Thursday, January 6, 2011

2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...!!

போன வருஷம் சொன்னா மாதிரி தான் மொக்கை படம் பார்ப்பதால் பொறுமையும்,சகிப்பு தன்மையும் கண்டிப்பாக கண்டமேனிக்கு வளரும் அதனால் எல்லாரும் மொக்கை படம் பார்க்கணும். ஆனா இப்ப சில மாசமா என்னால மொக்கை படத்துக்கு போக முடியல. மாஸ்கோவின் காவேரி, துரோகி, வம்சம், ரத்த சரித்தரம்னு எந்த படத்துக்கும் போக முடியல....அதனால இது எல்லாம் லிஸ்ட்இல் வராது...


இன்னொரு முக்கியமான விசயம் இது நான் பார்த்த படங்களில் எனக்கு மொக்கையாக ப்பட்டது மட்டுமே வரிசை படுத்தி இருக்கிறேன். சில படங்கள் உங்களுக்கு பிடித்து இருக்கலாம் அதனால கோச்சிக்காதீங்க...!!என்னுடன் இத்தனை மொக்கை படங்களை மனம் தளராமல் பார்த்த என் ஆருயிர் நண்பன் #RDK#


********************************

10. தில்லாலங்கடி...(உட்டாலக்கடி)
கிக் படத்தோட ரீமேக்னு சொன்னாங்க....ஆனா படத்துல தான் கிக்கே இல்லை...வடிவேல் காமெடி ஓகே...படம் ரொம்ப நீளம்...பாட்டு மொக்கை.

Full Review :

எப்படியா, இவ்ளோ பெரிய கூட்டத்தை மெய்ச்சி படம் எடுக்குறாங்கன்னு இயக்குனர் ராஜா மேல் எனக்கு பொறாமை உண்டு. படத்துக்கு மிக பெரிய ப்ளஸ் ஸ்டார் கேஸ்ட் தான். அப்புறம் என்ன.... கிக் திரைக்கதை தான்.தியேட்டர் முழுவதுமே கல்லூரி பசங்க தான்...அது என்னமோ தெரியல சன் டி.வி படம்னாலே கூட்டம் வந்திருது. கிக் படத்தை நான் தெலுங்கில் பார்க்கலைங்க...ஆனா இலியானா வர்ற சீன் மற்றும் பாட்டை எல்லாம் பார்த்து இருக்கேங்க... அந்த முதல் சீன்ல இலியானாவா தமன்னாவானு போட்டி வச்சா இலியானாக்கு தான் முதல் இடம்...ஆனா தமன்னாவை பார்த்தும் பெருமூச்சு விட்டது தியேட்டர் கூட்டம்.

ரவி...இளம் புயலாம்... ஏன் இப்படி அடைமொழி வச்சிக்கிட்டு இருக்கார்னு தெரியில. ரீமேக் நாயகன்னு கூட வைக்கலாம் காரணம் சில பல காட்சிகளில் டான்ஸ்களில் ரவி தேஜாவை பார்த்த மாதிரி தான் இருந்தது. ரவி என்ன கேரக்டர்னு தமன்னாவையும் குழப்பி
நம்மையும் குழம்ப வைக்கிறார்.


தமன்னா இந்த படத்தில் தாராள கொள்கையை கடைப்பிடித்திருக்கிறார்.. வழக்கமா தமிழ் தெலுங்கு கன்னட படங்களில் வரும் கதாநாயகி வேடம் தான். தன் வேலையை சரியாக செய்து இருக்கிறார். கடைசியில் காணாமலும் போய் விடுகிறார்.


வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்...தூக்கில் தொங்கி தன் மகன் ஊஞ்சல் ஆடும் போதும், தமன்னாவுடன் அயன் அன்பே அன்பே பாட்டிலும், போலீஸ் ஆக வரும் மன்சூர் அலிகான் பாம்ப் சீனும் காமெடி சரவெடி. சந்தானம் பற்றி சொல்லவே வேணாம். இடைவெளிக்கு அப்புறம் வந்தாலும் அவர் வரும் சீன் எல்லாமே காமெடி அதகளம்
தான். ஜான் விஜய், மயில் சாமி கூட்டணியும் ஜோர்..!!

ரவியின் அப்பாவாக பிரபு... இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா என்று கேட்கும் அளவுக்கு பையனுடன் சேர்ந்து கூத்து அடிக்கிறார்...பிரபுவும் ரவியும் போலீஸ் ஸ்டேஷன்இல் அடிக்கும் கூத்து நல்லரகளை.அம்மாவாக சுஹாசினி...சும்மா வந்து போறாங்க... அப்புறம் இன்னொருத்தர் ஷாம், பெரிய கேரக்டர் ஆ ஊனு சொன்னாங்க...
இதை தான் நம்ம சரண்ராஜ் ஜென்டில்மேன் படத்திலே செய்தாலும் ஷாம் செய்வது ஏதோ ஓகே தான்....!!

கேம் ஸ்டார்ட்ஸ் நௌ !!

GAME STARTS NOW இந்த வாக்கியத்தை படத்தில் இடைவெளிக்கு அப்புறம் எல்லாரும் பயன்ப்படுத்துவாங்க....அதையே நாமும் யூஸ் பண்ணுவோம்....


படத்தில் எனக்கு பிடிக்காத விஷயம் என்னன்னா....படத்தோட ஓடுற நேரம்..மூணு மணி நேரம் படமெல்லாம் ரொம்ப ஓவர் சாமி... நடுவுல நிறைய மொக்கை சீன் வேற வருது....
அதுவும் இண்டர்வல் டைமில் ரவி மாஸ்க் போட்டு கொண்டு அசால்ட் ஆறுமுகம் ரேஞ்சில் கொள்ளை அடிப்பது எல்லாம் ரொம்பவே ஓவர்...!!


இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... நான் அதிமேதாவி, என்னை யாரும் ஏமாத்த முடியாது, பூ சுத்த முடியாது அப்படின்னு நினைக்கிறவங்க இந்த படத்தை தவிர்ப்பது நலம். ஏன்னா காதில் கூடை கூடையாக பூ, காய் , மரம் என்று சுற்றுவார்கள்.ஆனா இதில் வரும் அந்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் நாம் காலம் காலமாக தமிழ் சினிமாவில் பார்த்து வரும் ராபின்ஹூட் படங்களை தான் நினைவுப்படுத்தி சலிப்பையும் தருகிறது.


மற்றபடி ஒரு பொழுதுபோக்கு, டைம் பாஸ் படம் தான் இந்த தில்லாலங்கடி. சில பல காட்சிகள் போர் அடிக்கிறது. முக்கியமா படத்திற்கு யுவனின் பாடல்கள் பெரும் பின்னடைவு. பாட்டு வந்தாலே கடுப்பா இருக்கு. இந்த படத்தில் ரவிக்கு எதை பண்ணினாலும் கிக் வேணும் என்பார்... நமக்கும் கிக் வேணும்னா ஒரு ரவுண்ட் மட்டும் அடிக்கலாம். சும்மா ஒரு வாட்டி பார்க்கலாம்...அடுத்த ரவுண்ட் அடிச்சா மட்டை தான்.....!!தில்லாலங்கடி - கிக் கொஞ்சம் கம்மி தான்!!


9.கோவா...(கோ கோ அவே)
முதல்ல நல்ல தான் போச்சு...போக போக பிரேம்ஜி பண்ற காமெடி எல்லாம் எரிச்சல் ஆகி போச்சி... தீடிர்னு கப்பல் காட்டறாங்க ..ஸ்னேஹா வர்றாங்க. அப்படியே போச்சி...

Full Review :

கோவா - பால்கோவா வா??


இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மூன்றாவது படைப்பு கோவா.யுவனுக்கு முன்னாடி இளைய இசைஞானி என்று அறிமுகத்தோடு படம் கிராமத்தில்
தொடங்குகிறது.

பல கிராம படத்தில் பார்த்த பஞ்சயாத்து காட்சியை நக்கல் செய்து இருக்கிறார்கள்.குறிப்பாக அந்த ஆனந்த்ராஜ் பிளாஷ்பேக் செம நக்கல் அதுக்கு அடுத்து பிரேம்ஜியின் பிறப்பு பற்றி கூறுவது செம....விஜயகுமார்,சந்திரசேகர் சண்முக சுந்தரம் எல்லோருமே சீரியஸ்ஆக காமெடியா நடிச்சு இருக்காங்க.

ஜெய்,வைபவ்,பிரேம்ஜி மூணு சுப்ஜெக்ட் ஹீரோ என்றாலும், படத்தை தனித்து ஆளுவது பிரேம்ஜி தான்.அவருக்கு ஒரு பைட் வேற இருக்கு அதில் வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு காப்பு ஏறுவது போல் இவருக்கும் ஏறும்.பிரேம்ஜி ஒவ்வொரு தடவையும் அந்த இங்கிலீஷ்காரியை பார்த்து கண்கள் இரண்டால் பாட்டுக்கு தலையாட்டுவது பல தடவை சிரிப்பு வந்தாலும் சில நேரங்களில் அலுப்பு வருகிறது.

ஜெய், ஓட்டை இங்கிலீஷ் வைத்து கொண்டு மனுஷன் சலம்பி இருக்கிறார். exampel : u believeO notO......, two coffee one no sugar one yes sugar....,அப்புறம் முக்கியமா
பிரேம்ஜி கண்ணை சாமி குத்தியிடுச்சு என்று வைபவ்விடம் சொல்லும் காட்சி சூப்பர்.வைபவ், இந்த படத்தில் இவர் மூஞ்சில் லைட் அடிச்சா பழைய பாட்டு.தன் பங்கை
கரெக்ட்ஆக செய்து இருக்கிறார்.ஆனா இவருக்கு கொஞ்சம வாய்ப்பு கம்மி.

சம்பத் குமார், இதுவரை நடிக்காத ஒரு வேடம் நமக்கும் புதுசு.தொண்டை கிழியே கத்தியே இவரை பார்த்த நமக்கு இதில் ஒரு அட்டு கேரக்டர்இல் வருகிறார்.அரவிந்த்,சிக்ஸ்
பேக் உடன் சுத்திகொண்டு இருக்கிறார் இவர் தான் வில்லன் என்று பார்த்தால் இவரும் சம்பத்தும்....ஐயோ சொல்லவே கூச்சமா இருக்குங்க.....!நைஸ் ஜாப் அரவிந்த்.

பியா, சின்ன பொண்ணுன்னு பார்த்தா முக்காவாசி பாதி டவுசரில் தான் பொண்ணு வருது, கிஸ் அடிக்குது.... நல்ல முன்னேற்றம் நடிப்பில் தான்!!சிநேகா, கடைசில
வராங்க வைபவ் ஏதோ கதை சொல்றாரு. சிநேகா அவங்ககிட்ட உள்ள திறமையை காட்டுறாங்க.

வெங்கட் பிரபு சின்ன சின்ன விஷயம் கூட சூப்பர்ஆ பண்ணியிருக்கார்.குறிப்பா சொல்லணும்னா ஒரு காட்சியில் பியா ஒரு பார்ட்டி மேடையில் இங்கிலீஷ் பாட்டு பாடிட்டு
இருக்கும் அப்போ கிழே நம்ம பிரேம்ஜியின் வெள்ளைக்கார காதலி அவள் நண்பர்களுடன் இங்கிலீஷ்இல் பேசுவாள்... அப்போ தீடிர்னு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி மேடையில்
பியா ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் பாடுவது மாதிரியும் கிழே வெள்ளைக்காரிகள் தமிழில் பேசுவார்கள்.

பல விஷயங்கள் இருந்தும் படத்தில் சில இடங்களில் தேக்கம் காணப்படுகிறது.முதல் பாதி கலகலப்பு என்றாலும் அதிலும் சில காட்சிகள் போர் அடிக்கிறது.பின் பாதியில் பல காட்சிகளில்
போர் அடிக்கிறது என்பது உண்மை.வெங்கட் சில காட்சிகளை சீரியஸ்ஆக எடுதுட்டாரோ......முக்கியமா பிரேம்ஜியின் வெள்ளைக்கார காதலி,சம்பத் அரவிந்த்,ஜெய் பியா பேசும் காட்சிகள் அலுப்பு தட்டுகிறது.அப்புறம் சின்ன எரிச்சல் அந்த
கோவா தீம் மியூசிக் அடிக்கடி போட்டு நாங்க மலேசியாவில் இல்ல கோவாவில் இருக்கோம்னு சொல்ற மாதிரி இருந்துச்சு.

படத்தில் சீரியல் நடிகர் ஒருத்தர் பல காட்சிகளில் பல தோற்றங்களில் வருகிறார்...ஏன்னு காரணம் சொல்லி இருந்தா நல்ல இருந்துருக்கும்,கடைசி வரைக்கும் சொன்ன மாதிரி தெரியல.முக்கியமா அந்த சிநேகா வைபவ் காட்சிகள் சுத்தம்....செம போர்...அந்த பாடல் காட்சி கிட்டத்தட்ட ரெண்டாவது இன்டெர்வல் மாதிரித்தான்.....

கடைசியில் கொஞ்சம் டைம் பாஸ் ஆச்சு காரணம் கடைசியில் வரும் முக்கிய ஸ்டார்கள்.அவுங்க யார்லாம்னு சொல்லவேணாம்னு நினைக்கிறேன்.....கடைசியில் பேர் போடும் முன் தியேட்டரை விட்டு போய் விட வேண்டாம்...... அது தான் அவுங்க ரெண்டாவது பாதிக்கு போட்ட மொக்கைக்கு ஆறுதல் தரும் விஷயம் என்பது குறிப்பிடதக்கது.

கோவா - சர்க்கரை இல்லாத பால்"கோவா"!!

8.அய்யனார் (நார்..நார்...)பாட்டு மட்டும் நல்லா இருந்தது...ரெண்டாவது பாதி தான் முடியல...அடுத்த வருடம் ஆதியிடம் இருந்து நல்ல படங்களை எதிர்ப்பார்க்கிறேன்....


7.குட்டி.. (உடைஞ்ச சட்டி)பல படத்தில் பார்த்த காட்சிகள்...தனுஸ்க்கு அந்த கேரக்டர் செட் ஆகலைனு தான் சொல்லணும். கடைசி அரைமணி நேரம் செம பிளேட்.


6.துரோகம் நடந்தது என்ன...(ஒன்னுமே நடக்கலையே...)ஏன்டா அட்டு படத்தை இந்த லிஸ்ட்ல சேர்த்தேன்னு நீங்க கேட்கலாம்... இந்த வருஷம் வந்த பல படங்களை விட இது அதிக வசூல் ஆகி இருக்க வாய்ப்பிருக்கு...ஏற்கனவே சொன்னது தான்...இந்த படத்தோட இயக்குனர் தான் படம் பார்த்த அனைவருக்கும் துரோகம் பண்ணிட்டார்...சீனே இல்லை.

Full Review :

நான் அந்த கடவுள் இருக்குறதை ஒத்துக்கிறேன்ங்க... காரணம்..மூணு மணி ஷோக்கு தியேட்டருக்கு போய்க்கிட்டு இருக்கும் போது தீடிர்னு மணி 2.45 க்கு வண்டி
பஞ்சர் ஆயிடுச்சு....அய்யோயோ மக்களுக்கு இந்த படத்தை பார்த்து யாரு சொல்றது...இப்படி ஆயிடுச்சேனு ரொம்ப வருத்தப்பட்டேன்.அடிச்சு புடிச்சு பஞ்சர் கடையை தேடி பஞ்சர் ஓட்டிட்டு தியேட்டருக்கு வந்தா படம் 3.15 க்கு தான் போட்டாங்க. ஆனா படத்தை பார்த்த பிறகு தான் பஞ்சர் மேட்டர் நினைவு வந்தது...அந்த கடவுள் தான் நான் படம் பார்க்க கூடாது என்று ஆணி ரூபத்தில் வந்து என் டயரில் குத்தினார் என்று.....!!

துரோகம் நடக்காதது என்ன...??

எனக்கு அட்டு படத்தை விமர்சனம் பண்றது ஒண்ணும் புதுசில்லை..சரி துரோகம் என்ன கதைனு பார்ப்போம்....

சுரேஷ்னு ஒரு பையனை ஹாஸ்பிட்டலில் படுக்க வைத்து இவனுக்கு என்ன ஆச்சு என்று கதை சொல்கிறார் ஒருவர்... அதாவது சுரேஷ் முதலில் வீட்டு வேலைக்காரியிடம் சில்மிஷம் பண்ணுகிறார்...அப்புறம் வெளியே ரம்யா ஸ்ரீ என்ற கிழவியிடம் மசாஜ் பண்ணுகிறார்...அப்புறம் போலீஸ் மனைவி மீது ஆசை படுகிறார்....அப்புறம் திரும்பவும் ஒரு ரவுண்ட்...மீண்டும் வேலைக்காரி ஆனால் அவள் போலீஸ் அதிகாரியாம்....மீண்டும் கிழ ரம்யாஸ்ரீ ஒரு பாட்டு...அப்புறம் போலீஸ் மனைவியை கடத்தி...போலீஸ் கணவன் வந்து மீட்கிறான்....இது தான் படத்தோட கதை திரைக்கதை எடிட்டிங் எல்லாம்.....

ஏன்டா அட்டு படத்தை பார்த்துட்டு இப்படி கதை சொல்றியேனு யாராவது நினைச்சா அது ரொம்ப தப்பு....இந்த கதையை ஸ்க்ரீனில் சொன்ன அந்த ஒருவர் யார் தெரியுமா?? டெல்லி கணேஷ்.... அவரே இந்த அட்டு கதையை சொல்லும்போது நான் என்ன பண்ண முடியும்.

யாரு உண்மையா துரோகம் பண்ணா??

படத்தில் யாரும் யாருக்கும் துரோகம் பண்ண மாதிரி தெரியலை. என்னை கேட்டா இந்த படத்தோட டைரக்டர் தான் படம் பார்த்த 200 மக்களுக்கு துரோகம் பண்ணிட்டார். படத்தில் உருப்படியா ஒரு சீன் கூட இல்லங்க,நல்ல சீனையும் சேர்த்துதான் சொல்றேன்.இந்த படத்தை பார்த்தா ஒரு படத்தை எப்படி எடுக்க கூடாது என்று கற்று கொள்ளலாம்.அதுவும் இது அட்டு படம் அதை கூட ஒழுங்கா எடுக்கவில்லை.படத்தில் ஒரு மண்ணும் இல்லைனு யாரும் சொல்லகூடாதுனு டைரக்டர் அப்ப அப்ப பில்டிங் கட்டற இடத்தில்
இருக்கும் மண்ணை காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!!


சுவாதி மற்றும் லீனா இருவரும் ஓரளவு வெளிபடியுள்ளனர், நடிப்பை அல்ல. போலீஸ் ஆக வரும் ஆள் அட்டு படத்துக்கு தகுந்த ஆள் இல்லை.படத்தின் இசை நான் சிறு வயதில் பார்த்தா மலையாள பிட்டு படங்களை நினைவுப்படுத்தின....

துரோகம் நடந்தது என்ன?? - ஒன்னுமே நடக்கலையே....


5.குரு சிஷ்யன்..(ஹி..ஹி...)தமிழ்ல இந்த மாதிரி படங்கள் வர கூடாதுனு சொல்றதுக்கு இந்த படம் ஒரு உதாரணம். சந்தானம் மட்டுமே ஷோ ஸ்டீலர்.சத்யராஜ் எல்லாம் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக வேண்டிய நேரம் இது....!!

Full Review :


"வாழ்க்கையே ஒரு விளையாட்டு...
நம்ம உடம்பு தான் மைதானம்...
அந்த உடம்பில் யார் வந்து விளையாடிட்டு போனா என்ன...."

இந்த வாழ்க்கை தத்துவத்தை படத்தில் உதிர்த்தவர் நமது ஷகீலா என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில் எங்கள் வாழ்த்துக்களை இயக்குனருக்கு தெரிவித்து கொள்கிறோம்.

இது ஒரு சிறந்த படம்ங்க....ஹலோ ஒரு நிமிஷம் முழுசா படிச்சுட்டு அப்புறம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணுங்க. உண்மையிலே இது ஒரு சிறந்த படம் எதுக்குன்னு கேட்டிங்கனா தள்ளிட்டு போறதுக்கு இது ஒரு சிறந்த படம்னு சொல்ல வந்தேன்.நான் பார்த்த தியேட்டரில் என்னையும் சேர்த்து நூப்பது பேர் தான் இருந்தோம்.அப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஏன்டா, தயாரிப்பாளர் கோடி கோடியா பணம் போட்டு படம் எடுத்தா அதை இப்படியா சொல்லுவே என்று நீங்கள் யாராவது கேட்கலாம். ஆனா இந்த குரு சிஷ்யன் படத்தை பார்த்தா நீங்க இப்படி கேட்க மாட்டிங்கனு இருநூறு சதவீதம் நான் நம்புறேன்.


அகில கெரகம் சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பாக இந்த விமர்சனத்தை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.படத்தோட கதை பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் அதன் திரைக்கதையை எங்க பக்கத்துக்கு வீட்டு அஞ்சு வயசு பையன் கூட சொல்லிவிடுவான் என்பது படத்தின் ஹைலைட். சுந்தர்.சி வழக்கம் போல் சூப்பர் பாக்கு தலையுடன் வருகிறார் . படம் முழுவதும் கழுத்தில் ஒரு துண்டை சுற்றி கொண்டு வருகிறார். தீடிர்னு ஒரு சீனில் முதுகு பின்னாடி இருந்தெல்லாம் துண்டு எடுக்கிறார்....(விசாரிச்சேன்...ஸ்டைலாம்!!)

சத்யராஜ் சார் உங்களுக்கும் விஜயகாந்த்க்கும் ஏதாவது பிரச்சனைனா பேசி தீத்துக்க வேண்டியது தானே...அதுக்குன்னு அவரோட ஈத்து போனா பழைய அரசியல் டயலாக் பேசி ஏன் கடுப்பு ஏத்துரிங்க??அதுவும் இல்லாம எங்க தல அஜித்தை வேறு கிண்டல் பண்றீங்க...படத்தில் சத்யராஜ் பேரு காலுங்க.... அதுக்கு அவர் சொல்ற காரணம் தலைன்னு ஒருத்தர் இருக்கும் போது கால்னு ஒண்ணு இருக்க கூடாதா என்பார்.....சத்யராஜ்,கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு வருஷமா இதே மாதிரி இதே விக் வச்சி நடிச்சிட்டு வர்றார்....முடியல...இந்த கதாநாயகி நடிச்ச மூணு படத்தையும் இந்த பிரபஞ்சத்தில் பார்த்த ஒரே ஆள் நானாக தான் இருப்பேன் என்று நம்புகிறேன். படத்துக்கு படம் பேர் மாத்துறாங்க ஆனா முகத்தில் மட்டும் எந்த படத்திலும் ரியாக்சன் மாத்த மாட்டறாங்க.....வேற ஒண்ணும் சொல்றதுக்கு பெருசா இல்லைன்னு சொல்லமுடியாதுனு ஸ்டில்லை பார்த்தால் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அநேகமா இது தான் அந்த அம்மணிக்கு கடைசி படமாக இருக்கும் என்று நம்புகிறேன், காரணம் இதுக்கு முன்னாடி நடிச்ச ரெண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்ஒ ஹிட்ங்க.(இந்திரவிழா, நான் அவனில்லை 2 ). பேசாம கிரணையாவது நாயகியாக போட்டிருக்கலாம்...!!


சந்தானம் இவர் மட்டும் இல்ல..இன்டெர்வல் முன்னாடியே வெளியே வந்திருப்பேன். சந்தானம் காமெடி உண்மையிலே நல்லா இருந்தது.ஆனா அதுக்காக முழு படமெல்லாம் பார்க்கமுடியாது.நான் கிளைமாக்ஸ்க்கு முன்னாடியே வெளிநடப்பு செய்ஞ்சிட்டேன் என்பதை இங்கே சொல்லி கொள்கிறேன் யுவர் ஆனர்!!

சக்தி சிதம்பரம், ஐயா நீங்க ஒரு படமெடுக்க அந்த டைம்மில் வந்த பத்து படங்களில் இருந்து சீனை எடுத்து நீங்கள் ஒரு படம் எடுத்துடுறீங்க....மசாலா படம் நாங்க பார்ப்போம் அதுக்காக
ஓவர் மசாலா படமெல்லாம் பார்க்க முடியாது.....அப்புறம் ஒரு சின்ன request தயவு செய்து நீங்க இனிமே ரஜினி பட டைட்டில் யூஸ் பண்ணாதீங்க....!!

RDK & Siby's Theatre moments :

#படத்தில் இன்டெர்வல்க்கு பிறகு ஒரு காட்சி...எப்பா எப்படி
இப்படி யோசிக்கிறாங்கனு தெரியல அதுவும் இல்லாம ஒரு
பாட்டு வரும் பாருங்க "தம்பி இல்லடா,இவன் தாயை போலடா"னு
அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது...
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!

# படத்திலே மிகவும் பிடித்த இடம் ராஜ்கபூரும் நாயகியும் நடிச்ச ரேப் சீன்தான். ஆனா கொஞ்ச நேரத்தில் அந்த காட்சி முடிந்து விட்டது என்பது கொடுமையான விஷயம்.இந்த சீனுக்கு ஒருத்தர் தியேட்டரில் கைதட்டினார்....சத்தியமா நான் அவன் இல்லைங்க....


# ஈவ்னிங் ஷோ இன்டெர்வல் அப்பவே நாலைந்து பேர் இந்த
காவியத்தை பார்த்து மட்டையாகி விட்டார்கள்.


# இன்டெர்வல் ஆரம்பிச்சதில் இருந்து ஒரு முக்கா மணி நேரம்
சந்தானம் வரவே மாட்டார்(நடுவில் சும்மா ஒரு சீனில் வருவார்) அவ்ளோ தான் போல வீட்டுக்கு போய்விடலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் போதே பெண் வேடத்தில் சந்தானம் வரும் காட்சி வந்தது......ஆனா பாருங்க அப்போ தான் ஒரு ஜோடி வேற வெளியே போறாங்க...அந்த பெண் கடைசி வரை ஸ்க்ரீனை பார்த்து கொண்டே போனாள்....இதிலிருந்து நாம் பெறும் நீதி :

இதுக்குதான் வேலை முடிஞ்சவுடன் அவசரமா போக கூடாது!!

குரு சிஷ்யன் - போதும்டா சாமி!!


4. அசல்...(மெய்யாலுமே மொக்கை...)இந்த படத்தில் எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் படம் ஓடுற டைம் தான்..... என்ன தான் மொக்கை போட்டாலும் உன்னை ரெண்டு ஹவர்ல வீட்டுக்கு அனுப்பிருவோம்னு சொன்ன அவங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது...அதனால தான் அசலுக்கு நாலாவது இடம்...

Full Review :

அசல் படத்தில் எனக்கு பிடிச்சதே அவங்க டீலிங் தான், அதாவது தியேட்டருக்கு வந்தா ரெண்டு மணிநேரத்தில் வெளியே அனுப்பிடுவோம் என்ற அந்த டீலிங் பிடிச்சு இருந்தது.இருந்தாலும் பாட்டு மற்றும் அஜித் நடப்பதை கொஞ்சம் கட் செய்து இன்னும் இருபது நிமிஷம் முன்னாடியே விட்டுருந்த ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்.

அஜித் கிட்ட எனக்கு பிடிச்சதே அவரின் வெளிப்படையான பேச்சு தான்.முந்தாநேத்து கூட முதலமைச்சர் பாராட்டு விழாவில் அவர் "நடிகர்களை மிரட்டி விழாவுக்கு அழைக்கிறார்கள்..." என்று தைரியமாக பேசினார். அது தான் அஜித்.ஆனால் அசலில் பேசாமல் நடித்தாலும் அவ்வளவு ஈர்ப்பு இல்லை.பஞ்ச் இல்லாதது ஒரு பெரிய சந்தோசம்.

கதையெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா யூகி சேதுவிடம் இருந்து இப்படி ஒரு சுவாரசியம் இல்லாத திரைக்கதையை எதிர்ப்பார்க்கவில்லை.யூகி சேது ஒரு மாற்று சினிமாவுக்கு முயற்சி செய்திருப்பார் என்று நினைத்தால்,இல்லை நான் ஒரு சினிமா encyclopedia மட்டும் தான் என்று அசல் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னும் தல கார் சேசிங் சீனை விடல.நாங்க இதெல்லாம் need for speed, burn out இலே பார்த்துடோம்னு யாராவது சொல்லுங்க.

அசல் முதல் பாதியில் போர் அடிக்காம போகுது ஆனா ரெண்டாவது பாதியில்??

ஆஆவ்...அது ஒன்னு இல்லங்க கொட்டாவி!!அது பாட்டுக்கு கணக்கு வழக்கு இல்லாம வந்துட்டே இருக்கு.யூகிசேது காமெடி?? காமெடிதானே அது முடியலை சார்.அதுவும்
பிரான்ஸ்இல் யூகிக்கும் சுரேஷ்க்கும் நடக்கும் காட்சிகள் செம மொக்கை.

பிரபு, அருமையான குணசித்திர நடிகராக பல படங்களில் தன்னை வெளிப்படுத்தியவர், ஆனா அசலில் அசந்துட்டார் போல.இன்டெர்வல்க்கு பிறகு பிரான்ஸ் வந்தவுடன் எங்கே
போனார் என்று தெரியவில்லை கடைசியில் கிளைமாக்ஸ்இல் வருகிறார்...வந்தது மட்டும் இல்லாமல் பழையகால வசனத்தை பேசி மேலும் மொக்கை போடுகிறார். (ஒரு வேளை பிரான்ஸ்ஸை சுத்தி பார்க்க போய் இருப்பாரோ??)

பாவனா கிட்ட சொல்றதுக்கு முக்கியமா ரெண்டு விஷயம் இருக்கு. அட நீங்க தப்பா நினைக்காதிங்க நான் பாவனாவின் தேத்து பல்லும் அவர் சிரிப்பையும் சொன்னேன்.
சமீரா ரெட்டி, பயங்கரமா வெளிப்படுத்தி இருக்காங்கனு சொல்ல முடியாது ஆனா ஓரளவுக்கு வெளிப்படுத்தி இருக்காங்க,நடிப்பை தான்.

மொத்தத்தில் சரண்,பரத்வாஜ்,யூகிசேது மூவரும் சேர்ந்து அஜித்தை ஏமாற்றி விட்டார்கள்.அஜித் அவர்கள் ஒரு ஸ்மைல் செஞ்சு இருந்தாக்கூட மனசுக்கு ஆறுதலா
இருந்துருக்கும் ஆனா அதுவும் இல்லை....

படத்தின் உச்சக்கட்ட காமெடியாக வருவது கிளைமாக்ஸ். இந்த கிளைமாக்ஸ் சீனை நான் ஏற்க்கனவே ஏதோ விஜயகாந்த் படத்தில் பார்த்ததாக நினைவு.அதுவும் கடைசியில் சுரேஷ் திருந்துவது செம....மொக்கை.

அசல் - மனதில் ஒட்டாத ஹைடக் நாடகம்.


3.வ...குவாட்டர் கட்டிங்...(மப்பு இல்ல...)தியேட்டர்க்கு வானு கூப்பிட்டு செம மொக்கை போட்டாங்க..அதுவும் ஜான் விஜய் கேரக்டர் கொஞ்சம் ஓவர் ஆகி போச்சு... சில சில காமெடிகள் ஓகே.. தீபாவளியை இந்த படம் கெடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

2.மாத்தியோசி...(யோசிக்கவில்லையே...)எங்கே யோசிச்சாங்கனு இயக்குனர் கிட்ட தான் கேட்கணும்....

Full Review :

மாத்தியோசி.... யோசிச்சாங்களா??

நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதைக்கு பின் இயக்கும் படம்.நாலு பசங்க தான் நாயகர்கள்.ஷம்மு தான் நாயகி. பொன்வண்ணன்,ரவி மரியா போன்றோரும் படத்தில் உள்ளனர். இசை புது ஆளு குரு கல்யாண்.

முதலில் இவங்க என்ன மாத்தியோசிச்சு இருக்காங்கனு பார்க்கலாம்....மதுரையில் உள்ள கிராமத்தில் நாலு சட்டை போடாத பசங்க....திருட்டு,மற்றும் ஊர் வம்புகள் தான்
தொழில்.அந்த ஏரியா போலீஸ் ஒருவரை கயிறு கட்டி தொங்க விட்டு மொட்டை போடுகிறார்கள்...இந்த மாதிரி ஒரு ஒரு விஷயம் செய்யும் போது பின்னணி இசையில்
மாத்தியோசி..மாத்தியோசி.. என்று குரல் வருகிறது.


சென்னைக்கு போறாங்க அங்க வழிப்பறி பண்ணி வாழ்க்கையை ஓட்டுறாங்க! ஷம்முவை அந்த நாலு பேர்ல ஒருத்தர் கெட்டவன் கிட்ட இருந்து காப்பத்துறார்...ஆ....வ்..சாரி கொட்டாவி.... அப்புறம் என்ன கேள்வி கேட்க்காம அந்த பொண்ணும் சரி
இவங்களும் சரி சென்னை முழுக்க சுத்துறாங்க...... அந்த பொண்ணு வெளிநாடு போனும்னு துடிக்குது.... இவங்க என்ன பண்ணாங்க என்பதே படத்தின் ஆ...வ் கதை!!
மேல உள்ள கதையில் என்ன மாத்தியோசிச்சு இருக்காங்கன்னு தயவு செய்து உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க......

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மதுரை பின்புலம், மதுரை பேச்சு,இதில் பருத்தி வீரன் பாட்டு,நாலு பேரில் ஒருத்தர் ஓவராக பேசுவது......இதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்க
தகுதி இல்லை. திரைக்கதை தொய்வில்லாமல் போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.மாத்தியோசியில் சில இடங்களில் மாத்தியோசிச்சு இருந்தாலும் கைதட்டவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாதபடி இருக்கிறது.

படத்தின் பெரும் பின்னடைவு பாட்டுகள்....அதுவும் அவர்கள் கடத்தி வரும் பெண் வயதுக்கு வந்தவுடன் பாட்டு,,முடியல ஏன்ப்பா மாத்தி யோசிக்கிரிங்கன்னு கேட்க தோணுது!! ஒரு கொலையை பண்ண சொல்லிட்டு இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ண கூடாது என்று சொல்லும் நேர்மையான காவல்துறை அதிகாரியாக பொன்வண்ணன். ரவிமரியா திருநங்கை வில்லனாக நன்றாக செய்து இருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் ஒரு வண்டியில் உள்ள பொருளை கொள்ளையடித்து கொண்டு இருக்கும் போது போலீஸ் துரத்தும் அப்போது அவர்கள் அப்படியே கபடி ஆட்டத்தில் சேரும் போது சிட்டி ஆப் காட் டி.வி.டி.யின் மகிமை புரிந்தது.மாத்தியோசிச்சு வேற வேற படத்தில் இருந்து காட்சிகளை எடுங்க சார்... இன்னும் எத்தனை நாள் தான் சிட்டி ஆப் காட் வச்சி
காலத்தை ஓட்டுறது!!


பொண்ணு பேர் தெரியாமலே அவர்களுடன் நாலு பேரும் சுற்றுகிறார்கள்.நாலு பேர் சட்டை இல்லாம ஊரெல்லாம் சுத்துறாங்க ஆனா ஷம்மு மட்டும் முழுசா மறைச்சு சுத்துது...இது எந்த ஊரு நியாயம்...?? ஷம்மு உண்மையில் கும்முன்னு இருக்காங்க.


ரேணிகுண்டா மாதிரியே படத்துக்கு விளம்பரம் வேற பண்ணாங்க அதாவது ஒரு ஒரு இயக்குனரும் சொன்னதை பேப்பர் விளம்பரத்தில் போட்டார்கள்.நாலு பசங்க ஒரு
பொண்ணு என்றவுடன் நான் கொஞ்சம் யோசிச்சேன். ஒரு வேளை ரேணிகுண்டா மாதிரி இருக்குமோனு.ஆனா அப்படி இல்லை, ரேணிகுண்டா அளவுக்கு வராது.காரணம்
மனசை தொடுற மாதிரி எந்த காட்சியும் இல்ல.நான் அவ்வளவா எந்த படத்தையும் இன்னொரு படத்துடன் ஓப்பீடு செய்வதில்லை...ஆனால் மாத்தியோசியில் சில பல
இடங்களில் சில பல படங்களின் காட்சிகள் வந்து போயின!!


ஆனா ஊனா ஓணான்னா வர்ற பையன் தூப்பாக்கி எடுத்து காட்டுவது..பொட்டு பொட்டு என ஆட்களை சுடுவது,முடியல...! சில காட்சிகளில் டப்பிங் வேறு சரியில்லை..ஊரில் கருவண்டாக வரும் சின்ன பெண் கவர்ந்தாலும் சில சமயம் எரிச்சல் வருகிறது....முதல் பாதி ஓரளவுக்கு போச்சி ஆனா ரெண்டாவது பாதி எப்போ படம் முடியும் என்பது போல் இருந்தது....!!

மாத்தியோசி : தலைப்பில் மட்டுமே!!
2. ராவணன்...(பத்து தலை தலைவலி..)இந்த படம் பார்த்துட்டு இருக்கும் போது எனக்கு ஒன்னுமே புரியலை... இனிமே மணிரத்தினம் படம் பார்க்க போறதுக்கு முன்னாடி ஒரு வாரம் ஸ்பெஷல் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும் போல....அது சரி அவர் எங்க நமக்கு படம் எடுக்குறார், அவர் பணம் எடுக்க தானே படம் எடுக்குறார்.

Full Review :

ராவணன் படம் ராமாயண கதை தான் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். எனக்கும் ராமாயணம் கதை தெரியும் ஆனா இது அந்த காண்டம் இது இந்த காண்டம்னு எல்லாம் தெரியாது....அதனால நான் இங்க ராமயணத்தை பத்தி பேச போறது இல்லை...!!

நாம இங்க காஞ்சி கருவாட இருக்கோம் ஆனா படத்தில் லோகேசன் ஒண்ணும் ஒண்ணும் செம...கடைசியில் அந்த பாலம் காட்சி செம.அப்புறம் அந்த தூம்பி மூலம் அனைவரையும் காட்டுவது...எல்லாம் செம...சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் நம்மை வேறு உலகுக்கு அழைத்து போக முயற்சித்தாலும் ஆனா கதை ஓட்டம் போக விட மாட்டேன் என்கிறது என்பது தான் உண்மை.

விக்ரம், சூப்பர்ஆ பண்ணி இருக்காரு...ஆனா சில சமயம் இவரு செய்யும் சேஷ்டைகள் வேறு மாதிரி எண்ண வைக்கிறது. ப்ரிதிவ்ராஜ், ஓகே...கம்பீரமா இருக்கிறார். பிரபு, சில காட்சிகளில் சிரிப்பு மூட்டுகிறார். கார்த்திக், இவர் தான் அனுமார் கேரக்டர்னு
சொல்லி மரத்துக்கு மரம் தாவி காட்டுகிறார்...வேற ஒண்ணும் செய்யல்லை....ப்ரியாமணிக்கு பருத்திவீரன்க்கு பிறகு மீண்டும் கேங் ரேப் அமைஞ்சுருக்கு... ரஞ்சிதாக்கு இருந்த வசன காட்சிகளை கட் செய்து விட்டார்கள் என்று புரிகிறது.முன்னா, சமாதானம் செய்ய போகும் காட்சியில் மிளிர்கிறார்..

அப்புறம் ஒண்ணு நான் மணி ரத்னம் எதிர்ப்பாளன் அல்ல என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். ராவணன் படத்தில் மணி மற்றும் விக்ரம் இன்னும் பல பேரின் உழைப்பு தெரிந்தாலும் படம் பார்க்கும் போது எந்த ஒரு பீலிங்க்ஸும் எனக்கு வரவில்லை,
சில காட்சிகள் தவிர. அதாவது படத்தில் ஒரு உயிரோட்டம், சுவாரசியம், அடுத்தது என்ன நடக்கும் அப்படின்னு ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லாமலே படம் போகிறது என்பது என் பீலிங்க்ஸ்.இங்க நான் ஒண்ணும் சொல்லி கொள்ள விரும்பிகிறேன்...

"ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்"....

மணி ரத்னம் மேல எனக்கு ரொம்ப கோபம்ங்க....அட அது ஒண்ணும் இல்லைங்க. ஐஸ்வர்யா கண்ணு பத்தி நான் என்ன சொல்றது... ஆனா கொஞ்சம் கெழடு தட்டிடுச்சுனு தான் சொல்லணும்.எனக்கு ஒரு கேள்வி மட்டும் தான் " எந்த இந்தியா குடும்ப பெண்ணாவது மூன்றாம் மனிதர்(ஜான் விஜய்) வீட்டுக்கு வரும் போது லோவில் டிரஸ் போட்டு மார்பை காட்டி கொண்டி இருப்பாளா??..." எதுக்கு இந்த மாதிரி ஒரு காட்சி வைக்கணும்.....(ஏன்ப்பா சீன் இல்லைனாலும் கேள்வி கேக்குற.. இருந்தாலும் கேள்வி கேக்குற...அப்படின்னு நினைக்கிறிங்களா...ரைட் ப்ரீயா விடுங்க...!!)

படத்தில் எனக்கு சரியா சில வசனங்கள் புரியலை...ஆனா சுஹாசினி வசனம் ஒண்ணும் அவ்வளவோ சொல்றது ஒண்ணும் இல்லை. முதல் பாதி ஒரு எதிர்ப்பார்ப்பில் வேகமா போன மாதிரி இருந்தது... ரெண்டாவது பாதியும் அப்படியே இருந்தது...ஆனா படம் ஓடுன
டைம் ரெண்டு மணி நேரம் பத்து நிமிடம் என்றாலும் படம் அலுப்பை கொடுக்கிறது என்பது தான் உண்மை.தமிழில் பார்த்துட்டு ஹிந்தியில் பார்க்கணும்னு நினைச்சேன்...இப்போ அந்த எண்ணத்தை கை விட்டுடேன்....

இது உலக படம் இல்ல மணி படம், உன்னை மாதிரி மசாலா படம் பாக்குறவனுக்கு என்ன தெரியும் அப்படினு சொல்றவங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு!!!

RDK & Siby's Theatre moments :

# ரஞ்சிதா லைட்ஆ தலை காட்டினாலே தியேட்டரில் செம சவுண்ட்.. நல்ல வேளை வசனம் எதுவும் பேசவில்லை....

# படம் திருநெல்வேலி பாஷை என்பதால்..லே லே,,என்று வரும்.. ஒரு காட்சியில் இவனை எங்கே சுடுறதுலே என்று கேட்பார்... இங்கே நம்ம ஆளு "அவனை #$#$#$ சுடுலே....." என்றவுடன் தியேட்டரில் அதிர்வலை கிளம்பியது....

# இன்டெர்வேல் அப்போ..பல பேர்...படம் புரியல....என்று பேசி கொண்டிருந்தனர்.... ஒருவர் 150 ரூபாய் தண்டம் என்று புலம்பியப்படி சென்றார்....

# படத்தில் கடைசி காட்சியில் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்... அட நீங்க வேற...கடைசி கட்ட காட்சியில் ஐஸ்வர்யாவின் தரிசனத்துக்கு தான் அந்த கத்தல்... ரெண்டு பேர் கடைசி சீன் சூப்பர் என்று பேசிகொண்டே வந்தனர்....

--> என் கணிப்புப்படி மணிரத்னம் படங்களை ஆகா ஓகோன்னு சொல்றவன் 90% பேரு இப்படித் தான்.

1. அவனுக்கு படம் சத்தியமா புரியல.
2. அறிவாளிகள் இன்டலெக்சுவல்ஸ் என்று தன்னை காட்டிக்கொள்ள முனைகிறான்.
3. மணிரத்னம் படம் நல்லா இல்லேன்னு விமர்சனம் பண்ணா நம்மள ஒரு மாதிரி பாப்பானோன்னு ஒரு பயத்துலயே நல்ல இருக்கு நல்ல இருக்குன்னு சொல்லிடுறானுவ.
2.வெளுத்துக்கட்டு...(ஹ்ம்,,,கட்டணும்)எஸ்.ஏ.சி. அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதைன்னு சொல்லிட்டு பத்து படத்தோட கதையை போட்டு படத்தை முடிச்சுட்டாங்க. ஏதோ படம் பார்க்க வந்த ஆட்டோ டிரைவர்களால் எனக்கு டைம் பாஸ் ஆச்சு....

Full Review :

வெளுத்து கட்டணும்டா அவன....

இந்த படத்தின் விளம்பரத்தை பார்த்து சத்தியமா நான் வெளுத்து கட்டு படத்துக்கு போகலங்க...ஏதோ எங்க ஏரியா தியேட்டரில் படம் போகுதுன்னு போனேன்.... அங்க தான் நான் புரட்சி இயக்குனர் சந்திரசேகரின் மாஸை பார்த்தேன்....

ச்சே ச்சே...தப்பா கணக்கு போட்டுடாதிங்க.... கிட்ட தட்ட மூணு ரோ புல் ஆச்சி. தியேட்டர் காரங்க வெளியே பேனர் வைக்காதது தான் கூட்டம் வராததுக்கு காரணம்னு தப்பா நினைச்சு அவசரம் அவசரமா 11.30 மணிக்கு பேனர் ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.... பாவம் என்ன பேனர் வச்சி என்ன ஆக போகுது... குவாட்டரும் பிரியாணியும் தரேன்னு சொன்னா கூட யாரும் வர்ற மாதிரி தெரியலை....!!


படத்தோட கதை, காட்சி, திரைக்கதை, என்று எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் இது வரை வந்ததில்லை....ஆனா பல தமிழ் சினிமாவில் வந்ததை சுட்டு போட்டு ஆறி போன தோசையை கொடுத்து இருக்கிறார்கள். முக்கியமா பருத்திவீரன் படத்தை சந்திரசேகர் நிறைய தடவை பார்த்து இருப்பார் போல... முதல் பாதி முழுவதும் பருத்தி வீரன் பாதிப்பு தான்....!
இதையும் மீறி தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்க ஒரே காரணம் ஏ.சி. மட்டுமே....!!

************************

Timing SMS :

"மொக்கை படம் பார்க்கறது உன் தப்பில்ல...ஆனா மொக்கை
படம்னு தெரிஞ்சு போற பாரு அது தான் உன் தப்பு" னு


அந்த தப்பு தான் இப்ப திரும்பவும் நடந்திருக்கு!!

முதல்ல தமிழ் சினிமாவில் ரெண்டு விஷயம் தடை பண்ணனும்...

# நாயகி சொன்னவுடன் கடலில்,அருவியில்,சாக்கடையில் குதிப்பது அதன் பின் நாயகி அழுது புரண்டு நாயகனை தேடும் போது அவர் அஞ்சு நிமிஷம் கழிச்சு மேல வர்றது....

# அப்புறம் நாயகி ஒரு மீசை, அல்லது ஒரு பேய் முகமூடி போட்டு நாயகனிடம் காட்டும் போது அவர் சிரிப்பது அப்புறம் அந்த மீசை,மூகமூடியை கழட்டியவுடன் நாயகியை பார்த்து
பயப்படுவது.....

தயவு செய்து யாரும் இப்படி இனிமே எடுக்காதிங்க நானும் ரெண்டு வயசில் இருந்து இதை பார்த்துட்டு வரேன்...இந்த ரெண்டு அற்புத காட்சிகளும் இந்த படத்திலும் இருக்கிறது
என்பது படத்துக்கு பெரிய பலம்.

யாரை வெளுத்துகட்டுறார்....

வெளுத்துகட்டு.... ஹீரோ பத்து வயசில் நாயகிக்கு தாலி கட்டுறார்... இருபது வயசில் கோவில் கட்டுறார்... அப்புறம் சென்னைக்கு வந்தவுடன் துணியை மாற்றி கட்டுகிறார்....
அவ்ளோ தான்.....

படத்தில் ஒன்னுமே நல்லா இல்லையானு கேட்கலாம்.... சில காட்சிகள் கொஞ்சம் புதுசா இருந்தது...பல காட்சிகள் அரத பழசா இருந்தது. புதுமுக கதிர் அருந்ததியை அருவி காட்சியில் நன்றாக மோப்பம் பிடித்தார்.பாட்டி கூல்ட்ரிங்க்ஸ் சீன் நல்லா இருந்தது. ஒரு பையன் எம்.ஜி.ஆர் பாட்டை மாற்றி பாடுவது நன்றாக இருந்தது.... !!ஆனா இது எல்லாம் விட பட கடைசியில் தலைவலி வருது பாருங்க... முடியலைங்க...!

வெளுத்துகட்டு - வெளுத்து கட்டிட்டாங்க படம் பார்த்தவங்களை!!


1.வாடா...(வந்துட்டேன்..)வாடா காவியத்தை பார்க்க ரெண்டு கண் பத்தாது...மேலும் விவேக் காமெடி செம சிரிப்பு??... நிறைய நண்பர்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா படம் பார்த்த அன்னைக்கு தூக்கம் வரலன்னு சொன்னாங்க.நான் வாடா படத்தின் ட்ரைலரை பார்த்ததில் இருந்து தூக்கம் அடியோடு போச்சுங்க!! ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்!! அதுவும் கடைசியில் பைக் மேல... முடியல....நீங்களும் முடிஞ்சா பாருங்க....


வாடா படத்தின் சிறப்பம்சங்கள் சில:


# படத்தை பார்க்காம நாம எந்த ஒரு தப்பான முடிவுக்கும் வர கூடாது.ஆனா இந்த படத்தை பத்தி முடிவு பண்ண அந்த பைக் சீன் ஒன்னு போதும்னு நினைக்கிறேன்.இந்த படம் குவாட்டர்
அடித்து செல்ல சிறந்த படம் என்று டாஸ்கர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

# மேலும் வாடா படம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு பிலிம் பெஸ்டிவலில் திரையிட தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.வாடா படத்துக்கு இதை விட ஒரு சிறப்பான அறிமுகம் கிடைக்காது என்று ஊருக்குள் பேசி கொல்கிறார்கள்.


# நீண்ட நாட்கள் கழித்து தமிழ்சினிமாவில் வாடா படத்தில் தான் போட் சேசிங் காட்சிகள் வருகின்றனவாம்.அந்த காட்சியை கேரளாவில் உள்ள அளப்பியில் எடுத்து உள்ளனர்.அந்த காட்சிகளை பார்ப்பவர்களுக்கு மயிர் கூச்சரியலனாலும் வேற ஏதாவது கூச்சரிய வாயிப்பிருக்கு!! தலைவலியை சொன்னேன்ங்க....


# சுந்தர்.சி அவர்கள் இந்த படத்தில் கெட்-அப் மாற்றியுள்ளார்... அட நீங்க வேற சூப்பர் பாக்கு கலரில் ப்ளீச் செய்து இருக்கிறார்னு சொன்னேன்ங்க.
# மேல உள்ள ஸ்டில்லை பார்த்தாலே இது ஒரு வித்தியாசமான படம்னு உங்களுக்கு புரிஞ்சுருக்கும்...எப்படினா எப்பவும் தமிழ்சினிமாவில் ஹீரோ மட்டும் தான் கோலி மேல காலை வச்சி ஹீரோயினி மேல உழுவார் ஆனா இதில் கூடவே காமெடியனும் சேர்ந்து விழுவுது தான் படத்தின் சிறப்பு!!

# வாடா படம் உலகப்படங்களுக்கு இணையாக எடுத்து உள்ளனர் என்று ஏதோ ஒரு வட்டம் தெரிவிக்கிறது.அதிலும் மொக்கை போட
விவேக் இருப்பது படத்துக்கு கூடுதல் பலம்.நாயகி படம் முழுவதும்
தாராள கொள்கையை கடைப்பிடிப்பார் என்று கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.
வாடாவை பத்தி ஏற்கனவே பல தடவை அலசிவிட்டதால் விட்டு விடுவோம்....

Full Review :

http://siby-thewhiteknight.blogspot.com/2010/10/blog-post_22.html
1.தம்பிக்கு இந்த ஊரு...(வெளியே சொல்லிடாதே)இந்த படத்தை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை...மொக்கைனு சொன்னா அதுக்கு மொக்கைக்கே கேவலம் ஆயிடும்...!!என் நண்பன் தனுஷ் கட்டாயபடுத்தி கூட்டிட்டு போனதால் தான் போனேன்... இந்த படத்துக்கும் ஒருத்தன் விழுந்து விழுந்து சிரிச்சான்..எதுக்கு சிரிச்சானோ? என் கெரகம் இந்த மகா காவியத்தை பார்க்கனும்னு தலைவிதி...வேற என்ன சொல்றது..

Full Review :

தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,ஏதோ தெரியாதனமா KSPS தியேட்டர் பக்கம் போய்ட்டேன்.உண்மை என்னனா நான் ராஜலீலை படம் பார்க்கலாம்னு தான் நினைச்சேன் என் நண்பன் தனுஷ் கட்டாயபடுத்தி கூட்டிட்டு போனதால் தான் போனேன். பத்து நிமிஷம் கழிச்சு போன கதை?? புரியாதுன்னு போகலை. சரி அவ்ளோ தூரம் வந்துட்டோம் நம்ம சின்ன தளபதி நடிச்ச படத்தை பார்ப்போம்னு உள்ளே என்டர் ஆயிட்டோம்.

சின்ன தளபதினு கார்டு போடும் போதே தலையெல்லாம் சுத்திச்சு...சீ சீ..மப்புல்ல இல்லங்க,சாதாரணமாவே தான்!முதல் சீனே விவேக் இன்ட்ரோ எனக்கு கொஞ்சம் டவுட் ஆயிடுச்சு,அதாவது படம் போடுறாங்களா இல்ல ஆதித்யா டி.வி. காட்டுராங்கலானு....படத்தில் விவேக்வோட அக்கபோர் செம பிளேடு!!என்ன கதையா?? இருபது வருஷம் முன்னாடி உள்ள கதை...பயங்கரமான கதை...!!

இளைய,புரட்சி தளபதினு ரெண்டு பேருமே பன்ச் குறைச்சி சும்மா இருக்கும் போது நம்ம சின்ன தளபதி மட்டும் அறிமுக காட்சியில் இருந்து பஞ்ச் பஞ்சா உட்டு உடம்பை பஞ்சர் ஆக்குகிறார்.பஞ்சர்னு சொன்ன உடனே இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது......


நம்ம பரத் ஒரு பைட் சீன்ல நின்னுக்கிட்டு இருக்கிற பைக்கின் டயரை சும்மா ஒரு கையில் இழுத்து எடுத்து வில்லன் மேல வீசுவாரு பாருங்க...சான்ஸ்ஏ இல்லை.எங்க வீட்டாண்ட உள்ள பஞ்சர் கடையில் அவசரத்துக்கு வண்டியை விட்ட பஞ்சர் பார்க்க
அரை மணி நேரம் ஆகுது.அங்க மட்டும் நம்ம சின்ன தளபதி இருந்தார்னு வைங்க அஞ்சு நிமிஷத்தில் பஞ்சர் பார்த்து வண்டியை கொடுத்துடுவாங்க...சும்மாவா திருப்புழி,
ஸ்பேனர் இல்லாம வண்டி டயரை அழகா கழட்டுறார். ஒரே இழுப்பில் எந்த வித உபகரணமும் இல்லாமல் டயரை கழட்டிய சின்ன தளபதி வாழ்க.....!!!

அடுத்த மொக்கையாக ஆந்திராகாரர் வேடத்தில் பாஸ்கர்.இவர் ஹோட்டல்லில் போடும் மொக்கைக்கு அளவே இல்லை.அப்புறம் பாட்டெல்லாம் செம....ஒரு ஒரு பாட்டுக்கும் தியேட்டர்ல இருக்கிற நாப்பது பேர்ல இருபது பேர் வெளியே போய்டுறாங்க....படத்தின் ஒரே ஆறுதல் சானாகான் மட்டுமே...!!சானாகான் இன்னும் திறமையை வெளிப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


அப்புறம் செண்டிமெண்ட் சீன்...நிழல்கள் ரவி பரத் தன் மகனில்லை என்று சொன்னதும் நமக்கு தண்ணி தாரை தாரையாக ஊற்றுகிறது....அம்பது ரூவா போச்சே என்று!!
பிரபு வருகிறார் ஊறுமுகிறார் அப்புறம் என்ன ஆனார்னு எனக்கு தெரியல....காரணம் படம் முடிய அரை மணி நேரம் முன்னாடியே வெளியே வந்துட்டேன்!!வெளியே வந்ததுக்கு
காரணம் வீட்டில் சின்ன வேலை இருந்ததுனு சொன்ன நம்பவா போறீங்க....

தியேட்டர் டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் இந்த வாக்கியத்தை
வைக்கணும்...மறந்துட்டாங்க போல....

WARNING:
(Beware of thambikku intha ooru..it contents mokkai comedy and bayangara
fights and it may harmful to ur health and purse too.)


தயவு செய்து இனிமே யாரும் ரஜினி,கமல் மற்றும் நல்லா ஓடிய படங்களின் டைட்டிலை யூஸ் பண்ண வேணாம்னு ஒரு சட்டம் போட்ட நல்லா இருக்கும்!!ரஜினியின் தம்பிக்கு
எந்த ஊரு படத்தின் தீவிர ரசிகன் நான்...ச்சே..இப்படி பேரை கெடுக்குரானுங்கலே.....

தம்பிக்கு இந்த ஊரு : வெளியே சொல்லிடாத....!

1.சுறா...(காஞ்சி போன எறா)

இந்த படத்த கங்கா தியேட்டர்ல தான் பாத்தேன்.நான் முதல் பாதியிலே வெளியே எந்திருச்சு வந்துருலாம்னு தான் யோசிச்சேன்...ஆனா முதல் ஷோ போனதால் வெளியே அடுத்த ஷோக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியாம அப்படியே உட்கார்ந்து இந்த மரண காவியத்தை ரசித்தேன்.....படத்துல எதுவுமே உருப்படி இல்ல.

Full Review :

சுறா - நடந்தது என்ன??

ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.சுறா படத்துக்கு நான் கிட்டதட்ட பல தடவை யோசிச்சு தான் டிக்கெட் எடுத்தேன்.ஆனா டிக்கெட் எடுத்த நாளில் இருந்து வீட்டில் கரண்ட் இல்லை. நேற்று உச்சக்கட்டமாக மூணு நிமிஷம் கரண்ட் இருக்கும் அப்புறம் அஞ்சு நிமிஷம் கரண்ட் இல்லாமா போய்டும்.இது போன்ற சில சம்பவங்கள் நடந்தது....! இது தான் BUTTERFLY EFFECT ஆ??


சுறா, நான் விஜய் கிட்ட இருந்து ஒரு யதார்த்த சினிமாவோ இல்லை உலக சினிமாவோ சத்தியமா எதிர்ப்பார்த்து இந்த படத்துக்கு போகலங்க.ஓரளவுக்கு மசாலா அப்புறம் காமெடி
இருக்கும் என்று நினைத்தேன்....ஆனால் சுறா ப்ரையில் மசாலா கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு ப்ளஸ் சுறாவும் ஐஸ் இல்லாம கெட்டு போச்சு.

சுறா - புட்டா?? லட்டா??

சரி கதைக்கு வருவோம்....விஜய் படத்தில் கதையா என்று நீங்கள் டர்ராக வேண்டாம்.சும்மா மேலோட்டமா சொல்றேன்... விஜய் ஒரு குப்பத்தில் தலைவர் ரேஞ்சில் இருக்கிறார் அந்த குப்பத்தை வளைத்து போட்டு தீம் பார்க் கட்ட மந்திரி கில் நினைக்கிறார்.ஆனால் விஜய் கில்லிடம் இன்னும் ஆறு மாசத்தில் குப்பத்தில் வீடு கட்டி காண்பிப்பதாக சாவல் விடுகிறார். வீடு கட்ட போறார்னு நீங்க விஜயை மேஸ்தரியோ இல்லை கொத்தனாரோ என்று நினைத்து விட வேண்டாம். மந்திரி கில்லிடம் இருந்தே பணத்தை எடுத்து...ஆஆவ்வ்......கண்ணை கட்டுதா...சரி ஸ்டாப் பண்ணிக்கிறேன்!!

விஜய், மாஸ் ஹீரோ அப்படின்னு பார்ம் ஆயிட்டாரு.பக்கம் பக்கமா வசனம் பேசி தள்ளுறார்,அதுவும் மக்களை பார்த்து அவர் பேசும் வசனங்கள்...ஐயோ! ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லியே ஆகணும் ரியாஸ் கான் விஜயை அடிக்க கை ஓங்கும் சீனும் அந்த வசனமும் மரண மாஸ்.ஆனா என்ன பல இடங்களில் தளபதி போக்கிரி மேனரிசத்தை பின்பற்றி இருக்கிறார்.


யார்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்??
தமன்னா, வழக்கமா விஜய் படத்தில் வரும் நாயகி தான். பாடல் காட்சிகளில் மட்டும் உதவி இருக்கிறார்.பாட்டில் எல்லாம் சின்ன trouser இல் வருகிறார் மற்றபடி பெருசா சொல்ல ஒண்ணுமில்லை.வடிவேலு, அண்ணே பயங்கர அவுட் ஆப் பார்மில் இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார் மற்ற காட்சிகளில் எரிச்சலே....!!

நாங்க பழைய படத்தை டி.வி.யிலோ இல்ல டி.வி.டி.யிலோ வாங்கி பார்த்துக்கறோம்னு டைரக்டர் கிட்ட சொல்லுங்கப்பா.... அரத பழசான காட்சிகளை தூசி தட்டி எடுத்து... ஏன்...??விஜய் தீடிர்னு அப்போ அப்போ மிமிக்ரி எல்லாம் செய்றாரு,அதுவும் கோர்டில் ஏதோ தீடிர்னு அசத்த போவது யார்னு பார்த்த மாதிரி இருந்துச்சி. வில்லனின் அல்லக்கையில் ஒருவராக வரும் இளவரசு வாயை திறந்தாலே விஜய் புகழ் பாடுகிறது(தலைவலிடா சாமி!!).தளபதி இந்த படத்திலும் நன்றாக பறக்கிறார் இதில் உச்சக்கட்டமாக மூன்று காட்சிகளில் பறந்து அடியாட்களை பொரட்டி எடுக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில் விஜய் எஸ்.எம்.எஸ் காமெடியை வடிவேலு யூஸ் பண்ணிருப்பாரு... அதாவது இன்டெர்வல் விட்டாங்கன்னு வெளியே வந்தேன்ப்பா பயங்கர அடி என்று விஜய்யிடம் வடிவேலு சொல்லுவார்....ஏன் என்று விஜய் கேட்பார்.. நான் படம் பார்த்தது பஸ்சில் ஆச்சே என்று வடிவேலு கூறுவார்.

ஒரே சந்தோசம் அம்பது ரூபாயோடும் அலைச்சல் இல்லமாலும் பார்த்தது தான்.

வரும் வருடங்களில் மேலும் பல மொக்கை படங்களை பார்க்க அளவுக்கு
அதிகமா பொறுமையும், சகிப்பு தன்மையும் கண்டமேனிக்கு வளர ஆண்டவனை வேண்டுகிறேன்....!!

1 comment:

Anonymous said...

Neenga oru mukiyamana padatha vitutinga...

ratha charithram...

it may b the no 1...

padu kokka..