Sunday, January 30, 2011

THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்


படத்தோட டைட்டில் போட்டதும் சப் டைட்டிலா “ நீதியைக்காக்க சட்டத்தையே புறந்தள்ளியவன் கதை”ன்னு போட்டதும் ஏதோ எஸ் ஏ சந்திரசேகர் டைரக்‌ஷன்ல நடிச்ச கேப்டன் படத்துக்குத்தான் வந்துட்டமா?ன்னு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்..அப்புறம் படம் ஓட ஆரம்பிச்சதும்தான் அப்பாடான்னு ஒரு ஆசுவாசம்..( எவ்வளவு பழைய வார்த்தை?)


ஒரு பிரபல பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரது வாரிசு பகலில் எடிட்டராகவும் இரவில் அநியாயங்களை எதிர்க்கும் ராபின் ஹூட்டாகவும் டபுள் கேம் ஆடறார்.அவருக்கு உதவியா டெக்னிக்கல்ல கில்லாடியான அப்பாவோட பி ஏ இருக்கார்.இந்த சாதாரண கதையை முடிஞ்ச வரை காமெடியா ,ஜாலியா பொழுது போற மாதிரி சொல்லி இருக்காரு டைரக்டரு..


சேத் ரோகன் -ஜே சவ் 2 பேரும் இணைஞ்சு பண்ற காமெடி கூத்துக்கள் கலகல கலக்கல்.பொதுவா 2 ஹீரோ சப்ஜெக்ட்னாலே ஹாலிவுட்ல ஒரு பாணி வெச்சுக்கறாங்க..ஒரு ஆள் லொட லொடன்னு பேசிட்டே இருப்பாரு..இன்னொரு ஆள் ஆக்‌ஷன்ல அதகளம் பண்ணுவாரு. அதே ஃபார்முலா தான் இதுலயும்.



படத்துல ஹீரோவுக்கு பி ஏ வா வர்றவரு ஆரம்பத்துல எந்திரன் மாதிரி காஃபி போடற ஸ்டைல் சூப்பர்.அவர் ஜேம்ஸ்பாண்ட் சயிண்டிஸ்ட் கணக்கா பல பல நவீன சாதனங்களை கண்டு பிடிக்கறதும்,அதிரடி ஆக்‌ஷன்ல இறங்கறதும் காதுல பூ சுத்தற ரகம்னாலும் ரசிக்க வைக்குது.படம் முதல் ஒரு மணி நேரம் ஜாலியா போகுதுன்னா அதுக்கு காரணமே காமெடியா எழுதப்பட்ட வசனங்களும், அதுக்குத்தகுந்த சீன்களும்தான்.


கேமரூன் டயஸ் படத்தின் கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என்றாலும் சும்மா கிளுகிளுப்புக்காகவும் ( சீன் எல்லாம் இல்ல) கிளாமருக்காகவும் வந்துட்டுப்போறாரு. எப்போ அவரு எனக்கு 36 வயசு ஆகுதுன்னு ஹீரோ கிட்டே சொல்றாரோ அப்பவே பார்வையாளனுக்கு கிக் போயிடுது.. ( பார்வையாளன்னு நான் சொன்னது என்னைத்தான் ஹி ஹி ஹி )



அந்த 36 வயசு ஆண்ட்டிக்கு 22 வயசு ஹீரோக்கள் 2 பேரும் அடித்துக்கொள்வதும், அலைவதும் ஓவர் என்றாலும் ரசிக்க முடிகிறது. ( நாம எதைத்தான் ரசிக்கலை? ) வில்லனா வர்றவர் அசல் தெலுங்கு படத்துல வர்ற வில்லன் மாதிரியே பன்ச் டயலாக் பேசறார்.


சாம்ப்பிளுக்கு ஒண்ணு


என்னை ரத்த நிற டிரஸ்ல பார்க்கறவங்க ரத்தம் உறைஞ்சு போய் நின்னுடுவாங்க.. ( என்னே ஒரு கேவலமான டயலாக்..?)



படத்தில் கலக்கிய காமெடி வசனங்கள்


1. வில்லன் - என் வாழ்க்கையின் லட்சியம்,கொள்கை,ஆசை எல்லாமே ஒண்ணுதான்.. அது லாஸ் ஏஞ்சல்லியே நான்தான் பெஸ்ட் ரவுடின்னுபேர் வாங்கனும்.. ( ஆஹா .. இதுவல்லவோ லட்சியம்..?)


2. யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்,?


என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்.


3. ------- இந்த நகரம் உனக்கு தெரியுமா?


ம்.. எனக்கு ஜப்பான்னா ரொம்ப பிடிக்கும்.


அது சைனால இருக்கு.. சும்மா கதை விடாதே..


4. உன் ஹார்ட் பீட் ஃபாஸ்ட் ஆகறப்ப உன்னை சுத்தி இருக்கறது எல்லாமே ஸ்லோ மோஷன் ஆகிடுதே.. ( நல்ல கற்பனை)


5. டேய்.. உன் கிட்டே ஒண்ணு கேக்கனும்.. அதுக்கு முன்னால உலக அழகியை விட பிரமாதமா ஒரு ஃபிகர் இருக்கே ..உன் முன்னால.... பார்ட்டி யாரு.? எனக்கு தெரிஞ்சாகனும்.




6. நாம இப்போ எங்கே போறோம்?


நீதானே வண்டி ஓட்டறே..?உனக்கே தெரியலைன்னா எப்படி?


7. ஹாய்.. அபின் பொட்டலம் வேணுமா..?


உன்னைப்பொட்டலம் கட்ட வந்திருக்கேன்..


8. என் பேரு செக்னோஸ்கி..


பேர்ல கூட விஸ்கி வெச்சிருக்கியே..?


9. அடடா.. பஞ்ச் டயலாக் பேசறதுக்குள்ள செத்துட்டானே..


10. நியூஸ் பேப்பர்வளர்ச்சிக்காக இதை எல்லாம் பண்ற மாதிரி எனக்கு தெரியல..அந்தப்பெண்ணை இம்ப்ரெஸ் பண்ண பண்றே..




11. எனக்கு மட்டும் எதுக்ல்கு பாதுகாப்புக்கு கன் (GUN) குடுத்திருக்கே..?


ஏன்னா டேலண்ட்டா ஃபைட் போட உனக்கு தெரியாது..


12. பாஸ்.. உங்களை மீட் பண்ண நிறைய பேர் வெயிட்டிங்க்.


வெயிட் பண்ணட்டும்.. அதானே அவங்க வேலை..?


13. அந்தப்பொண்ணைப்பார்த்தா உனக்கு என்ன தோணுது,,?


என்னை இம்ப்ரெஸ் பண்ண ஓவரா சீன் போடற மாதிரி தோணுது..


இந்த மாதிரி ஜாலியான படங்கள் தொடர்ந்து வருவதால்தான் தமிழ்ப்படங்கள் போதிய வரவேற்பை பெறுவதில்லை.சும்மா குண்டுச்சட்டியில் குதைரை ஓட்டாமல் இப்படி வெரைட்டையா காமெடி படம் கொடுத்தால் நம்மாளுங்களும் ஜெயிக்கலாம்.


கோயம்புத்தூர் கனகதாரா தியேட்டர்ல படம் பார்த்தேன்.செம கூட்டம்.85 ரூபா டிக்கெட் + 20 ரூபா (3D-கண்ணாடிக்கு) ஹூம்..105 ரூபா போச்சு..

பதினாறு - டீன் ஏஜ் வில்லேஜ் லவ் - சினிமா விமர்சனம்


ஆனந்த விகடனில் தொடராக வந்த சொர்ணமுகி படத்தோட ஒன்லைன் தான் கதை..(கே எஸ் அதியமான் டைரக்‌ஷனில் ஆர் பார்த்திபன் நடித்த படம்).அதாவது காதலி ஒரு சிக்கலான கட்டத்தில் ஒரு கால அவகாசம் கொடுத்து காதலனை வரச்சொல்ல அவனால் வர முடியாமல் போவதால் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் திரைக்கதை.

படத்தோட மெயின் கதையை விட சில சமயங்களில் கிளைக்கதை எனப்படும் ஃபிளாஷ்பேக் கதை ஆழமாகவும்,மனதைத்தைப்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.. அது படத்தின் மெயின் கதையை டாமினேட் பண்ணும்போது ஏற்படும் சிக்கல் இந்தப்படத்துக்கும் ஏற்படுகிறது.

அழகி படத்தில் வருவது போல் காட்டப்படும் அந்த கிராமத்துக்காதல் கதையில் வரும் ஹீரோயின் நல்ல நடிப்புத்திறமையும்,சட் சட் என மாறும் முக பாவமும் பிளஸ் என்றால் அவரது இளமை கூடுதல் போனஸ்.(இமேஜில் தேடிப்பார்த்தால் அவரது ஃபோட்டோ கூகுளில் கிடைக்கல)

டென்த் படிக்கும் மாணவர்களின் காதல் கதை என்பதால் இது அடலசண்ட் லவ்வை உற்சாகபடுத்துவதுபோல் அல்லாமல் டீன் ஏஜ் காதல் செல்லாது ..ஆகாது என்பது போல் நீதி உணர்த்திய இயக்குநர் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் திரைக்கதையில் ஜால வித்தை காட்ட தவறி விட்டார்.




மெயின் கதையின் ஹீரோயின் இவர்தான். பார்ட்டி படு சுமார்தான். ஆனால் இவரது அம்மாவாக வருபவர் செம கலர் + ஷைனிங்க். ( அது என்னமோ தெரியல..ஹீரோயின் தங்கையா வர்றவரோ, தோழியா வர்றவரோ நம்ம கண்ணுக்கு கலக்கலா தெரியறாங்க..( சரி டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம்..)


படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வர்ற டூயட்ல ஹீரோயின் பல கிஃப்ட்களை ஹீரோவுக்கு கொடுக்க ஹீரோ ஹீரோயினுக்கு ஒரே ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸ் குடுக்க அதை ஓப்பன் பண்ணி பார்த்தால் அந்த நகைப்பெட்டி காலி,, செம நக்கலோடு டூயட் தொடர்கிறது..

காட்டு செடிக்கு காவல் கிடைச்சிடுச்சு என தொடங்கும் பாடல் ஃபிளாஷ்பேக்கில் வரும் காதலை அழகியலோடு அணுகும் அற்புத தொடக்கம்.இயக்குநர் கவிநயம் மிக்கவர் என்பதற்கு அந்த ஒரே ஒரு பாடலே போதும்.

அந்தப்பாட்டில் ஆசிரியர் மாணவிக்கு தண்டனையாக முட்டி போட வைப்பது பழசு என்றாலும் அவள் அரிசி பரப்பிய தரையில் முட்டி போடுவது புதிய கிராமக்கலாச்சாரப்பதிவு.




அட டென்த் படிக்கும் பெண்ணாக வருபவர் சிறுமியாக வரும் சீனிலும் சரி, வயதுக்கு வந்த பருவக்குமரியாக வரும்போதும் சரி அவர் காண்பிக்கும் பாடி லேங்குவேஜ் மாற்றம் அபாரம்.. (இப்போ இருக்கற முன்னணி ஹீரோயின்கள் கவனிக்க.)


களவாணி படத்தில் எல் சி 311 கூட்டு என்பதை மகேஷ் என மாற்றுவது மாதிரி இதிலும் 16 என்ற எண்ணை I G கற்பிதம் செய்வது அழகு.. ( ஐ - இளவரசி ஜி -கோபி

ஆனால் இடைவேளைக்குப்பிறகு தனது காதலில் நாயகி உறுதியாக இருப்பது போல் காட்ட நினைத்தவர் வீம்பு பிடித்த பெண்ணாக காட்டியது திரைக்கதை கோளாறா? கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட பிழையா?

பொதுவாக எல்லாரையும் நல்லவராக காட்ட நினைக்கும் இயக்குநரின் நல்லஎண்ணம் புரிகிறது. ஆனால் முறை மாமனை, நல்லவனாக காட்டியதால் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டு இந்த காதல் ஜோடி சேர்ந்துதான் ஆக வேண்டுமா? என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது படத்தின் வெற்றிக்கு மாபெரும் மைனஸ்.

படத்தின் வசனகர்த்தா பட்டையை கிளப்பிய இடங்கள்


1. அவசர அவசரமா வாழ்ந்துட்டு சீக்கிரமா சாகறதுக்காகத்தான் மனுஷன் படைக்கப்படுகிறானா?

2. ஹீரோயின் - ஹலோ...

ஹீரோ - எஸ் .. கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்...

ஹீரோயின் - விளையாடாதீங்க.. நான் தான்.

3. என் ஃபியூச்சரை டிசைடு பண்ண பேரண்ட்ஸா உங்களுக்கு எப்படி ரைட்ஸ் இருக்கோ அதே மாதிரி எனக்கும் ரைட்ஸ் இருக்கு.

4. டே.. மச்சான்.. இந்து காலேஜ்ல டி சி வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டா..

இப்போ என்னடா பண்றது?

நீயும் டி சி வாங்கிட்டு போயிடு.. அதுதான் காதலுக்கு மரியாதை.


5. பீச்ல அலை வந்து மோதுதே அது மாதிரி தான் காதலும்..

டேய். அவன் இதுவரைக்கும் பீச்சுக்கே போனதில்லையா? இப்படி விளக்கறே.. ( நையாண்டி டூ டி ஆர்?)

6. அவங்க ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க...

எப்படி சொல்றே..?

கார் வெச்சிருக்காங்களே...?

7. அடப்பாவி.. இந்த ஆண்ட்டி யார்டா? எப்போ கரெக்ட் பண்ணுனே.?எங்க கிட்டே சொல்லவே இல்ல..?

டேய்.. கொல்லாதீங்கடா..இது என் ஆளோட அம்மாடா..

ஓ சாரி .. நிஜமான ஆண்ட்டியா?

8. எல்லாமே உன்னாலதான்னு நான் சொல்ற மாதிரி என் கிட்டே நிறைய விஷயங்கள் இருக்கு.. ஆனா என்னாலதான்னு நீ சொல்ற மாதிரி உன் கிட்டே எதுவுமே இல்லையா?


9. என்னை உனக்கு பிடிக்கலைன்னு தெரியும்.. இருந்தாலும் இப்படி என் பைக் பின்னால நீ உக்காந்து வர்றது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

10. டேய், சொந்த மாமன் மகளை பைக்ல கூட்டிட்டு போறது பெரிய விஷயமாடா..இந்த அலட்டு அலட்டறியே..?நாங்க எல்லாம் சினிமாக்கே கூட்டிட்டு போயிருக்கோம்..

எது அந்த 5 வயசு பொண்ணைத்தானே...

11. என்னடா..ஃபோட்டோ எடுக்கறப்ப யூனிஃபார்ம் போட்டுட்டு வந்திருக்கே..?வேற டிரஸ் போட்டுட்டு வா போ..

என் கிட்டே இருக்கறதே இந்த ஒரு டிரஸ்தான்,அதுவும் நீ எடுத்துக்குடுத்ததுதான்.

12. மாலைக்கும் ,கழுத்துக்கும் என் கழுத்து நின்னுச்சுன்னா அது உனக்கு மட்டும்தான்.

13. ஊரே கூடி தேர் இழுத்தாலும் தேர் போய் சேரும் இடம் கோயில்தான்..என் கோயில் என் ஆள் கோபிதான்.

14. காதல்ல தோத்துப்போன யாரோ ஒருத்தரோட கதையைப்படிச்சாஎங்க மனசு மாறிடுமா?

15. காதலிக்காத ஒரு ஆளைக்காட்டுங்க.. நான் காதலிக்கறதை விட்டுடறேன்னு சொல்றியே...அப்படிக்காதலிச்சு கல்யாணம் பண்ணுனவங்க சந்தோசமா இருக்கறதைக்காட்டு...பார்ப்போம்.. விரல் விட்டு எண்ணிடலாம்.

16. மரணம்கறது ஒரு சம்பவம்..ஆனா என்னைப்பொறுத்தவரை நம்ம நினைவுகள்ல இருந்து நம்ம மனசுக்கு பிடிச்சமானவங்க எப்போ போறாங்களோ (பிரியறாங்களோ) அதுதான் மரணம்.

17 நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..

தமிழ்ப்படம் படத்துல ஹீரோவா நடிச்ச ஷிவா இந்தப்படத்துல சீரியஸ் ஹீரோவா நடிக்க வேண்டிய கட்டாயம். ஆனா அவர் சும்மா கெஸ்ட்
ரோல் மாதிரிதான்.மதுஷாலினிதான் ஹீரோயின்.அவங்க நடிப்பும் சுமார்தான்.

கிளைக்கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரின் நடிப்பும் டாப்.ஆனால் என் வருத்தம் எல்லாம் ஒரு சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படத்தை இயக்குநர் கவனக்குறைவால் சாதாரண லவ் சப்ஜெக்ட் ஆக்கி விட்டார் என்பதுதான்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

எத்தனை நாள் ஓடும்? ஏ செண்ட்டர்களில் படம் ரிலீஸ் ஆன மாதிரியே தெரியல.. 25 நாள் ஓடலாம். காதலர்கள் பார்க்கலாம்.