Tuesday, January 18, 2011

Aadukalam Review by Siby


சேவல் சண்டையை மையமாக வைத்து ஒரு கிராமியக்கதையை இவ்வளவு சுவராஸ்யமாய் எடுக்க முடியும் என்று நிரூபித்ததற்காகவே இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.


மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி,போதையைக்கொடுத்து அதை தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் அவனை செய்ய வைக்கும் என்ற உளவியல் தத்துவத்தை அட்டகாசமாய் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.


ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் 30 நிமிடம் சேவல் சண்டையை திரில்லிங்காய் குடுத்திருப்பது புதுசு..படத்தில் தனுஷ் மதுரை வட்டார வழக்குத்தமிழ் பேசி ஜெயித்திருக்கிறார்.ஹீரோயின் புதுமுகம்.கிட்டத்தட்ட பிரியாமணியின் சாயல் (குரல் மட்டும் அதே மாதிரி கட்டைக்குரல்)நல்ல ஃபிகர்தான்.ஆங்கிலோ இண்டியன் மாதிரி காண்பித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.


அப்படி காண்பித்ததால் தேவை இல்லாமல் ஆங்கில வசனங்கள் பேச வைத்தது கிராமியக்கதைக்கு அந்நியம் சேர்க்கிறது.ஹீரோயினை தன்னை லவ் பண்ணுவதாக 2 பேர் சொல்ல ,ஏம்மா.. நீ யாரை லவ் பண்றே? என கேட்க ஹீரோயின் ஹீரோவைக் கை காண்பிக்கையில் தனுஷின் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் அருமை.
அந்த ஃப்ளோவில் வரும் டப்பாங்குத்துப்பாட்டு இசை அமைப்பாளர்,நடன இயக்குநர்,இயக்குநர் அனைவரும் கலக்கி எடுத்த கலக்கல் காக்டெயில் நடனம்.


அதே ஹீரோயின் அவன் என்னை உன்னை விட அதிகமா டார்ச்சர் பண்ணுனான்,அதனாலதான் உன்னை லவ் பண்றதா பொய் சொன்னேன் என பல்டி அடிக்கும்போது தனுஷின் சோக நடிப்பும் கன கச்சிதம்.

படத்தின் கதைக்களன் சேவல் சண்டைதான் என்பதையும்,கதை நடப்பது கிராமத்தில் தான் என்பதையும் அடிக்கடி நினைவுபடுத்த சேவலின் கொக்கரக்கோ சத்தத்தை அடிக்கடி யூஸ் பண்ணி இருப்பதும் அவசியமே இல்லாதது.


மனிதனுக்கு பந்தயம் ,போட்டிகளில்,சூதாட்டத்தில் ஏற்படும் வெறியை நிதர்சனமாய் காண்பித்து பார்வையாளர்களுக்கும் அந்த வெறியை ஏற்படுத்துவதில் இயக்குநருக்கு வெற்றியே..


சேவல் சண்டையை கிராஃபிக்ஸில் எடுத்தது தெரியாத அளவு ஒளிப்பதிவாளர் பாடுபட்டு அழகாக சமாளித்து இருக்கிறார்.படத்தில் வில்லனாக வருபவர் உண்மையில் ஒரு கவிஞர்.தாத்தா மாதிரி இருக்கும் அவருக்கு அவரை விட 30 வயது இளைய பெண் காதலித்து மனைவி ஆனவர் என்பது நம்பும்படி இல்லை.


அதே போல் தனது மனைவியை அவர் சந்தேகப்படும் சீனும் எடுபடவில்லை.ஆனால் அந்த சீனில் மனைவியாக நடிப்பவரின் பிரமாதமான நடிப்பு மைனசை போக்கி விட்டது.வசனகர்த்தாவாக இயக்குநர் ஜொலித்த இடங்கள்


1. இப்படியே தனியா பேசிட்டு இரு, சீக்கிரம் மெண்ட்டல் ஆகிடுவே...


சரி சரி விடம்மா.. உன் பையன் உன்னை மாதிரிதானே இருப்பான்..?


2. சும்மா ஜாலிக்காகத்தான் அவ கூட சுத்துனேன்.நேத்துதான் அவங்கப்பனைப்பார்த்தேன்,இனி நாமதான் அவளை கவனமா ,நல்லப்டியா பாத்துக்கோணும்னு அப்பவே முடிவு பண்ணீட்டேன்.
3. வேட்டைக்காரன் சாவு வீரமாத்தான் இருக்கோணும்,சாவே வந்தாலும் களத்துக்கு வெளில வந்த பிறகுதான் சாகனும்.


4.எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தப்ப என் கூடவே 10..15 வருஷமா இருந்த யாரும் ஹெல்ப் பண்ணலை,அவந்தான் உதவி செஞ்சான்..அவன் கெட்டவனா இருந்தா என்ன?


5. மனுஷனுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவன் சவுகர்யத்துக்கு மாறிடறான்,அவனோட அடிப்படை குணங்கள் மாறிடுது.


6. போலீஸ்காரன் புத்தி திருட்டு புத்தின்னு நிரூபிச்சுட்டியே,....


7. எனக்கு ரூ 2000 அவசரமாத்தேவைப்படுது.


சரி.. இந்தா..


ஓக்கே.என்னை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனியே.. அதுக்கு ஃபைனா இதை நினைச்சுக்கோ...


8. தோத்திடுவோம்னு பயமா?


பயமா? எனக்கா? நாங்க எல்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங்க் பண்ற ஆளுங்க


(இந்த வசன பஞ்ச்சுக்கு தியேட்டரில் இருந்த தனுஷ் ரசிகர்கள் 22 பேரும் கை தட்டுனாங்க)


9. ஏய்.. எதுக்காக இப்போ என் கையை பிடிச்சே?


அது வந்து... சேஃப்டியா கூட்டிட்டு போறதா வாக்கு குடுத்துட்டேன்,, அதான்..


10. இப்போ நான் யாருமே இல்லாத தனியனாய் ஆகிட்டேன்,அதிர்ஷ்டத்துல ஜெயிச்சவன் எல்லாம் என்னைப்பார்த்து எள்ளி நகையாடறான்.


11.எங்கப்பாவோட தோத்த முகத்தை என்னால பாக்க முடியல.


12, சந்தோஷமா இருக்கறதுக்கு காசு ,பணம்,ஸ்டேட்டஸ் எதுவும் தேவை இல்லைன்னு உன்னைப்பார்த்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.


13. என்ன ..தயங்கறே..கேளு..


வந்து.. வந்து.. ஒரு கிஸ் அடிச்சுக்கிட்டா?


14.இத்தனை நாளா நீ இங்கிலீஷ்ல பேசுனது புரியல.. இப்போ நீ தமிழ்ல பேசுறதும் புரியலயே..அது ஏன்?


15. என் பையன் உருப்பட்டுடுவான்.. என்னை சாகற வரை சந்தோஷமா வெச்சுக்குவான்னு நினைச்சேன்,, ம் ம்


16. எங்கம்மா உயிரோட இருந்தவரை அவங்க எவ்வளவு முக்கியமானவங்கன்னு எனக்கு தெரியாமயே போச்சு..


17. மத்த ஜாதிப்பையனோட ஓடிப்போன பொண்ணு கடைசி வரை சந்தோஷமா இருந்ததை சரித்திரம் இதுவரை பார்த்ததில்லை..


18. அப்பன்கறது யாரு? ஆத்தா கூட படுத்து பிள்ளை பெத்துக்கறது மட்டும் இல்ல..பிள்ளையோட கையைபிடிச்சுக்கூட்டிட்டுப்போய் இதுதான் உலகம்னு காண்பிக்கனும்,


19. அண்ணே... ஏண்ணே இப்படிப்பண்ணீட்டே..?நீ பண்றது எனக்குப்பிடிக்கலை..செத்துப்போன்னு சொல்லி இருந்தாக்கூட செத்துப்போயிருப்பேனே....ஏன் நம்பிக்கை துரோகம் பண்ணுனே..


20. நாங்க எல்லாம் அம்பானிக்கே அட்வைஸ் தர்றவங்க..நமக்கே ஐடியாவா?இயக்குநர் சறுக்கிய இடங்கள்


1.ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார்.


2. என்னதான் கிராமங்களில் சேவல் சண்டை ஃபேமஸ் என்றாலும் ,சேவல் டோர்ணமெண்ட்டை விட்டால் வேறு உலகமே இல்லாதது மாதிரி திரைக்கதை அமைத்த விதம்.


3.கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது...
4.குழந்தைக்கு காது குத்தும் சீனை இவ்வளவு க்ளோசப்பில் காட்ட வேண்டுமா?கிராமப்படங்கள் எல்லாவற்றிலும் இது வருகிறது.


5.படம் முழுக்க யாராவது லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது ஓவர்.
பாதி வசனம் புரியவே இல்லை.


6. படம் பெரும்பாலும் இரவில் தான் நடக்கிறது என்பதால் ஒளிப்பதிவிலும் இருட்டாக காட்ட வேண்டிய கட்டாயம். இதை தவிர்த்திருக்கலாம்.


பாடல்கள் ஏற்கன்வே ஹிட். 3 பாடல்கள் நல்லாருக்கு.


வெற்றி பெறுவது பெரிசில்லை..அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்...மனிதனுக்குப்பொறாமை கூடாது. எதிரியை அஹிம்சை வழியிலும்,சரண்டர் முறையிலும் வீழ்த்தலாம் என புது ரூட் போட்டு ஜெயித்திருக்கிறார்.சேவல் சண்டையை இவ்வளவு விஸ்தீரமாக காட்டியதில்லை என்ற அளவிலும் இது ஒரு முக்கியப்பதிவாக அமைகிறது.


ஆனந்த விகடன் மார்க் - 44
குமுதம் ரேங்கிங்க் - நன்று


ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்

ஆடுகளம் - அதகளம்

No comments: