைசி சீன்லா ஜீவன் போப் டிரஸ்இல் வருவது மகா கொடுமைடா சாமி.....

3.மதுரை டூ தேனி : பஸ்க்கு டையரை காணோம்...

வித்தியாசமான முயற்சி என்றாலும் ஹீரோ விஜயகாந்த் அளவுக்கு
பேசியே பிரச்சனையை தீர்ப்பதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே
ஓவர்....படத்தின் கதை ஆரம்பிக்கும் போது நான் தியேட்டரில் இல்லை....(படம் முடியும் போது தான் கதை ஆரம்பித்தது என்று கேள்விப்பட்டேன்).


இரண்டாவது இடத்தை பிடிக்க மூன்று படங்கள் அடித்து கொள்கின்றன...


2.அதே நேரம் அதே இடம் : அதே அடி அதே வலி!!

இந்த படத்தை அலசி அலசி சோர்வு அடைஞ்சாச்சு....கடவுள்கிட்ட
வேண்டி கொள்வது இது ஒன்று தான்...இனிமே அதே நேரம்
அதே இடம் போன்ற படங்களை வெளிவரமால் மக்களை காப்பாற்று..


2.முத்திரை-நல்லா குத்துனாங்கயா!!


எப்படி படம் எடுக்க கூடாது என்று இந்த படத்தை பார்த்தால்
கற்று கொள்ளலாம்...ரொம்ப பெரிய லாஜிக் ஓட்டையை உள்ளடக்கிய
படம் முத்திரை......


2.தோரணை - செம ரோதணை.

விஷாலிடம் இருந்து மொக்கை படத்தை எதிர்பார்த்தேன் ஆனால்
இது மரண மொக்கைடா சாமி...எதோ சந்தானம் இருந்ததால்
தப்பிச்சேன்....

லிஸ்டில் முதல் இடத்தை பிடிக்க மூன்று படங்கள் முந்துகிறது...


1. வில்லு - செம டல்லு

இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லைன்னு
உங்களுக்கே தெரியும்.....

1.கந்தசாமி: போதும்டா சாமி..

படத்தில் சில விஷயங்கள் புதுசாக இருந்தாலும் கதை பழசு என்பதாலும் சொன்ன விதத்தாலும் கந்தசாமி ஈர்க்கவில்லை.ஆனா ஒன்னு மட்டும் உண்மை இனிமே "என் பேரு மீனாகுமாரி" பாட்டில் வரும் முகேஷ் திவாரியின் pole ஆட்டத்தை எந்த நாயகனும் பீட் பண்ண முடியாது.....


1.சர்வம்: நாசம்!!

நான் மிகவும் எதிர்பார்த்த படம்...ஆனால் பயங்கர மொக்கை
திரைக்கதை...கதையும் கூட....ஒளிப்பதிவெல்லாம் குறை
சொல்ல முடியாது....விஷ்ணுவர்தனிடம் இருந்து 2010 இல்
நல்ல சுவாரசியமான படத்தை எதிர்பார்க்கிறேன் ....


என்னப்பா பத்துக்கு மேல லிஸ்ட் இருக்குனு நினைக்கிறிங்களா....அட விடுங்க சார் நானே நிறைய படத்தை பத்தி எழுத மறுந்துட்டேன்...

சிபி : நான் பல மரண மொக்கை படங்களை பார்த்து மக்களை
காப்பாற்றியுள்ளேன் என்று கருதி எனக்கு யாராவது தியாக செம்மல் விருது தருவாங்கன்னு பார்த்தா வீடு திரும்பல் மோகன்குமார் அண்ணே எனக்கு சிறந்த வில்லன் விருது கொடுத்துட்டாரு.... என்ன கொடுமை சார் இது!!
(மொக்கை படத்தை மொக்கைனு தான் சொல்லமுடியும்,
அதே போல் நல்ல படத்தை நான் கிண்டல் அடிப்பதில்லை!)
'

1 comment:

Manoj said...

Ayya... ungalin pattiyal Satyavan Saavitri ku aduthu mighavum unmai vaaindhathu....aanal ennakkul oru raagavn instinct polave oru film instinct irukku... intha list il irukkum padam 1 kooda naa paarkalai...so im great escape... Sam anderson padathai paartha pinbu naanveru endha padamum paarka viruppam illai.... irundhalum ungalin ore mana thairiathai paaratti... ungalukku "Thiru Sam anderson award" ai kodukkiren....