Friday, October 22, 2010

எந்திரன் விமர்சனம்

எந்திரன் படத்துக்கு ரெண்டாவது தடவை டிக்கெட் கிடைச்சும் நான் போகல...காரணம் ரெண்டாவது பாதி. சுவாரிசியம் இல்லாத ரெண்டாவது பாதியை ஷங்கரிடம் இருந்து நான் எதிர்ப்பார்க்கல...

ஆனா ரஜினி இந்த மாதிரி science fiction படத்தில் எந்த ஒரு ஹீரோ பில்ட்
அப் இல்லாமல் நடித்தது பெரிய விஷயம். ஐஸ்வர்யா ராய் அந்த சாரியில்
கொள்ளை அழகு...ரெண்டாவது தடவை பார்க்க வந்த என் நண்பன்
அந்த காட்சியை மட்டும் விழித்து கொண்டு பார்த்தான். அப்புறம் வில்லன்
டோனி, என்ன ஒரு பில்ட் அப் இவருக்கு....ஆனா புஸ் ஆக்கிட்டாங்க...
படத்தோட நீளமும் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!

எந்திரனாக வரும் ரஜினியின் வசனங்கள் நச்... மே மே...கத்துவாரே
உண்மையிலே செம...சந்தானத்தை மொக்கை பண்ணிட்டாங்க..
கடைசி கிராபிக்ஸ் காட்சிகள் பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை...

அப்புறம் இன்னொரு விஷயம் கவனிச்சிங்களா....மொதல்ல சன் டி.வி.யில்
ட்ரைலர் போடும் போது சூப்பர் ஸ்டார் ரஜினி பேர் தான் முதல்ல வரும்...
ஆனா இப்போ ரெண்டு நாளா சன் பிக்சர்ஸ் கலாநிதி பேர் தான் முதலில்
வருகிறது.... என்னனு தெரியல....??

No comments: