Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - சினிமா விமர்சனம்

இசையோ, பின்னணி இசையோ இல்லாமல் வெறும் சிறப்புச்சத்தங்கள்.ஒலிச்சேர்ப்பு மட்டுமே துணையாகக்கொண்டு ஒரு த்ரில்லர் படம் கொடுக்க தைரியமாக வந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனனுக்கு ஒரு ஃப்ளவர் பொக்கே கொடுத்துப்பாராட்டலாம் என்றால்.........


சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வருவது போல் பெண்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் ஒரு சைக்கோவின் கதை தான் இது என்பது கூட பரவாயில்லை. ஆனால் ஆண்ட்டி ஹீரோ சைக்கோ ஆனதற்கு இயக்குநர் வைத்திருக்கும் ஃபிளாஷ்பேக்... ஸாரி சார்...


மென்மையான காதல் படங்களை மயில் இறகு வருடுவது மாதிரியான காட்சி அமைப்புகளில் மனம் கவர்ந்த இயக்குநரா இப்படி? என அதிர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் பல காட்சிகளை கண் முன் நிறுத்தும் படி எடுத்ததற்கு என் வன்மையான கண்டனங்கள்.

மனவியல் நிபுணர்களின் கருத்துப்படி ஹோமோ வாக மாறும் ஒரு ஆண் பெண்களுடன் பழகும் வாய்ப்பு பெறாதவனாகவே இருப்பான் என்கிறார்கள். ஆனால் பல பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கும் கதையின் ஹீரோவின் அப்பா தனது சொந்த மகன் (அதுவும் வயது 8) கூடவே.....


இளவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் நலன் கருதிதான் எடுத்தேன் என 1000 சால்ஜாப்புகள் சொன்னாலும், BASED ON A TRUE STORY போஸ்டரில் போட்டு தப்பிக்கப்பார்த்தாலும் இந்த மாதிரி படங்கள் பார்ப்பவர்களின் மன நிலையை பாதிக்கும் என்பதால்,சமூகத்தில் குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடர இது பாதை வகுக்கும் என்பதால் இந்த மாதிரி படங்கள் தடை செய்ய்ப்பட வேண்டும் அல்லது மக்களே ஒதுக்க வேண்டும்.


16 வயதே ஆன ஹீரோ தனது கார்டியன் மாதிரி இருக்கும் பக்கத்து வீட்டு ஆண்ட்டியை பலாத்காரப்படுத்தும் இடமும்,ஒரு கட்டத்துக்கு மேல் அந்த ஆண்ட்டியும் இணங்குவது போல் காட்டுவதும் வன்மையாகக்கண்டிக்கத்தக்க சீன்கள்.


அதே ஆண்ட்டி தனது காதலனை கல்யாணம் பண்ணி வந்த பிறகு முதல் இரவிலேயே ஹீரோ கணவனை கொலை செய்வதை நேரில் பார்த்த பிறகும் போலீஸில் சாட்சி சொல்லாமல் ஹீரோவைக் காப்பாற்றுவதும் நம்ப முடியாத காட்சி அமைப்பு.


அதே போல் இறந்து விட்ட அந்த ஆண்ட்டி உயிருடன் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு வாழும் மனப்பிறழ்வு நோய் கொண்டவர் ஹீரோ என்பதெல்லாம் ஆங்கில சைக்கோ ( ஹிட்சாக்) படத்திலும், பாலு மகேந்திராவின் மூடு பனி படத்திலும், ஆர் .பார்த்திபனின் குடைக்குள் மழை படத்திலும் வந்தவை தான்.


சிட்டியில், பப்ளிக்காக ஹீரோ பெண்களை கடத்துவதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாக நடப்பதாக காண்பிப்பது கேலிக்கு உரியது. போலீஸ் எல்லாம் என்ன தான் பண்றாங்க?


அதே போல் அந்த ஆண்ட்டி பெட்ரூமில் உள்ள மெழுகுவர்த்தி கீழே விழுந்து தீ விபத்தில் மாட்டுவது நம்பும்படி இல்லை.ஹீரோவாக நடிப்பவரின் (வீரா) முக பாவனை, பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே.ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எதுவும் குறை சொல்லும்படி இல்லை. இசை இல்லாதது படத்தில் ஒரு குறையாகவே தெரியவில்லை.


ஷமீரா ரெட்டியின் நடிப்பும், அவரது பாடி லேங்குவேஜ்ஜூம் அருமை.ஆனால் திகில் படங்களில் நடிப்பதில் கலக்கிய நளினி( நூறாவது நாள் ),ஜீவிதா போல் வரவில்லை.


நகரத்தில் வாழும் இளம்பெண்களை எதற்கும் கவலைப்படாதவர்கள் போலவும் ,கற்பு பற்றிய எண்ணம் இல்லாதவர்கள் போலவும், குடும்பப்பாங்கான வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பது போலவும் வரும் காட்சி அமைப்புகள், வசனங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.


கண்டிக்கத்தக்க வசனங்களில் சில சாம்ப்பிள்ஸ்

1.பொண்ணுங்க.. பாருங்க... ரொம்ப அறிவாளியா இருப்பாங்க... ஆனா நெட்ல உக்காந்து பாருங்க.. சேட்டிங்ல வரிசையா விழுவாங்க..


2. அம்மா, அப்பா ரூம்ல பொண்ணு படிக்கறதா நினைப்பாங்க.. இவளுங்க ரூம்ல பசங்களோட சேட்டிங்க்ல இருப்பாளுங்க...


.3. ஏய்ய்... என் பேரு வீரா... நான் ரொம்ப நல்லவன்...இப்போ உன்னை ரேப் பண்ணப்போறேன்.


4.நீ தூங்குன பிறகு எப்பவாவது உன் ரூமுக்கு வந்து உங்கப்பா நீ ரூம்ல தான் இருக்கியா?ன்னு செக் பண்ணி இருக்காரா? என்னா நீ நல்லவன்னு தெரியும்... அதனால நீ என்ன பண்றே.. நைசா சுவர் ஏறி குதிச்சு என் ரூம்க்கு வர்றே....


5. இப்போ உன் கிட்டே வந்து ஐ லவ் யூ சொல்லி இருந்தா நீ என்ன பண்ணி இருப்பே.. அர்ஜூனை ஏற்கனவே லவ் பண்றேன்னு சொல்லி இருப்பே.. அதான்.. அவனை சீனை விட்டே தூக்கிட்டேன்..


6. இந்தா தண்ணீர்.. WASH YOUR MOUTH... I WANT TO KISS YOUR MOUTH.


நல்ல பேர் எடுக்க ரொம்ப நாள் ஆகும் , ஆனா கெட்ட பேரை சீக்கிரமா எடுத்துட முடியும் என கிராமங்களில் சொல்வார்கள். அது மாதிரி இத்தனை நாளாக கஷ்டப்பட்டு சேர்த்த நல்ல பெயரை இந்த ஒரு படத்தின் மூலம் இழக்கப்போகிறார் இயக்குநர்.


இதய பலஹீனம் உள்ளவர்கள், மென்மையான மனம் படைத்தவர்கள்,பெண்கள், மாணவ மாணவிகள்,கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படம் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்


ஏ செண்ட்டர்களில் 25 நாட்கள், பி செண்டர்களில் 20 நாட்கள் , சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.


ஆனந்த விகடன் எதிர்பார்க்கப்படும் மார்க் - 40


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

Thursday, February 17, 2011

கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின்சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
Sachin Ramesh Thendulkar
பிறப்பு - ஏப்ரல் 24, 1973


இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல்பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட் போட்டிகளில் விருதையும் இவர் பெற்றுள்ளார்.வாழ்க்கைக் குறிப்பு:

சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது.

1990-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் இது வரை 14,366 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 17,598 (டிசம்பர் 2010 வரை) ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார்.சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும், அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

கிரிக்கெட் வாழ்க்கை:

* 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.

* 1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.

* 1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார்

* 1998-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார்.அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.

* 1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது. அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.

* 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார். அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.

* 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணமானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

* 2005, டிசம்பர் 10 அன்று கவாஸ்கரின் டெஸ்ட் சதங்கள் (34) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.* 2007-2008-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.

* 2008 அக்டோபர்17-ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12273 (நவம்பர் 10, 2008 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 40 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார்.அதிக பட்ச ஓட்டம் 248*.

* ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2010 -இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

* 24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார்.

* ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134, டெஸ்ட் போட்டிகளில் 106. மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.

சோதனைகள்:
* இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.

* 2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார். ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது. இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.(இந்தியப் பாராளுமன்றம் வரை இந்த சிக்கல் விவாதிக்கப்பட்டது).

* 2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.

* 2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டை சதம் சாத்தியமில்லாமல் போனது.

விருதுகள்:

* இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 2008 -க்கான பத்ம விபூஷன் (Padma Vibhushan)

* ஐசிசி ஒருநாள் சர்வதேச உலக கோப்பை XI (ICC World ODI XI): 2004, 2007

* 2003 உலக கோப்பை கிரிக்கெட் (2003 Cricket World Cup) போட்டிகளில் தொடர் நாயகன்

* 1997ஆம் ஆண்டுக்கான விஸ்டென் கிரிக்கெட் வீரர் (Wisden Cricketer of the Year)

* இந்தியாவின் நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான 1999ல் பத்மஸ்ரீ விருது (Padma Shri)

* கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான சாதனைகளுக்காக 1994 -ல் இந்திய அரசால் அர்ஜூனா விருதால் (Arjuna Award) கௌரவிக்கப்பட்டார்

* விளையாட்டுத்துறை சாதனைகளுக்காக 1997-98 இந்தியாவின் உயர்ந்த கௌரவமான ராஜீவ்காந்தி கேல் ரத்னா (Rajiv Gandhi Khel Ratna) விருது அளிக்கப்பட்டது.

ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம்:

பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.இந்த மகத்தான சாதனை படைக்க சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே!

“இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.புகழுரைகள்:

* உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
* 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மெர்வ் ஹியூஸ் அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் “இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்று கூறியிருக்கிறார்.

* ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.

சச்சினின் விருப்பம்:

“இது எனது தனிப்பட்ட விருப்பமும் கூட… முறியடிக்க முடியாத சாதனை என்று எதுவும் இல்லை. முறியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனது சாதனைகளை இந்தியர் ஒருவரே முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…” என்றார் டெண்டுல்கர்.

சச்சினிக்கு 200 ரன்னுக்கு கிடைத்த ‌கௌரவம்:


சச்சின் சாதனை செய்ததை கவுரவிக்கும் விதத்தில் குவாலியரில் உள்ள ஹூரவாலி சாலைக்கு சச்சின் டெண்டுல்கர் பெயர் சூட்டப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

இனி கடைசி விருப்பமாக சச்சின் அணியில் இருக்கும் போதே உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான்...

2011 உலகக்கோப்பையை நம் அணி வென்று விட்டால் சச்சின் கிரிக்கட்டின் பிதாமகன் என்ற உச்சியில் இருந்து யாராலும் இறக்கமுடியாது...


- Siby (Hardcore Fan of SACHIN TENDULKAR)

Funny Cartoons - February 2011Wednesday, February 16, 2011

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்.....
1. கமல் - எனக்கு பொண்ணுங்களே பிடிக்காது..அப்புறம் முத்தம் தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.

2. ரஜினி - எனக்கு வயசு 20. என் அடுத்த படத்துல அனாகா என்கிற அம்லாபால் தங்கச்சிதான் ஜோடி.அரசியலுக்கு வருவேனா? வரமாட்டேனா ?அப்படிங்கறதை 2011 முடிஞ்சாக்கூட சொல்ல மாட்டேன்.

3. கே பாக்யராஜ் - எனக்கு டான்ஸ் நல்லா வரும்.சித்து பிளஸ் டூ படம் பட்டி தொட்டி எல்லாம் நல்லா ஓடுது.


4.தனுஷ் - தமிழகத்தின் அர்னால்டு நான்தான். பொங்கலுக்கு வர்ற ஆடுகளம் ஆக்‌ஷன்ல மைல்கல் படம்னு பேர்வாங்கும்.

5.ராஜ்கிரண் - எனக்கு ஜீன்ஸ் பேண்ட் ரொம்ப மேச்சிங்க் டிரஸ்.ராஜ் டிவி என்னுதுதான்னும்,கிரண் எனக்குப்பிடிச்ச நடிகைன்னும் சிலர் சொல்றாங்க அது உண்மை இல்ல.

6. சிம்பு - நான் என் லைஃப்ல ஒரே ஒரு பெண்ணை மட்டும்தான் லவ் பண்ணுவேன்.
7. விஜய்காந்த் - விருதகிரி எம் ஜி ஆர் நடிச்சு டைரக்ட் பண்ணுன உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி கலக்கிட்டு இருக்கு.அதனாலதான் விருதகிரி 10வது நாள் போஸ்டர்ல உலகம் சுற்றும் வாலிபன் பட ஸ்டில்ல்லை போட்டிருக்கேன்.

8. அஜித் - மங்காத்தா படம் ஒரு ஆத்தா செண்ட்டிமெண்ட் படம்.

9. பிரபுதேவா - என் அடுத்த படம் டைட்டில் ஒருவனுக்கு ஒருத்தி.

10. விஜய் - எங்கம்மா சத்தியமா நானும் ஒரு ஹீரோ,நம்புங்க

P.S : பிரபுதேவா ஸ்டில் போட்டு உங்களை கடுப்பேற்றவிரும்பவில்லை.அதுக்கு சப்ஸ்டிடியூட்டா...நயன்

Tuesday, February 15, 2011

THE MECHANIC - ஹாலிவுட் சினிமா விமர்சனம்
காதலர் தினத்தை முன்னிட்டு கோலிவுட்டில்தான் லவ் சப்ஜெக்ட் படம் எதையும் ரிலீஸ் பண்ணலை,, சரி ஹாலிவுட்டிலாவது ஏதாவது அஜால் குஜால் படம் ரிலீஸ் பண்ணுவாங்களா?ன்னு பார்த்தா அங்கேயும் ஜோடி சுத்தம் # விளங்கிடும். ( காதலர் தினத்தன்னைக்கு சீன் படம் பாத்தா சாமி குத்தமா? # டவுட்டு)


த ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் ஹீரோ நடிச்ச மெக்கானிக் தான் கடைசில சிக்குச்சு.ஈரோடு வி எஸ் பி - ஏ சி டி டி எஸ் ல படம் பார்த்தாலே கொண்டாட்டம்தான்.டைட்டில் கிளாமரா இல்லை. I THINK BETTER AS " THE PROFESSIONAL KILLER" ( இங்கிலீஷ் படத்துல அங்கங்கே இங்கிலீஷ்ல ஒரு லைன் இருக்கனுமாம் # விமர்சன விதி)


புரொஃபஷனல் கில்லரா வர்ற ஹீரோ ஏன்? எதுக்கு?ன்னு கேள்வி கேட்காம மேலிடம் சொல்ற ஆட்களை ஸ்கெட்ச் போட்டு போட்டுத்தள்ளிடற ஆளு .ஒரு இக்கட்டான நேரத்துல தன்னோட ஃபிரண்டையே கொலை செய்ய வேண்டிய சூழல்.அதுக்கான காரணம் முக்கியமான ஒரு ஆளை ஹீரோவோட ஃபிரண்ட் கொன்னுடறதா ஹீரோவோட மேலிடம் சொல்லுது.


ஆனா ஹீரோ தன்னோட ஃபிரண்டை கொலை செய்த பிறகுதான் உண்மை தெரிய வருது, தன்னோட ஃபிரண்ட் கொலை செய்ததா சொல்லப்பட்ட ஆள் உயிரோட தான் இருக்கார். . ஹீரோவோட மேலிடம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஹீரோவை வஞ்சித்து விட்டது.


இப்போ கொலை செய்யப்பட்ட ஹீரோவின் நண்பரின் மகன் ஹீரோவிடமே வேலைக்கு சேர்றாரு. அவருக்கு ஹீரோ தான் அப்பாவைக்கொன்னார்ங்கற விஷயம் தெரிய வர்றப்ப எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி ஹீரோவை பழி வாங்க திட்டம் போடறாரு.
திரைக்கதைல என்ன பாராட்ட வேண்டிய அம்சம்னா வில்லன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூட இருந்தே குழி பறிக்கப்போறாரா? வை கோ மாதிரி எதிர்த்து நின்னு பழி எடுக்கப்போறாரா? என்ற விஷயத்தை கடைசி வரை சஸ்பென்ஸாவே கொண்டு போனது தான்.


இதே கதையை தமிழ்ல எடுத்திருந்தா ஹீரோவுக்கு ஜோடி, 3 டூயட், அம்மா செண்ட்டிமெண்ட்னு போட்டு கொன்னெடுத்திருப்பாங்க.ஆனா ஹாலிவுட்ல கதை ஒரே நேர் கோட்டுல பயணிக்குது. ஹீரோயின் கிடையாது..(அப்போ மேலே உள்ள ஸ்டில்?அது சும்மா பத்து செகண்ட் சொர்க்கம்.( நன்றி - சுஜாதா)


நம்ம ஊர் பிரேமானந்தா மாதிரி ஒரு கேரக்டர் வருது. போலி மத குரு கேரக்டர். அந்த ஆளை போட்டுத்தள்ளும் சீன் செம விறு விறுப்பு.ஆன்மீகத்துல இருக்கற ஆளுங்க பெண்மீகத்துல -பெண் மோகத்துல கேடிங்க என்பது ஆல் ஓவர் வோர்ல்டுலயும் இருக்கு போல.
மேலே உள்ள ஸ்டில்0- தியேட்டர்லதான் நோட்டீஸ் போர்டுல இருந்தது.. தேடி தேடிப்பார்த்தும் படத்துல காணோம்.பொண்ணுங்க வாசனையே படாம படத்தை ஓட்டுன இயக்குநருக்கு என் வன்மையான கண்டனங்கள்.


படத்தில் தனது தந்தையை கொலை செய்த ஹீரோவிடம் வில்லன் கடைசி நேரத்துல எங்கப்பாவுக்கு ஏதாவது சான்ஸ் கொடுத்தீங்களா? என ஆரம்பித்து கேள்விக்கணைகளாக தொடுக்கும் இடங்களில் செண்ட்டிமெண்ட் டச்


படம் பார்க்கறவங்க ஹீரோ மர்டர் பண்ற அழகையே ரசிச்சிட்டு இருக்கறதால கூடவே இருக்கற நண்பரின் மகன் ஹீரோவைக்கொல்லப்போறாரா? என்ற பதட்டம் தோணவே இல்லை.இது திரைக்கதையில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல்.ஏதோ ஜாலியா ஒரு படம் பார்த்தமா? வந்தமா?ன்னு இருக்கறவங்க இந்தப்படம் பார்க்கலாம்.


படத்தில் ரசனையான வசனங்களில் நினைவில் நின்றவைகள்
1.யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.. ஆனா சுட்டது யார்னு மத்தவங்களுக்கு தெரியாமயே சுடறதுதான் புத்திசாலித்தனம்.
2. வீல் சேர்ல இருக்கறவனை சுட்டுக்கொல்றவன் எப்படிப்பட்ட கோழையா இருப்பான்,,?


3. வாழ்க்கைல எப்பவும் மனசு சொல்றதை கேளு.. சரியோ தப்போ அதுதான் பெஸ்ட்டா இருக்கும்.அதை ஃபாலோ பண்ண தயங்கக்கூடாது.


4.முடியாதுன்னு நீ எப்பவும் சொல்லக்கூடாது.. எதையும் முடிக்கறவன் நீ...


5. இன்னைக்கு நான் சாத்தானை சந்திக்க விரும்பறேன்..


இந்த ஊசியை போட்டுக்கிட்டா நீங்களே சாத்தானா ஆகிடுவீங்க.. ( விஷ ஊசி)


வழக்கமான ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் வரும் கார் சேஸிங்க் சீன்கள்,டமால்,டுமீல்,இதிலும் உண்டு. எதுவும் ஓவர் டோஸ் ஆகி விடாமல் சரியான கலவையில் தந்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

காதலர் தினம் ட்வீட்ஸ்

1. ஆஃபீஸ்ல யாருக்கும் இனைக்கு லீவ் இல்லைன்னு மேனேஜர் சொல்லீட்டாரு.. 8 மணி நேரம் பர்மிஷன் மட்டும் கேட்டுப்பாக்கலாமா? #முயற்சி


----------------------------------------------
2. லவ் ஃபெயிலியர்ஸ் கேஸூங்க யாரும் வருத்தப்படவேண்டாம்.மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ் மாதிரி தோல்வியும் தோல்வியும் ஜோடி சேரலாமே? #ஐடியா


-----------------------------------------


3. காதலர் தினத்துக்கு பச்சை டிரஸ் போடனுமாம். மறந்துட்டேன்,அதுக்குப்பதிலா பச்சை பச்சையா பேசிடலாமா? #டவுட்டு


--------------------------


4. பிட்டுப்படம் ஓடற தியேட்டர் எல்லாம் இனைக்கு காத்து வாங்கும்.பீச்ல, பார்க்ல லைவ் ஷோ பார்க்க லைன் நிக்குது.நான் ரெடி.. நீங்க?


------------------------------------------


5. கள்ளக்காதல் ஜோடியை எப்படி அடையாளம் காண்கறது?துப்பட்டாவால முகத்தை மட்டும் மூடி இருப்பாங்க #உல்லாசங்கோ,உற்சாகங்கோ.


--------------------------------------------------

6. காதலர் தினம்னு ஏன் பேரு? காதலி தினம் ஏன் இல்லை? பொண்ணுங்க தான் ஆள் மாத்துவாங்க#ஆணாதிக்கம் வாழ்க


-----------------------------------------------------
7. ஆர் கே செல்வமணி இன்னைக்கு வெளிலயே போக மாட்டாரு, ஏன்னா இன்னைக்கு ரோஜாக்கு டிமாண்ட் ஜாஸ்தியாம்# வாழ்க 14


------------------------------------------------


8. பீச்ல ஒரு பொண்ணும், 2 பசங்களும் ஜோடியா போனா அது த்ரீ வே லவ்.ஒருதலைக்காதல் அல்லது தறுதலைக்காதல்#கலியுகம்


---------------------------------------------------


9. இன்னைக்கு மட்டும் லேட்டா வீட்டுக்கு வந்தா சந்தேகப்படுவேன் - மனைவி.


நேரத்துலயே வந்தா? ஹி ஹி சந்தோஷத்துல மேல படுவேன்.


-------------------------------------------

10. காதலி உள்ளவன் ஒரே ஒரு ஃபிகரை தள்ளீட்டு போறான்.இல்லாதவன் பல

ஃபிகருங்களை கண்ணால அள்ளீட்டு போவான்.


-----------------------------------------------

காதலர் தினத்தன்று நடந்த காமெடி கலாட்டாக்கள்

1. சொர்க்கத்துக்கான டெம்ப்பரவரி பாஸ்வோர்டு - ஐ லவ் யூ டியர்.பர்மணெண்ட் பாஸ்வோர்டு - எனக்கு ஆளே கிடையாது.. எப்பவும் ஃபிரீ.


-----------------------------------------------------


2. லவ்வர் கிடைக்காதவங்க எல்லாம் கேப்டன் ஃபார்முலாவை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்.-# யாருடனும் கூட்டணி கிடையாது.


----------------------------------------


3. ஒருமை, பன்மை - இலக்கண குறிப்பு வரைக. ஒரு ஃபிகரை மட்டும்வெச்சே லைஃப் லாங்க் ஓட்டிடறது ஒருமை.... ஹி ஹி


------------------------------------------


4. டியர், நீ என்ன கலைஞரா? நான் என்ன மீனவனா? செத்தாக்கூட கவலை இல்லைங்கறியே.. # புலம்பல்


----------------------------------------------


5. என் காதலியும் சிங்களப்படை மாதிரி.. எல்லையை தாண்டினா கண்ணாலயே (GUN) சுட்டுடுவா..


------------------------------------------

6.காதலிக்கு ரெகுலரா குடுக்கற கிஃப்ட் தான் இன்னைக்கும்.சீப் & பெஸ்ட் முத்தம் தான் #காசு குடுத்து கிஃப்ட் வாங்க கையாலாகாதோர் சங்கம்.


---------------------------------------


7. பீச்சுக்கு என் தோழியையும் அழைச்சுட்டு வரவா?ன்னு கேட்ட காதலி கிட்டே நோ சொல்லீட்டேன்.# 1. இடைஞ்சல் 2. என் மனசு தோழி பக்கம் மாறிட்டா?


-------------------------------------


8.பீச்ல ஏகப்பட்ட லவ் ஜோடிங்க போன வருஷம் வந்ததுல 70 % ஜோடி மாறிடுச்சே..? # மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்லாதது.


--------------------------------------


9. தியேட்டருக்கு வர்ற லவ் ஜோடிகள்ல நல்ல ஜோடியை எப்படி அடையாளம் காண்பது?கார்னர் சீட்ல உக்காராம ஃபேன் க்கு கீழே உள்ள சேர்ல உக்காந்தா நல்ல ஜோடி.


-----------------------------


10. பீச்சுக்கு வர லேட்டாகும்னா ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாமே? - காதலி
இன்னைக்கு SMSக்கு 50 பைசா - கஞ்சக்காதலன்


----------------------------------------

பயணம் - ஹைஜாக் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்
மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம்.
தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை.


நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி.படத்தின் தயாரிப்பாளர் என்பதற்காக படம் முழுக்க வர வேண்டும் என்ற சில்லித்தனமான எண்ணம் எதுவும் இல்லாமல் கதை எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவு மட்டும் பிரகாஷ்ராஜ் வந்து போவது அழகு.

படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்க வைக்கும் அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். மனித நேயங்களுக்கும் , உறவுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் அவர் இந்த ஆக்‌ஷன் படத்தில் கூட தனது பாணியில் மாறாமல் டைரக்‌ஷன் டச்சை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.
பயணிகளாக வருபவர்களில் கவனிக்க வைப்பவர்கள் டீலா நோ டீலா ரிஷி, பாதிரியாராக வந்து குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் எம் எஸ் பாஸ்கர்,ஷைனிங்க் ஸ்டாராக வந்து கலகலப்பு ஊட்டும் பப்லு என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.
இடைவேளை வரை , படம் எதிர்பார்த்த, நமக்கு பழக்கப்பட்ட ஒரே திசையில் பயணிக்கும்பொது, கைதியான தீவிரவாதி விபத்தில் இறந்து விட்டார் என்றதும் திரைக்கதையில் புதிய திருப்பம்.. அதைத்தொடர்ந்து கதையின் போக்கில் ஏற்படும் மாற்றம் நல்ல திரைக்கதை ஆசிரியரின் உத்தியுடன் சொல்லப்படும் ட்விஸ்ட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன.

டம்மி தீவிரவாதியாக வருபவரின் பயந்தா கொள்ளித்தன நடிப்பு கலக்கல் ரகம். கிட்டத்தட்ட கோல்மால் படம் போன்ற KNOT.படத்தில் பாடல்களே இல்லாதது, தீவிரவாதிக்கு குழந்தையிடம் ஏற்படும் அன்பு அன்று அங்கங்கே அழகியல் அம்சங்கள்.வசனகர்த்தா நம் இதயங்களில் பயணம் செய்த இடங்கள்.

1.டைரக்டர் - சார்.. ஃபைட் சீன் ரெடி பண்ணீட்டேன். நீங்க 50 பேரை அடிக்கற மாதிரி...
ஹீரோ - இப்போ வர்ற பசங்க எல்லாம் 30 பேர் 40 பேரை சர்வ சாதாரணமா அடிக்கறாங்க..நான் அட்லீஸ்ட் 100 பேரையாவது அடிக்கனும்.ரெடி பண்ணுங்க. டவுட்னா கில் பில் ( KILL BILL) படம் பாருங்க.


2. ஊர்ல பல பேர் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட தங்களோட பேரை எழுதறாங்கன்னா அதுக்குக்காரணமே உங்களை மாதிரி நியூமராலஜிஸ்ட்ஸ்தான்.

3. சிவாஜி, சிரஞ்சீவி, நிரோத் எல்லாமே கூட்டுத்தொகை 5 வருது.. செம ஃபேமஸ்.
யோவ்,சிவாஜி, சிரஞ்சீவி, ஓக்கே.. எதுக்கு சம்பந்தமே இல்லாம நிரோத் இங்கே வருது..?


மக்கள் மத்தில பிரபலம் ஆகிடுச்சுல்ல?


4.என்னது? தீவிரவாதிங்களா? ஏன்னா..நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்களா?


ம்.. இருப்பாங்க.. ஏன். இப்போ உங்க வீட்ல இல்ல?


5. இந்தப்படம் ஓடுச்சா?


படம் பூரா ஹீரோதான் ஓடிட்டே இருந்தாரு..படம் ஓடலை.
படம்தான் பார்க்க நல்லாலைன்னா கதை என்னன்னு கேக்கறதுக்குக்கூட நல்லாலையே..?


6. பேசினா தீர்க்க முடியாத பிரச்சனைகள் இந்த லோகத்துல இருக்கோன்னா?


7.இந்தியாவுக்கே இப்போ நேரம் சரி இல்ல. கடக ராசி,, ஏழரை நாட்டு சனி நடக்குது..


ஏழு நாடு கூட ஏதோ ஒத்துக்கலாம். இந்த அரை நாடு... எங்கே..?


8. இந்த கோயில் , சாமி எல்லாம் இல்லைன்னா என்ன ஆகி இருக்கும்?


மக்கள் எல்லாம் ஒழுங்கா இருந்திருப்பாங்க.இருக்காங்காட்டிதான் என் மதம் உன் மதம்னு அடிச்சுக்கறாங்க.


9.இந்தியாவுல 40 கோடி பேர் கழிப்பறை இல்லாம கஷ்டப்படறாங்க.. அதைக்கட்ட வழியைப்பாக்காம இங்கே ஒரு கோயிலை இடிச்சு இன்னொரு கோயிலை எப்போ கட்டலாம்னு டைம் பார்த்துட்டு இருக்காங்க..


10. இன்னும் எத்தனை நாளுக்கு தீவிரவாதிங்க கிட்டே பேசிட்டே இருப்பீங்க?


11.இவனுங்களுக்கெல்லாம் ( அரசியல்வாதிகள்) எலக்‌ஷன் பற்றி மட்டும்தான் கவலை..பயம் எல்லாம், மக்கள் பற்றி கவலையோ ,அக்கறையோ கிடையாது.


12. முடிவு எடுக்க டிலே (DELAY) பண்றதும், தப்பான முடிவு எடுக்கரதும் ஒண்ணுதான்.


13. வியட்நாம் போர் ஒரு முடிவுக்கு வர காரணமா இருந்தது ஒரு ஜர்னலிஸ்ட் எடுத்த புகைப்படம்தான். அதே ஜர்னலிஸ்டாலதான் ஒரு நாட்டின் இளவரசியே அகால மரணம் அடைஞ்சாங்கங்கறதையும் மறந்துடக்கூடாது.( டயானா)


14 . தீவிரவாதி - நம்மோட முதல் எதிரி கண்ணீர், அடுத்தது செண்ட்டிமெண்ட்.


15. கம்ப்யூட்டர் படிச்சு அலுங்காம குலுங்காம அமெரிக்கா போயிடறீங்க.. ஏன் காஷ்மீர் போய் பாருங்களேன்.

16. சார்.. கூல் டவுன்..
உங்களை மாதிரி ஜோசியம் படிச்சிருந்தா கம்முனு உக்காந்திருப்பேன். காந்தியும், கம்யூனிசமும் ,காரல்மார்க்ஸூம் படிச்சுட்டனே.


17. என்னை அடிச்சு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு பார்க்காதே.. ஏன்னா என்னை என் மனைவி கூட அடிப்பா.. அவ்வளவு ஏன்? என் 4 வயசு பையன் கூட அடிப்பான்.


18. என் கிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்ல போய் 3 மாசம் இருந்துட்டு வந்துட்டே... ஆனா நான் ஒரு தடவை கூட உன் கிட்டே சாரி கேட்கலையே.. தப்பு சாரி கேட்டிருக்கனும்.


19. மழலை - அங்கிள் நீங்க யாரு? உங்க பேரு என்ன?


பேரே கிடையாது எங்களுக்கு.. நாங்க இறைவனால் படைக்கப்படற போராளிகள்.
காமெடியில் கை கொடுத்து ஹீரோ அடிக்கும் நக்கல் பஞ்ச டயலாக்ஸ்.
1.நீ அடிக்கடி அடிப்பியே ஒரு பாழாப்போன பஞ்ச் டயலாக்.. அதென்ன?


ரத்தத்துல வேணா பல குரூப் இருக்கலாம்.ஆனா மனுஷங்க எல்லாம் ஒரே குரூப்தான்.


2, நீங்க பார்க்கத்தான் சைலண்ட்.. ஆனா வயலண்ட்..போய் அட்டாக் பண்ணுங்க.


3. தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணுவேன்


ஆனா தாய் நாட்டுக்கு ஒரு ஆபத்துன்னா நானே ஓடிப்போய் காப்பாத்துவேன்..


மொழி,அபியும் நானும் படங்கள் போல எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடித்து விடும் என சொல்லி விட முடியாது.ஆனாலும் தமிழில் இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சியே..

ஏ, பி செண்ட்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடலாம். சீ செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்,

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

Wednesday, February 9, 2011

கைதான ராசாவை நக்கல் அடிக்கும் ட்வீட்டுகள்# ஒருவரை கைது செய்து நீதிமன்றம் தண்டித்தாலேயே அவர் குற்றவாளி என்றில்லை. இப்படிக்கு கலைஞர்

# நெஞ்சுவலி நாடகம் எப்போது? #ராசா கைது

# ஆ ராசா அரெஸ்ட்டு! தாத்தா 80 சீட்டு குடுக்காத்தால் சொக்கத்தங்கம் சோனியா செருப்படி!

# ராஜா ஜாமீனில் விடுதலை இது நாளைய தலைப்பு செய்தி? #டவுட்டு

# இதனால் தாத்தா-ஆத்தா கூட்டணியில் தற்போதைக்கு ஆத்தாவின் கை ஓங்கியிருக்கிறது. கூடுதல் தொகுதி ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும்..!

# அலைவரிசைக்கு ஒரு நியாயம் கிடைச்சிருக்கு.. இலங்கையின் கொலைவரிசைக்கு எப்ப நியாயம் கிடைக்கும்?

# இன்னிக்கி யாரு ஊட்ல பார்ட்டி, ஸ்டாலின் வீட்டிலா இல்ல மாறன் வீட்டிலா?# கனிமொழியின் காலர் டியூன்! ‘’கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே’’

# நாளை முரசொலியில் என்ன சொல்லி சமாளிக்கனும்னு இப்பவே கலைஞர் யோசிக்க ஆரம்பிச்சிருப்பார்... ஜெ டிவில இன்னைக்கு OT டபுள் மடங்கு சம்பளம்

# போயஸ் தோட்டத்துல அல்வா தர்றாங்களாம்...2011 ல ஜெ எலக்‌ஷன்ல ஜெயிச்சாலும் மக்களுக்கு அல்வாதானே.

Tuesday, February 8, 2011

Facts of Sex

* Song of Songs is a book in the Bible made up of poems about love and sex!

* There is a continuing debate in the scientific community as to whether female ejaculation and the G-spot exist.

* 15% of women who have G-spot orgasms report ejaculating liquid from the Skene’s glands.


* Axillism is the use of the armpit for sex.

* Athenian men would tie their foreskins to protect their glans penis during nude gymnastics.

* By age 25, 95% of American females had sex.

* Approximately 70% of married American women have had premarital intercourse.

* A “golden douche” is the act of urinating into an anus or vagina after ejaculation. This is both difficult and unsafe to perform.

* Homilophilia, feeling sexual arousal when listening to or giving public speeches (awkward).

* Men tend to fantasize more about scantily clad women than naked women.

* One of the most popular vibrators, the Hitachi Magic Wand, was actually supposed to be a muscle massager.

* The average circumference of an erect penis is 5 inches.

* 58% of women in a Penthouse survey said they would be willing to have sex w/a a stranger for $1 Million.

* 30%-50% of penis fractures are the result of intercourse, usually involving a woman-on-top position.

* “Vanilla” comes from the Latin word “vagina”.

* On rare occasions, menstrual cramps can cause orgasms.

* 34% of men admitted that they told lies to have sex.

* 10% of women admit that they have told lies in order to have sex.

* Only 41% of women said that they enjoyed sex their first time.

* 14% of men said they didn’t enjoy sex they first time they tried it.

* Married men masturbate more often than married women.

* Women with a Ph.D or Masters degree are twice as likely to be interested in a one-night stand than women with a bachelor’s degree.

* For right-handed men, the left testicle hangs lower, and vice versa.

* In a typical lovemaking session, a man thrusts 60-120 times.

* Men under the age of 40 can typically achieve a full erection in 10 seconds.

* 43% of women have had anal sex.

* The average woman will have sex 3,000 times in her lifetime.

* For married couples, sex lasts an average of 17 minutes. For cohabiting couples, 25 minutes.

* One ancient Egyptian pregnancy test was to have a woman urinate on a bag of wheat. If the seeds sprouted, she’s pregnant!

* Most male orgasms in one hour: 16.

* Most female orgasms in one hour: 134.

* Cigarette smoking and tight pants can both cause temporary impotence.

* A whale penis is called a “dork”.

* Men are more attracted to women with enlarged pupils.

* Most straight men don’t notice when their partners orgasm.

* More women talk dirty during sex than men.

Monday, February 7, 2011

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்
காதல் கதையை எந்த அளவு அழகியல் ரசனையோடு சொல்ல முடியுமோ அதே மாதிரி ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரியையும் மென்மையாக சொன்னதற்காகவே இயக்குநர் மிஷ்கின் பாரட்டுக்கு உரியவர் ஆகிறார்.சாஃப்ட் ஹீரோ என பெயர் எடுத்த யதார்த்த நாயகன் சேரன் இந்த படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க்கின் எல்லை வரை சென்று அடக்கி வாசித்திருக்கிறார்.


படத்தோட கதை என்ன?சொல்றக்கு தர்மசங்கடமா இருந்தாலும் முடிஞ்சவரை கவுரவமான வார்த்தைகளில் சொல்றேன்.பெண் சுகத்தை அனுபவிக்க முடியாத 60 வயசு கிழ போல்ட்டுங்க ஆள் வெச்சு பெண்களை கடத்திட்டு வந்து குடோன்ல தங்களோட அடியாளை விட்டு ரேப் பண்ண சொல்லி லைவ் ஷோ பார்க்கறாங்க. அவங்க காரியம் முடிஞ்சதும் கொலை பண்ணிடறாங்க.. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட பெற்றோர் அந்த கும்பலை பழி வாங்கறாங்க..


கேட்கறதுக்கு சங்கடமா இருக்கற கதையோட ஒன்லைனை இயக்குநர் முடிஞ்சவரை ரொம்ப டீசண்ட்டா சொல்லி இருக்கார்..வெல்டன் ஒர்க்.


படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல இருந்தே தன்னோட ஃபேவரைட் டாப் ஆங்கிள் ஷாட்ஸ்,ஒயிடு ஆங்கிள் ஷாட், சிம்பாலிக் ஷாட்னு இயகுநர் அசத்தறார்.சேரன் அறிமுக காட்சி எந்த பில்டப்பும் இல்லாம சாதாரணமா இருக்கறதே நல்லாருக்கு.. ஆனா அவரால ஒரு சி பி சி ஐ டிக்கான தோரணை, பாடி லேங்குவேஜ் இதெல்லாம் மெயிண்ட்டெயின் பண்ண முடியல.உயரம் கம்மி,எக்சசைஸ் பாடி இல்லை.. இருந்தும் இவரைக்களம் இறக்கியது துணிச்சல்தான்.சேரன் மேலதிகாரியையோ,சக ஆஃபீசர்ஸையோ மதிக்காம தெனாவெட்டா நடக்கறது விக்ரம் பட கமல் நடிப்பை ஞாபகப்படுத்துது...அப்படி அவர் நட்ந்துக்க காரணம் தன்னோட தங்கை கடத்தப்பட்டதுதான் என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.


அதே போல் ஒரு போலீஸ் ஆஃபீசருக்குண்டான டிரஸ்ஸிங்க்சென்ஸ் என்ன?என்பதை சேரன் சரியாக அப்சர்வ் பண்ணாமல் இருக்கிறார்
(அன் யூனிஃபார்ம்ல இருக்கறப்ப கட்டம் போட்ட சட்டை போடறது, சட்டையின் முதல் பட்டனை கழட்டி விட்டிருக்கறது...இப்படி..)


படம் போட்ட முதல் 25 நிமிஷங்களுக்கு பின்னணி இசை ஒரு ஆர்ட் ஃபிலிமுக்குண்டான இசை தான். இயக்குநரின் அபார தன்னம்பிக்கை அசர வைக்கிறது.


போலீஸ் என்கொயரி நடத்தும்போது சேரனின் பாடி லேங்குவேஜ் அழகு..அவர் என்கொயரியில் உதவி செய்த சிறுமிக்கு கை கொடுத்து நெகிழ்வது பரவசமான காட்சி.

எல்லாவற்றையும் விட முக்கியமாக சிலாகித்து சொல்ல வேண்டிய விஷயம் இடைவேளைக்கு முன் வரும் அந்த ஃபைட் சீன் தான்.. நடை பாதை (பாலம்)யில் சேரன் நடந்து வர்றார்.. வில்லன் குரூப் கத்திகளுடன் வர சாதாரணமாக சமாளிக்கும் அந்த சீன் ஃபைட் மாஸ்டர், இயக்குநர்,ஹீரோ,ரீ ரெக்கார்டிங்க் என கலக்கலான காக்டெயில் உழைப்பு.அதுவரை ஒரு இறுக்கத்துடன் செல்லும் படம் அப்போதுதான் முதல் அப்ளாஸை அள்ளுகிறது.


வீட்டுக்குள் கூட சேரன் ஷூ போட்டுட்டே சுத்தறது ஏன்?னு தெரியல.அப்புறம் சில சீன்களில் பிரவுன் கலர் ஷூ போட்டு வரும் சேரன் அடுத்த ஷாட்டில் பிளாக் கலர் ஷூ போட்டு வர்றார். கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்..


பிரமாதமாக எதிர்பார்க்கப்பட்ட கன்னித்தீவுப்பொண்ணா? கட்டழகு கண்ணா? பாட்டு செம டப்பாங்குத்து... அந்த பாட்டுக்கான டான்ஸ் மூவ்மெண்ட்,குதூகல இசை எல்லாம் கலக்கலாக இருந்தும் அந்தப்பாடல் வலுக்கட்டாய இடைச்செருகல் என்பதால் ஆடியன்சை பிரமாதமாக கவரவில்லை.அது திரைக்கதையின் இறுக்கத்துக்கு கிடைத்த வெற்றி.


அந்தப்பாட்டில் குரூப் டான்சர்கள் டீசண்ட்டாக புடவையில் வருவதும்,அவர்கள் கூந்தலோரம் ஒரு பெரிய பூ சூடி வருவதும் வித்தியாசம்.


அதே போல் என்கொய்ரியின் போது சேரன் டான்ஸ் கிளாசில் டீச்சரிடம் விசாரணை செய்கையில் பின்புலத்தில் தெரியும் ஃபிகர்கள் செம ஃபிரஸ்..( இந்த களேபரத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேட்குது?)


வழக்கமாக ஆங்கில படத்திலும் சரி, தெலுங்கு,தமிழ்ப்படங்களிலும் சரி..வில்லன் குரூப் ஜீப்களில் வந்து இறங்கும்போது காது ஜவ்வே கிழிஞ்சிடும்..ஆனால் இதில் சைலண்ட்டாக காண்பித்தே டெம்ப்போவை ஏற்றுகிறார்கள்.


ஒய். ஜி மகேந்திரனுக்கு வித்தியாசமான ரோல். கேரக்டருக்காக மொட்டை அடிச்சு நல்லா நடிச்சிருக்கார்.அவரது மனைவியாக வருபவர் க்ளைமாக்சில் கத்திக்குத்து பட்டதும் காட்டும் துடிப்பும், ரீ ஆக்‌ஷனும் அபாரம்.


ராஜேஷ் குமார் மாலை மதியில் எழுதிய வானவில்லுக்கு 1000 நிறங்கள் நாவலில் இருந்து சில சீன்கள் சுடப்பட்டுள்ளது. ( ராஜேஷ்குமாரே எந்த ஆங்கில நாவலில் இருந்து சுட்டரோ?) குறிப்பாக ஒய் ஜி மகேந்திரன் தன் குடும்பத்தில் உள்ளது போலவே உயரம் எடை உள்ள அநாதை பிணங்களை ரெடி பண்ணீ கொளுத்திப்போடும் இடம்..

வசனத்துக்கு வேலையே இல்லாத இந்தப்படத்திலும் ஆங்காங்கே தென்பட்ட வசன முத்துக்கள்


1. அந்தப்பொண்ணு காணாம போயிட்டா....


இல்லை ஊரை விட்டு ஓடிப்போயிட்டா.. காதலனோட போறவ சொல்லீட்டா போவா?
2. கடைசில போலீஸ் விசாரனைல அவன் உண்மையை ஒத்துக்கிட்டான்.


ஒத்துக்கிட்டானா? ஒத்துக்க வெச்சீங்களா?


ம் , ஜட்ஜ்மெண்ட் கொடுத்த ஜட்ஜை போய் கேளுங்க...
3. அந்தப்பொண்ணுக்கு என ஆச்சு?


ஏம்மா பொண்ணு , உனக்கு எதும் ஆகலையேன்னு சந்தோசப்படு.


4. நான் ஒரு போலீஸ்காரன். இன்னொரு போலீஸ்காரன் கிட்டே தோக்க மாட்டேன்..( அப்போ திருடன் கிட்டே தோத்தா பரவால்லியா?)
5. என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?


நீங்க பெத்த குழந்தைக்கு குழந்தை பெத்துக்கற உறுப்பு சிதைஞ்சு போச்சு...


6. வன்முறைன்னா என்னன்னே தெரியாத அந்த குடும்பம் வேட்டைக்கு தயார் ஆச்சு..
7. அமைதியான சூழல்ல வாழ்ந்த அந்த குடும்பத்தை அசிங்கமான இடத்துல புதைக்க வேண்டியதா போச்சே..


8. வாழ்க்கைன்னா என்ன? நரகம் தான் வேற எதுவும் இல்ல..(LIFE IIS NOTHING BUT HELL)


9. என் கண்ணுக்கு அதெல்லாம் தெரியல. எனக்கு என் தங்கை வாழ்க்கைதான் முக்கியம்.


உன் சுயநலத்துக்காக சட்டத்தை அடகு வைக்க சொல்றியா?


10.கொஞ்சூண்டு அறிவை வெச்சுக்கிட்டு இவ்வளவு தப்பு பண்ண ஒருத்தனால முடிஞ்சா இவ்வளவு அறிவை வெச்சு நாங்க எவ்வளவு பண்ணலாம்?


இயக்குநர் சறுக்கிய இடங்கள்


1. க்ளைமாக்சில் கத்தியால் வில்லனை 4 தடவை இப்படியும் அப்படியும் வெட்டுவது போல் வரும் சீனில் ரத்தம் பக்கெட்டில் இருந்து வருவது போல் வ்ந்துட்டே இருக்கு..


2. ஒரு சீனில் சேரனுக்கு முன் 3 போலீஸ் ஆஃபீசர்ஸூம் கை கட்டி நிக்கறாங்க..


3 ஒரு சீனில் அண்டர் கிரவுண்டில் காலை 6 மணீக்கு கூட்ட வரும் பெண் டெட் பாடியை பார்த்து அளறும் சீனில் மஞ்சள் வெயில் பிரகாசமாக அவ்வளவ் வருமா?


4. ஆரம்ப அறிமுக சீனில் சேரன் தன்னுடன் ஜூனியராக வரும் 2 ஆஃபீசர் பர்சனல் ஃபைலை குப்பைத்தொட்டியில் போடும் சீன்.


இயக்குநர் சபாஷ் வாங்கும் இடங்கள்


1. ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படத்துக்கு காதல், டூயட், காமெடி எல்லாமே அநாவசியமே என்பதை உணர்ந்து கலக்கலாய் திரைக்கதை அமைத்தது.


2.பல சந்தர்ப்பங்களில் ஃபைட் சீன் வைக்கும் வாய்ப்பு இருந்தும் அவற்றை தவிர்த்து விட்டு ஒரே ஒரு சீனில் மட்டும் ஃபைட் வைத்தது..


3.பின்னணி இசை புலனாய்வுப்படத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து வேலை வாங்கியது.


4. பெண்களும் பார்க்கும்படி பாலியல் பலாத்கார கொலைக்கதையை எடுத்தது
சி செண்ட்டர் ரசிகர்களுக்கு படம் அவ்வளவாக பிடிக்காது. ஏ செண்ட்டர்களில் 70 நாட்கள் ஓடும் ( ஏப்ரல் 14).. பி செண்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடும்.


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 42


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்வழக்கமான கிராமத்துக்காதல் கதைதானோ என நினைக்க வைக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகள் சலிப்பைத்தந்தாலும் இடைவேளைக்குப்பிறகு திடீர் என கதை ட்ராக் மாறுகிறது.அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்றைத்தான் இயக்குநர் பெரிதாக நம்பி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.


4 நண்பர்களின் அறிமுகமும் ,அவர்களது குறும்புத்தனத்தையும் இன்னும் நல்லாவே சொல்லி இருக்கலாம்.களவாணி விமல் தான் ஹீரோ ,ஆனால் அவர் ஏனோ தானோ என்றுதான் நடித்திருக்கிறார்.அதே போல் திரைக்கதை இடைவேளை வரை ஒரு சீரான இலக்கில்லாமல் காட்டாறு போல , டாக்டர் ராம்தாஸின் கடைசி நேர தேர்தல் கூட்டணி முடிவைப்போல தடுமாறுகிறது.


ட்ரெயிலரில் காட்டப்பட்ட வடிவேல் படத்தில் 10 செகண்ட் மட்டுமே வருகிறார் என்பது ஆடியன்ஸூக்கு முதல் ஏமாற்றம்.அப்புறம் பெஸ்ட் கவுண்ட்டர் டயலாக் மேன் என பெயர் பெற்ற இயக்குநர் கம் காமெடியன் சிங்கம்புலியை சரியாக யூஸ் பண்ணாமல் விட்டது... ( கேட்டால் படத்தில் ஃபுட்டேஜ் பிராப்ளம் .. என சால்ஜாப்பு பதில் ரெடியாக இருக்கும்.)
அழகு மயில் மாதிரி வரும் அஞ்சலியைக்கூட ஜஸ்ட் லைக் தட் யூஸ் பண்ணி இருக்காங்க. விமல் -அஞ்சலி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை இன்னும் கவிதையாக,டீட்டெயிலாக காட்டி இருக்கலாம்.


படத்தோட கதை என்ன?மதுரையில் 4 நண்பர்கள்.அந்த ஊர்ப்பெரிய மனுஷனோட பையன் ஜவுளிக்கடைல பெண்கள் டிரஸ் மாத்தறப்ப செல்ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து அந்தப்பெண்களை மிரட்டறான்.நம்ம ஹீரோ அவனை துவைச்சுக்காயப்போட்டுடறாரு.வில்லனோட அப்பா ஹீரோவை சொந்த விரலாலயே கண்ணை குத்த வைக்கற மாதிரி ஹீரோவோட நண்பர்களை விட்டே அவனை முடிச்சுக்கட்ட முடிவு பண்றாரு..
இந்த KNOT டை கையில் எடுத்துக்கிட்டு இயக்குநர் நம்மை (ஆடியன்ஸ்) முடிச்சுகட்ட முடிவு பண்றாரு.
படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மதுரையோட அழகை ஒரு ரவுண்டு காட்டறாங்க.. அடடா...அதே போல் ஆவணி மாசம் அத்தை பொண்ணு தாவணிபோட்டா கொண்டாட்டம் தான் செமயான கிராமிய கலை நுட்பங்களை உள்வாங்கி வெளிப்படுத்தும் தெம்மாங்கு கலக்கல் ஹிட். ( நமக்கு அத்தை பொண்ணு தாவணி போட்டாலும் சந்தோசம்தான், போடலைன்னாலும் சந்தோஷம்தான்)


அந்தப்பாட்டில் அஞ்சலியை தன்னோடு ஆடுவதாக ஒருத்தன் கற்பனை பண்றப்ப ( அந்த ஒருத்தன் ஹீரோ அல்ல) அஞ்சலி பளார் என ஒண்ணு குடுத்து ஏண்டா கனவு சீன்னா எப்படி வேணாலும் கற்பனை பண்ணிக்குவியா? என கேட்டு மலையாள முண்டு சீன் டூ தமிழ் கலாச்சார தாவணி டிரஸ்க்கு மாறுவது இயக்குநரின் நகைச்சுவைத்திறனை வெளிப்படுத்தும் காட்சி.


ஆனால் மார்ச்சுவரியில் வேலை செய்யும் ஒரு நண்பன் ஒரு சீமந்த விழாவில் ( கர்ப்பமான பெண்ணுக்கு கட்டுச்சோறு விருந்து ஆக்கிப்போடுதல்)அந்தப்பெண்ணை பிணமாக கற்பனை செய்வது ஓவர் டோஸ் காமெடி..அது சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத சீன்.பூவான பார்வைகள், குறும்பான வார்த்தைகள் எனத்தொடங்கும் பாட்டு செம ஹிட் அடிக்கப்போகும் மெலோடி. ஆனால் அந்தப்பாட்டுக்கான பிக்சரைஷேசனில் (PICTURAISATION) இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். டான்ஸ் மாஸ்டர் கூட சுமாராகத்தான் அந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணி இருக்கர்.அந்த பாடலில் அஞ்சலி மட்டும் அழகு தேவதையாக வர்றார்.


வசனகர்த்தா நீங்கா இடம் பிடித்த இடங்கள்


1.இந்த உலகத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் நாம எல்லாருமே ஒருநாள் சாகப்போறோம் என்பதுதான். தெரியாத விஷயம் எப்போங்கறதுதான். அது தெரிஞ்சிட்டா எவனும் நிம்மதியா வாழ முடியாது..


( சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாயிடும் வசனத்தின் உல்டா)


2. பொண்ணா இது ?பன்னு மாதிரி இருக்கு.. வேற பொண்ணு ஃபோட்டோ காட்டுங்க.


இது?


வயக்காட்டு சோளக்கொல்லை பொம்மைக்கு சேலை கட்டி விட்டாப்ல ஒல்லியா இருக்கே..?


அது சரி.. இது ஐஸ்வர்யாராய் ஃபோட்டோ..இதையே குறை சொல்றே..


3. நானும் உலக அளவுல எத்தனையோ குடிகாரனுங்களைப்பார்த்திருக்கேன்.ஆனா சரக்கை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சறதை இப்போதான் பாக்கறேன்.


4. இவங்க எல்லாம் யாருன்னு தெரியுமா?


பெரிய கலெக்டரா?


ம்ஹூம்,என் நண்பன்,தோழன்.சிநேகிதன்..


மூணும் ஒண்ணுதாண்டா மூதேவி..


5.சரக்கடிக்கப்போறப்ப பாக்கெட்டை காலி ஆக வெச்சிருக்கனும் இல்லைன்னா கண்ட கண்ட நாய்க்கெல்லாம் நாம செலவு பண்ண வேண்டியதா போயிடும்.


6. கில்மாப்படத்துல சீன் போடறவன் கூட இவ்வளவு பில்டப் தர மாட்டான். நீ ஓவரா சீன் போடறே..


7.பொண்ணுங்களை லவ் பண்ணாலே இப்படித்தான் புலம்ப விட்டுடுவாளுங்க..


8.நாங்க ரொம்ப ராசியான ஆளுங்க.. அந்தப்பொண்ணு வயசுக்கு வந்தப்ப நாங்கதான் வந்து வேலை செஞ்சு குடுத்தோம்.. வளைகாப்புக்கும் நாங்கதான், அவ்வளவு ஏன் கருமாதிக்குக்கூட நாங்கதான் வந்தோம்.


9.அவனுக்கு மனைவியா வரப்போறவ ரொம்ப குடுத்து வெச்சவளா இருக்கனும். ஃபிரண்டையே இவ்வளவு கவனமா பாத்துக்கறவன் கட்டிக்கப்போறவளை எவ்வளவு நல்லா பார்த்துக்குவான்?


10 அப்பா.. இந்த 15 வருஷத்துல ஊரே மாறிடுச்சுப்பா...


ஹூம்.. மனுஷங்களும் மாறி இருந்தா பரவால்ல..


11. கலி யுகத்துல கடவுள் இல்ல. அப்படி இருந்தா இப்படி நான் கஷ்டப்படறதைப்பார்த்து சும்மா இருப்பானா?


நாம 140 கோடிப்பெர் இருக்கோம்.எல்லாத்தையும் ஒரே கடவுளால பாக்க முடியாது. எவன் ஒருத்தன் கஷ்டத்துல உதவி செய்யறானோ அவன் தான் கடவுள். ( தியேட்டரில் அப்ளாஸை அள்ளிய இடம்)


12 . டேய்... டேய்.. அவளை என்னடா பண்றே..?


புது ஹீரோயின் ரெடி பண்றேண்ணே..


அவளையே ரெடி பண்ற மாதிரி இருக்கு..


நண்பர்கள் கொலை வெறியுடன் ஹீரோவைத்தாக்க முயலும் சதி சீன்கள் எல்லாம் எடுபடவில்லை.நட்புக்கு அவமானம்.இந்த இடத்தில் இயக்குநர் சறுக்கி விட்டார். என்னதான் அதற்கான ட்விஸ்ட் இருந்தாலும் .....


படம் ஏ செண்ட்டரில் ஓடறது கஷ்டம் தான். பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்.


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

மின்சாரக்காதலி - இஷாகோபிகர் நடித்த ஜல்சா பட விமர்சனம் 17 +மின்சாரக்காதலி - என் சுவாசக்காற்றே படம் வந்த புதுசல அர்விந்த சாமியை விட இஷாகோபிகர் தான் அதிகம் பேரால ரசிக்கப்பட்டாங்க..(நாம எந்தக்காலத்துல ஹீரோக்களை ரசிச்சோம்?)அவங்க நடிச்ச ஒரு ஹிந்திப்படத்தை தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க.


சரி. .. மேட்டருக்கு வருவோம்...(மேட்டரா? யாரு யாருன்னு கேக்கப்படாது..)படத்தோட கதை என்ன?ஒரு பிரபல அட்வர்ட்டைசிங்க் கம் மாடலிங்க் கம்பெனியின் எம் டி...அவர் கம்ப்பெனில நம்ம இஷா மேடம் ரிசப்ஷனிஷ்ட்டா சேர்றாங்க...அப்புறம் அவரோட திறமையைப்பார்த்து (!!??)பர்சனல் அசிஸ்டெண்ட்டா பிரமோஷன் கொடுத்திடறாரு.2 பேருக்கும் ராங்க் கனெக்‌ஷன் ஆகிடுது.அப்பதான் கதைல ஒரு ட்விஸ்ட்.. இஷா மேடத்துக்கு இன்னொரு 25 வயசு இளைஞன் மேல காதல் வருது.. (காசா பணமா? காதல்தானே ,வந்துட்டுப்போகட்டும்)


பா ம க ராம்தாஸ் வெட்கமே இல்லாம தி மு க , அ தி மு க அப்படினு மாத்தி மாத்தி கூட்டணிவெச்சுக்கற மாதிரி இஷா மேடமும் 2 பேர் கூடவும் தெய்வீகக்காதல்ல ஈடுபடறாரு.(2 பேரை லவ் பண்ணுனா அது எப்படி தெய்வீகக்காதல் ஆகும்னு யாரும் கிராஸ் கேள்வி கேக்கப்படாது...)


அப்போ கதைல அடுத்த ட்விஸ்ட் .. கம்பெனி எம் டி க்கு ஒரு பொண்ணு.. அந்தப்பொண்ணு ஒரு பையனை காதலிக்கிறா... (பின்னே.. பொண்ணையே காதலிச்சா ஃபயர் ஆகிடுமே..)அந்தப்பையன் தான் ஏற்கனவே இஷா காதலிக்கற பையன்.

கே பாலச்சந்தர் பார்த்தா அவமானத்துலயே படம் எடுக்கறதை நிறுத்திடுவாரு.இப்போ கதைல என்ன ட்விஸ்ட்டுன்னா அந்தக்காதலன் திடீர்னு இஷா வை கழட்டி விட்டுடறான்.இஷாவுக்கு கோபம் வந்துடுது.. படையப்பா நீலாம்பரி கணக்கா வெகுண்டு எழுந்து அடைந்தால் அதே காதலன் இல்லாவிட்டால் காலன் அப்படினு சபதம் எடுக்கறாரு.(இடைவேளை ட்விஸ்ட்டாம்).. க்ளைமாக்ஸ்ல என்ன ஆகுதுங்கறதுதான் கதை.


இந்த படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் எதுக்கு குடுத்தாங்கன்னே தெரியல.சுத்தமா ஒரு சீன் கூட இல்லை. ( அசுத்தமாக்கூட இல்லை)


சீன் படத்தில் வந்த காமெடி காட்சிகள்


1. லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியா வரும் தொழில் அதிபர் பாவம் 2000 ரூபா மொபைல் ஃபோன் தான் வெச்சிருக்காரு.( ரொம்ப லோ பட்ஜெட் படம் போல)


2. புதுசா ஜாயின் பண்ணுன ரிசப்ஷனிஸ்ட் சர்ட் போட்டு ஃபுல்லா கவர் பண்ணி இருப்பாங்க.. நம்ம இஷா வந்து சர்ட் பட்டன் 3 ஐ கழட்டி விட்டுட்டு மாடலிங்க் கம்பெனினா இப்படித்தான் டிரஸ் பண்ணி இருக்கனும்பாரு..(வாழ்க தமிழ்க்கலாச்சாரம்)


3. நடிகை அசின் மேல என்ன கோபமோ ஹீரோயின் பேரு அசின் அப்படினு வெச்சிருக்காங்க..( அவங்ககிட்டே கால்ஷீட் கேட்டு கிடைச்சிருக்காது)


4. இஷாவின் கள்ளக்காதலன் பேசும் வசனம் செம காமெடி..


ஆமா.. உங்களை லவ் பண்ணுனது உண்மைதான். இப்போ அவளை லவ் பண்றேன்... என்னைத்தொந்தரவு பண்ணாதீங்க.. முதல்ல உங்க கூட இருந்தது பாவம், இப்போவும் உங்க கூட இருந்தா துரோகம்..( கண்டு பிடிச்சிட்டாருய்யா
கவர்னரு)

உலக திரைப்பட வரலற்றிலேயே முதல் முறையாக பிட்டு இல்லாத பிட்டுப்படத்துக்கான வசன அணீவகுப்பு

1. உங்க பொண்ணு தண்ணி அடிக்கறப்ப சரக்குல தண்ணீரை அதிகம் மிக்ஸ் பண்றாங்க.. ராவா அடிக்க சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்.


2.பார்ட்டிங்கறது என்ன? ட்ரிங்க்ஸ் + கிளாமர் இதான்.பொண்ணுங்க உடம்பை ஆம்பளைங்க வேடிக்கை பார்க்கற இடம்.


3. டாடி.. நான் ஒருத்தனை லவ் பண்றேன்.


அவன் எப்படி..?உன்னை மதிரியே அசிங்கம இருப்பானா?


4. சார்.. என்ன சொல்றீங்க?இவங்க உங்க பொண்ணா?


அதுல உனக்கென்னப்பா சந்தேகம்?5. கிளைமாக்ஸ் பஞ்ச் - நீ எனக்கு அம்மா முறையா? சக்களத்தி முறையா? நீயே முடிவு பண்ணு..


இந்தப்படம் தூத்துக்குடில 2 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு.. சீன் படத்துக்கு போகாத ஆளுங்க கூட அடடே 2 தியேட்டர்ல போட்டிருக்காங்களா? அப்போ படத்துல கண்டிப்பா ஏதவது இருக்கும்னு பேசிக்கறாங்க.. ( ஆஹா, என்ன ஒரு நம்பிக்கை)


இந்தப்படத்துல சீன் இல்லைங்கற வரலாற்று உண்மையை பதிவு செஞ்சதால யாராவது எனக்கு ஏதாவது அவார்டு குடுத்தா பிகு பண்ணாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.. ஹி ஹி

விகடனில் விஜய் பேட்டி - காமெடி

இந்த வார ஆனந்த விகடன்ல அட்டைல விஜய் ஃபோட்டோ + பேட்டி மேட்டர் பார்த்ததும் ஆஹா மாட்டிடுச்சுய்யா பதிவுக்கு ஒரு மேட்டர்னு துள்ளிக்குதிச்சேன்.புக் வாங்கி பார்த்தா விஜய் கேப்டன் ரேஞ்சுக்கு பொங்கி இருந்தார்.. வழக்கமா 2 லைன்ல திருக்குறள் மாதிரி பதில் சொல்றவர் இப்போ லியாகத் அலிகான் வசனம் எழுதிக்கொடுத்த மாதிரி நீள நீளமா பேசி இருக்கார்.. ( யார் இந்த லியாகத் அலிகான்? கேப்டனோட ஆஸ்தான வசனகர்த்தா)


அதனால விஜய்யை ரசிக்கறவங்க பேட்டியை ரசிக்கவும்.. காமெடியை ரசிக்கறவங்க கமெண்ட்டை ரசிக்கவும்.


1.முதல்ல எம் ஜி ஆர், அடுத்து ஜெயலலிதா,அப்புறம் கேப்டன், அந்த வரிசைல அடுத்து நான்..ஒரே ஒரு கேள்வி கேட்டார்னு தூக்கி எறியப்பட்டவர் எம் ஜி ஆர்,அவரோட இறுதி ஊர்வலத்துல கீழே தள்ளி விடப்பட்டவர் ஜெ, கல்யாண மண்டபம் இடிக்கப்பட்ட கேப்டன், அந்த வரிசைல காவலன் ரிலீஸ்க்கு முட்டுக்கட்டை போட்ட கூட்டம்..


இதுல எம் ஜி ஆருக்கு 136 படம் நடிச்ச அனுபவம் இருக்கு...அதுல பாதிப்படம் மக்களுக்கு உபயோகமான கருத்துக்கள் உள்ள படம்.. கேப்டன் படங்கள்ல 125 ல 60 படங்கள்ல ஏழைகள் பற்றி அரசியல் பற்றி பேசி இருக்காரு... நீங்க சங்கவிக்கு சோப்பு போட்டீங்க..படத்துல வில்லனுக்கு ஆப்பு வெச்சீங்க.. சீர்திருத்த கருத்து சொன்னீங்களா?

2. டிஷ்யூம் டிஷ்யூம் படங்களை இனி மேல் தொடர்ந்து தர மாட்டேன்..இனிமே வருஷத்துக்கு 2 படம் பண்ணுவேன்.. அதுல காவலன் மாதிரி கல கல காமெடி படம் ஒண்ணு, ஜிவு ஜிவுன்னு வேலாயுதம் மாதிரி ஆக்‌ஷன் படம் ஒண்ணு


எனக்கென்னவோ வேலாயுதம் ஜிவு ஜிவுவா? ஜவ்வான்னு டவுட்டா இருக்கு..3. இதுவரைக்கும் என் படங்கள் ரிலீஸ் டைம்லயோ, அல்லது ரிலீஸ் பண்றதுலயோ எந்த பிரச்சனையும் வந்ததில்லை..காவலன தான் ஃபர்ஸ்ட் டைம்

உங்க படங்கள் ரிலீஸ் ஆகறப்ப எந்த பிரச்சனையும் வராது.. ரிலீஸ் ஆன பிறகு நாங்க அதை பார்க்கறப்பதான் பிரச்சனை.ஹி ஹி


4. என் படத்தை வராம தடுக்கறவங்க அவங்க டி வி சேனல்ல மட்டும் என் படங்களை தொடர்ந்து ஒளி பரப்பறாங்களே.. ஏன்?. என் முகத்தை அழிக்கக்கூட என் முகமேதான் மறுபடி தேவைப்படுது.


இப்போ எப்படி உங்க பேட்டியை நக்கல் அடிச்சே நான் ஒரு பதிவைத்தேத்துன மாதிரி..விஜய்யை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிச்சொல்லியே ஆளாளுக்கு விஜய் பதிவு போடற மாதிரியா?5. தியேட்டர் அதிபர்களை காவலன் படத்தை திரையிட வேணாம்னு ஓப்பனா மிரட்டுனாங்க..எல்லாத்தடைகளையும் மீறி படம் ரிலீஸ் ஆச்சு. மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க..


வந்தாங்க.. ஓக்கே திரும்பி பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்தாங்களா?


6.முன்பெல்லாம் பொங்கல்,தீபாவளி வந்தா 8 ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்..தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கும். இப்போ அப்ப்டி இல்லை.. 3 படம்தான் ரிலீஸ் ஆகுது...


பின்னே என்ன?. முன்பெல்லாம் ஒரு படம் ஒரு தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்..இப்போ ஒரே ஊர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி ஒரே வாரத்துல ரிசல்ட் வெளில தெரியறதுக்குள்ள வசூலை அள்ளிடனும்னு நினைக்கறாங்களே..


7. ஒரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க தெரியுமா?அத்தனை அவமானங்களையும்,கேவலங்களையும் தாண்டித்தான் காவலனை ரிலீஸ் பண்ணுனேன்...


படத்தை தயாரிக்க எல்லாரும் சிரமப்படறாங்க ஓக்கே.. ஆனா அதை பார்க்க ரசிகர்கள் கூடத்தான் ரொம்ப கஷ்டப்படறாங்க...

8. நடிகனாகனும்னு ஆசைப்பட்டேன்,நான் நினைச்சதை விட மிகப்பெரிய இடத்துல உக்கார வெச்சிருக்காங்க இந்த ஜனங்க


இந்தத்தமிழங்க எப்பவும் இப்படித்தாங்க நீங்க அவங்களை நம்பி அரசியல்ல இறங்கி உள்ளதும் போச்சுடா... அப்படின்னு புலம்பாதீங்க..9.யார் பேச்சையும் கேட்டு எதிலும் உடனடியாக இறங்கிட மாட்டேன்

என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு ஒரு படத்துல பஞ்ச் டயலாக் பேசுனீங்க.. உங்க பேச்சையும் கேக்க மாட்டீங்க.. அடுத்தவங்க பேச்சையும் கேக்க மாட்டீங்கன்னா எப்படி..?10.யாருக்கு எப்போ எப்படி வெற்றி தோல்வியை தரனும்னு தீர்மானிக்கறது கடவுள்.சாதாரண மாமிச உடம்புள்ள எந்த மனித ஜென்மத்தாலயும் இதைத்தடுக்க முடியாது..


கலைஞரைத்தான் தாக்குறீங்கன்னு எங்களுக்கு புரியுது..எதுக்கும் பார்த்துக்குங்க..வேலாயுதம் ரிலீஸ் அப்பவும் பிரச்சனை பண்ணிடப்போறாங்க...


நிறையப்பேரு என்ன சொல்றாங்கன்னா இந்த பேட்டியை படிச்சு கலைஞர் கோபப்பட்டு கூப்பிட்டு மிரட்டுனா அடுத்த வாரமே நான் அந்த அர்த்தத்தில் பேட்டி அளிக்கவில்லைன்னு விஜய்யும், பிரிண்ட் போனப்ப ஒரு தவறு நேர்ந்து விட்டதுன்னு விகடனும் சால்ஜாப்பு சொல்லிடுவாங்க.. அப்படின்னு...