Tuesday, January 18, 2011

Kavalan Review by Siby


காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் ஒன்லைன் தான் காவலன் கதையும்,
ஆனால் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.
தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான். கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன் கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.

வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில் அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால் முக்கிய இடத்தில் அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம் பொங்கல் வைக்கிறார்.

அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ் செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)

அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில் துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல் அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )

படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.
டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ் பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய் இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)

அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின் தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல் மறைத்து விடுகிறது.
காமெடியில், செண்ட்டிமெண்ட்டில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்

1. ராஜ் கிரண் - நம்பிக்கைக்கு உரியவன் எதிரியா இருந்தாலும் மன்னிப்பேன்.
ஆனா நம்பிக்கை துரோகி நண்பனா இருந்தாலும் மன்னிக்க மாட்டேன்.

2. பேர் வைக்கிறவன் குணம் தான் குழந்தைக்கு வரும்..

3. பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும்.

4. இனிமே டியூட்டிங்கற போர்வைல லேடீஸ் டாய்லெட் இருக்கற பக்கம் போவியா?

உங்க அனுமதி இல்லாம போகமாட்டேங்க எங்கேயும்.
.
சரி சரி போ..


எங்கே ?லேடீஸ் டாய்லெட்டுக்கா?

5. காலேஜ் புரொஃபசர் லிவிங்க்ஸ்டன் - எப்போ பாரு இவன் லேடீஸ் டாய்லெட் பக்கமே போறானே.. அப்படி அங்கே எனதான் இருக்கும்?நாமும் போய் பார்ப்போம்..

6. வடிவேல் - பார்வதி நம்பியார்னு சொல்றியே.. அது யாரு?

ஹய்யோ.. அது பார்வதி நம்பியார் இல்லை.. பிரைவேட் நெம்பர்.

7. விஜய் - நான்சென்ஸ்.. ஸ்டுப்பிட்

வடிவேல் - கூப்பிட்டீங்களா? பாஸ்?

விஜய் - இல்லை.. உன்னை திட்டுனேன்..

8. வடிவேலுவின் ஃபிகர் - பாடிகார்டு இப்போ யூனிஃபார்ம் போடல..


வடிவேல் - உனக்கு எப்படி தெரியும்?


ரூம்ல எட்டிப்பார்த்தேன்.

பாத்துட்டியா?எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் கிட்டேயே வந்து சொல்வே?


9. நல்லா வேலை செய்யறதால ஓனர் அவளை எப்பவும் பிரக்னெண்ட்டா வெச்சிருக்காரு..


என்னது?இங்கிலீஷ் தெரியலைன்னா பரவால்ல ,அதை கொலை பண்ணாதே.. பர்மணண்ட்டா வெச்சிருக்காரு.

10. எதுக்குடா அடி வாங்குனே?

நான் என்ன அமவுண்ட் குடுத்தா வாங்குனேன்?

சரி எத்தனை பேர் அடிச்சாங்க?

கவுண்ட் பண்ண எல்லாம் டைம் இல்ல.

11. டாக்டரை பார்க்கப்போறேன்.

அவர் பேர் என்ன?

அது அது.. வந்து பேர் தெரியாது.. ஆனா அவரை நான் டாக்டர் டாக்டர்னுதான் கூப்பிடுவேன்.

12. இப்போதான் முத தடவையா என் காதலியை பார்க்கப்போறேன்.

அவ அழகா இல்லைன்னா?

அழகுங்கறது கண்ணுக்குத்தானே.. மனசுக்கு இல்லையே?

13. நீதான் அவ கூட சண்டை போட்டுக்கிட்டியே.. மறுபடி அவ கூப்பிடுவான்னு எப்படி நம்பறே..?

உண்மையான காதல் இருந்தா கண்டிப்பா கூப்பிடுவா..

14. ஆசைப்பட்டு அடையறதுக்கு இது பணம் இல்ல. குணம்.பிறப்புலயே வர்றது.

15. அசின் -டெயிலி யூனிஃபார்ம் போட்டுட்டு வர்றியே ,நீ என்ன எல் கே ஜி யா?

விஜய் - ஹி ஹி


வடிவேல் - அப்போ நீ எல் கே ஜி மாதிரி பெரிய பெரிய் படிப்பெல்லாம் படிச்சிருக்கிறியா? சொல்லவே இல்ல..

16. விஜய் -அயன்பாக்ஸ்ல சூடு பட்டதுல என் பேண்ட்ல ஓட்டை விழுந்திடுச்சு,

வடிவேல் -எனக்கு ஒரு டவுட், அயன்பாக்ஸ் ஒண்ணுதான் இருக்கு, ஆனா ஓட்டை 2 இருக்கே.. எப்படி?

17. ஃபோன் அவருது.. டோன் என்னுது..

என் லவ்வர் உனக்கு எதுக்கு ஃபோன் தரனும்?

18. ஆசைப்பட்டு ஆட்டையைப்போட்டிருந்தாலும் பரவால்லை,ஓட்டையை போட்டுட்டியே பேண்ட்ல..

19. தேவை இல்லாம தேரை இழுத்து தெருவுல விட்டது நீதானா..?

20. குள்ள அமிதாப் - என் உயரத்துக்கு இந்த மலர் மாலை ஆர்ச் மாதிரி இருக்கு..பூச்செண்டு இவ்வளவு பெருசு எதுக்கு?என் சைஸுக்கு ரோசாப்பூவே அதிகம்.

21. அவன் யாரு? பாடிகாட்.


நீ யாரு? அவனுக்கு ஜோடிகாட்

22. நம்பறவங்களை அவன் சந்தேகப்பட மாட்டான்,ஏமாத்தவும் மாட்டான்.

23. வடிவேலுவின் ஆள் - நாங்க யாரும் பாடிகாட்டை முழுசா பார்த்ததில்லை.

வடிவேல் - நீ எதுக்கோசரம் அவனை அந்த கோலத்துல பாக்கனும்?

ஹய்யோ அவன் முகத்தை சொன்னேங்க..

யாரது? யாரது? பாட்டு நல்ல மெலோடி.பட்டாம்பூச்சி பாட்டில் விஜய் ஏன் எண்ணெய் வழிந்த முகத்தோடு வர்றார்னு தெரியல.

கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.

இந்தக்கதையில் ஆக்‌ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் விஜய்க்குப்பஞ்ச் டயலாக்ஸே இல்லை.குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கம் காமெடி ஃபிலிம்.

ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி செண்ட்டர்களில் 50 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்.

ஆனந்த விகடன் மார்க் - 42

குமுதம் ரேங்க் - OK.

காவலன் - விஜய்-ன் புதிய பரிமாணம்

1 comment:

gjrasi said...

Thala iam continously following your blog which is very good and interesting.

I've seen your review on Kavalan but it is not satisfactory i've seen all the 4 big movies released this pongal so the review provided by you for kavalan is not acceptable so please reprovide the review in your own style.

In kavalan please provide answers for the following.

1. Why at this time Vijay Mother with Vijay in his womb stand in the middle of the road and that time where nilalgal ravi the father of vijay went.

2. Rajkiran only did the auto driver job because most of the auto driver do the pickup for the delivery free of cost, so Rajkiran didnot do anything special inthis kind of situation why Vijay mother told very special about Rajkiran which is still a suspense.

3. How vijay can become soft by sending him to Rajkiran as Bodyguard body guard is like a rowdy job.

4. Why Vijay guard the ladies toilet which is a terror mokkai comedy.

5. in the climax scene a very old mokkai scene of after the vijay son throw the diary into the dustbin vijay see this behind train door and take the diary from dustbin is not acceptable.

6. Who is Vadivel how he knows vijay, because vijay not so big? (santhaam stylea sonna avaru enna avvlao periya appatakara?)

At last Kavalan is the mokkai film for this pongal even Ilaigan is better.