Friday, October 22, 2010

Khaleja Movie review

எந்திரன் படம் வந்தாலும் வந்தது வேற எந்த தமிழ் படமும் ரீலீஸ் ஆகல...
சரி இன்னொரு படத்தோட விளம்பரம் பார்த்தேன்..அது உலக
படமும் கூட தான்...


நம்ம மகேஷ் பாபு நடிச்ச கலீஜா படத்தை பார்க்க போய்ட்டேன்...படம் சுமார், இல்லை மொக்கைனும் தெரிஞ்சு தான் போனேன். ஏன் விஜய் இப்படி கெட்டு போனார்னு மகேஷ் பாபு படத்தை பார்த்தவுடன் தான் தெரிஞ்சுது. என்னா பில்ட் அப்... இருந்தாலும் ஓகே ஓரளவுக்கு டைம் பாஸ் ஆச்சு...ஆனா படத்தோட நீளம் ரொம்ப ஜாஸ்தி...வர வர படத்தோட நீளம் என்னை ரொம்ப யோசிக்க வைக்குது...

மகேஷ் பாபு அப்போ அப்போ ஒரு கிழிஞ்ச துணியை கழுத்தை சுத்திக்கிட்டு
வர்றார்...இந்த மாதிரி ஸ்டைலை எங்க சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி அவர்கள்
குரு சிஷ்யன் படத்திலே செய்ஞ்சிட்டார். லாஜிக் அப்படின்னு நீங்க பார்த்தீங்கனா சுத்தமா இல்லைன்னு தான் சொல்லணும்..

சரி கலீஜா அப்போ கலீஜ்ஆ??னு நீங்க கேட்டா அப்படின்னு சொல்ல முடியாது... காரணம் அனுஷ்கா... நல்லா வெளிப்படுத்தி இருக்காங்க திறமையை தான் சொல்றேன். பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லனா வர்றார்... படம் எப்போ முடியும் எப்போ கிளம்பலாம்னு காத்துகிட்டு இருந்தேன்... ஏற்கனவே அனுஷ்கா நடித்த வேதம் படத்தை பார்த்து இருக்கிறேன்... இப்போது சிம்பு அதை வானமாக நடித்து கொண்டிருக்கிறார். எங்க ஏரியா தியேட்டரில் வேதம் தெலுங்கு படத்தை போட்டிருந்தார்கள்...

நான் ரெண்டாவது தடவை இந்த படத்தை பார்க்க முடியாதது ரொம்ப வருத்தமா இருந்தது....ஏரியா புல்லா தெரிஞ்சவங்க தான் இருக்காங்க...இந்த நாடு என்னை பத்தி என்ன நினைக்கும்...என்க்கிட்ட சொல்லாம வீட்டு பக்கத்தில் இருக்கிற கல்லூரி மாணவர் ஒருத்தர் தொப்பி எல்லாம் போட்டு போய் படத்துக்கு போயிட்டு வந்தார். பயங்கர கூட்டமாம்....முக்கா வாசி பேர் சீன் இல்லாமல் பாதியிலே போய்ட்டாங்களாம்... ஆனா அவன் ரோவில் பக்கத்தில் உட்கார்ந்த இருந்த ஒரு பொக்கை தாத்தா மட்டும் கடைசி வரைக்கும் பார்த்தாராம்...முதல்ல இந்த மாதிரி ஒரு நல்ல படத்துக்கு
இப்படி விளம்பரம் போடுறதை தடை செய்யணும்.... அப்புறம் எத்தனை பேரு பிட் போடுவாங்கன்னு ஆசையா வந்து இருப்பாங்க...ச்சே.....

பிட் படம் பார்க்குறவங்க மனுசு பிட் படம் பார்க்குரவனுக்கு தான்
புரியும்னு சொல்வாங்க......உங்களுக்கும் புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்....

No comments: