Friday, October 22, 2010

வாடா - ஒலக பட விமர்சனம்!!

அன்பான சுந்தர்.சி ரசிகர்களே வெள்ளிக்கிழமை நீங்க வாடா படம் பார்க்க
போய் இருந்தா பெட்டி வந்திருக்காது....சனிக்கிழமை தான் பெட்டி வந்ததுனு
சொன்னாங்க, என்னது சவபெட்டியா??னு எல்லாம் கேட்க கூடாது.நான்
சொல்லிட்டு இருக்கிறது வாடா படத்தோட பெட்டி பத்தி. நம்ம சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி. அவர்களை பற்றி ஊரில் அவர் இத்தனை படத்தில் நடிச்சு என்னத்த 'கலட்டிடாறுனு கேட்கருவங்களுக்கு என்கிட்ட சில பதில் இருக்கு....
அதாவது இந்த படத்தில் கலெக்டர்ஆ வந்து கண்ணாடியை அடிக்கடி
கலட்டுராறு,,, ஒரு சீன்ல நாயகியோட பான்ட்டை கூட கலட்டுராறுனா
பாருங்க...

அகில கெரக சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பில் இந்த பதிவை வெளியிடுவிதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எப்படியும் படம் டம்மினு உலகத்துக்கே தெரியும் அதை ஏன் அதிக காசு கொடுத்து பார்த்துக்கிட்டுனு அங்கேயே இந்த மகா காவியத்தை பார்த்துட்டேன்.இந்த ஊரே ஏன் உலகமே நீ ஏன்ப்பா வாடா படத்தை பார்க்க துடிக்கிற அப்படின்னு கேட்டாங்க....அதுக்கு ஒரே பதில் நானும் பார்க்கலைனா யாரு இந்த உலகத்துக்கு எடுத்து சொல்றது.... எல்லாம் கெரகம்....

வாடா என்ன கதை??


சரி நாம படத்தோட கதைக்கு வருவோம்....என்னது அப்படி ஒண்ணு இருக்கா??னு நீங்க மெரசல் ஆகாதீங்க...ஆனா இருக்கு படு பயங்கரமான கதை...விஜய் நடிச்ச மதுர படம் பார்த்து இருக்கீங்களா?? அந்த மாதிரி இருக்கும்...என்ன இந்த படத்துல கொஞ்சம் நேரம் ரிஷிகேஷ் ஊரை காட்டுறாங்க....முதல் காட்சியில் இருந்து அப்படியே அனல் பறக்குது காரணம் தியேட்டர்ல சுத்தமா காத்து வரல என்பது மட்டுமே என்று இங்கே சொல்லி கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்.


விவேக் பத்தி என்னத்த சொல்றது போங்க.சுருளிராஜன் கெட்டப் போட்டுட்டு
காமெடி அப்படின்னு ஏதோ பண்ணிட்டு இருந்தார். ஒரு காட்சியில் மட்டுமே
சிரிப்பு வந்தது. நல்ல வேளை இந்த கொடுமையெல்லாம் பார்க்க சுருளிராஜன்
இல்ல. சுருளிராஜனோட கஞ்சன் காமெடி எப்போதுமே என் ஆள் டைம் பேவரைட்.இமான் பத்தி ஏற்கனவே சொன்னது தான் அவர் பாட்டே ரீமிக்ஸ் மாதிரி தான் இருக்கும் இதுல தனியா ரீமிக்ஸ்னு சொல்லி ஆட்களை கொல்லுகிறார்.


ஷெர்லின் நம்ம மசாலா பட நாயகியாக வந்து மூஞ்சில ரியாக்சன் தவிர வேற எல்லாத்தையும் நல்லாவே காட்டுறாங்க என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் அந்த சீரியல் நடிகர் அதாங்க நேபாளி படத்தில் கூட போலீஸ்க்காரர வருவாரே அவர் வந்து அப்போ அப்போ சாவல் விட்டுட்டு போறார்.

FACE TO FACE


படத்தோட உயிர்நாடி காட்சியே அந்த பைக் மேல நின்னு சுந்தர்.சி சுட் பண்றது தான் ஏன்னா அந்த காட்சி தான் இன்டெர்வல் ப்ளாக்...பல பேரு தியேட்டரை விட்டு தப்பிச்சு உயிர் பிழைக்க அந்த காட்சி ரொம்ப உதவிச்சு. ஆனா பாருங்க அப்பமும் நான் போகலை....நம்ம தல பரமசிவன் படத்தில பைக்ல கிழே நின்னு சுட்டார் ஆனா எங்க சூப்பர் பாக்கு தல பைக் மேல நின்னு சுட்டு அரிசி கடத்துரவனை பிடிக்கிறேன்னு சொல்லி மூணு லாரியோட டீஸல் டாங்கை சுட்டு அந்த அரிசியை யாருக்கும்
கிடைக்காத படி செய்ஞ்சுடுறார்.


கலெக்டர்னு சொன்னவுடனே அப்படியே பக்கவா முடி வெட்டிட்டு இருப்பார்னு மட்டும் நீங்க நினைக்காதீங்க...ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான் மாட்டி இருப்பார் என்ன தலையில சூப்பர் பாக்கு பிளீச் மட்டும் இருக்காது அவ்வளவுதான். படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச வசன காட்சி ஒன்னு இருக்கு... கலெக்டர் நண்பரிடம் போய் நாயகி...


நாயகி : எங்கையா உங்க கலெக்டர்...நான் அவர் வருவார்னு எவளோ நேரம்
வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...


நண்பன் : நீங்க எதுக்கு வெயிட் பண்றீங்க...நீங்க யாரு??


நாயகி : ஐட்டம்...


நண்பன் : ஹலோ என்ன சொல்றீங்க...


நாயகி : இல்ல நான் கலெக்டர்ஆ லவ் பண்றேன்னு சொன்னேன்...


இந்த மாதிரி வசனமெல்லாம் வாடா உலக படத்தில் மட்டுமே வருகிறது...
இதற்க்காகவே நீங்க இந்த படத்துக்கு போகணும்.அது மட்டுமில்ல வாடா
படம் பார்ப்பதனால் மனவலிமை, பொறுமை , தைரியம் என எல்லாமே
கண்டமேனிக்கு வளரும். வாடா பட பெயருக்கு வரிவிலக்கு கொடுத்தாங்களா
இல்லையானு நமக்கு தெரியாது...ஆனா வாடா படம் பார்க்க போறவங்களுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ஏதோ ஒரு அமௌன்ட் கொடுத்தால் தேவலை!!


வாடா - காஞ்சி போன -------

No comments: