Tuesday, February 15, 2011

THE MECHANIC - ஹாலிவுட் சினிமா விமர்சனம்
காதலர் தினத்தை முன்னிட்டு கோலிவுட்டில்தான் லவ் சப்ஜெக்ட் படம் எதையும் ரிலீஸ் பண்ணலை,, சரி ஹாலிவுட்டிலாவது ஏதாவது அஜால் குஜால் படம் ரிலீஸ் பண்ணுவாங்களா?ன்னு பார்த்தா அங்கேயும் ஜோடி சுத்தம் # விளங்கிடும். ( காதலர் தினத்தன்னைக்கு சீன் படம் பாத்தா சாமி குத்தமா? # டவுட்டு)


த ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் ஹீரோ நடிச்ச மெக்கானிக் தான் கடைசில சிக்குச்சு.ஈரோடு வி எஸ் பி - ஏ சி டி டி எஸ் ல படம் பார்த்தாலே கொண்டாட்டம்தான்.டைட்டில் கிளாமரா இல்லை. I THINK BETTER AS " THE PROFESSIONAL KILLER" ( இங்கிலீஷ் படத்துல அங்கங்கே இங்கிலீஷ்ல ஒரு லைன் இருக்கனுமாம் # விமர்சன விதி)


புரொஃபஷனல் கில்லரா வர்ற ஹீரோ ஏன்? எதுக்கு?ன்னு கேள்வி கேட்காம மேலிடம் சொல்ற ஆட்களை ஸ்கெட்ச் போட்டு போட்டுத்தள்ளிடற ஆளு .ஒரு இக்கட்டான நேரத்துல தன்னோட ஃபிரண்டையே கொலை செய்ய வேண்டிய சூழல்.அதுக்கான காரணம் முக்கியமான ஒரு ஆளை ஹீரோவோட ஃபிரண்ட் கொன்னுடறதா ஹீரோவோட மேலிடம் சொல்லுது.


ஆனா ஹீரோ தன்னோட ஃபிரண்டை கொலை செய்த பிறகுதான் உண்மை தெரிய வருது, தன்னோட ஃபிரண்ட் கொலை செய்ததா சொல்லப்பட்ட ஆள் உயிரோட தான் இருக்கார். . ஹீரோவோட மேலிடம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஹீரோவை வஞ்சித்து விட்டது.


இப்போ கொலை செய்யப்பட்ட ஹீரோவின் நண்பரின் மகன் ஹீரோவிடமே வேலைக்கு சேர்றாரு. அவருக்கு ஹீரோ தான் அப்பாவைக்கொன்னார்ங்கற விஷயம் தெரிய வர்றப்ப எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி ஹீரோவை பழி வாங்க திட்டம் போடறாரு.
திரைக்கதைல என்ன பாராட்ட வேண்டிய அம்சம்னா வில்லன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூட இருந்தே குழி பறிக்கப்போறாரா? வை கோ மாதிரி எதிர்த்து நின்னு பழி எடுக்கப்போறாரா? என்ற விஷயத்தை கடைசி வரை சஸ்பென்ஸாவே கொண்டு போனது தான்.


இதே கதையை தமிழ்ல எடுத்திருந்தா ஹீரோவுக்கு ஜோடி, 3 டூயட், அம்மா செண்ட்டிமெண்ட்னு போட்டு கொன்னெடுத்திருப்பாங்க.ஆனா ஹாலிவுட்ல கதை ஒரே நேர் கோட்டுல பயணிக்குது. ஹீரோயின் கிடையாது..(அப்போ மேலே உள்ள ஸ்டில்?அது சும்மா பத்து செகண்ட் சொர்க்கம்.( நன்றி - சுஜாதா)


நம்ம ஊர் பிரேமானந்தா மாதிரி ஒரு கேரக்டர் வருது. போலி மத குரு கேரக்டர். அந்த ஆளை போட்டுத்தள்ளும் சீன் செம விறு விறுப்பு.ஆன்மீகத்துல இருக்கற ஆளுங்க பெண்மீகத்துல -பெண் மோகத்துல கேடிங்க என்பது ஆல் ஓவர் வோர்ல்டுலயும் இருக்கு போல.
மேலே உள்ள ஸ்டில்0- தியேட்டர்லதான் நோட்டீஸ் போர்டுல இருந்தது.. தேடி தேடிப்பார்த்தும் படத்துல காணோம்.பொண்ணுங்க வாசனையே படாம படத்தை ஓட்டுன இயக்குநருக்கு என் வன்மையான கண்டனங்கள்.


படத்தில் தனது தந்தையை கொலை செய்த ஹீரோவிடம் வில்லன் கடைசி நேரத்துல எங்கப்பாவுக்கு ஏதாவது சான்ஸ் கொடுத்தீங்களா? என ஆரம்பித்து கேள்விக்கணைகளாக தொடுக்கும் இடங்களில் செண்ட்டிமெண்ட் டச்


படம் பார்க்கறவங்க ஹீரோ மர்டர் பண்ற அழகையே ரசிச்சிட்டு இருக்கறதால கூடவே இருக்கற நண்பரின் மகன் ஹீரோவைக்கொல்லப்போறாரா? என்ற பதட்டம் தோணவே இல்லை.இது திரைக்கதையில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல்.ஏதோ ஜாலியா ஒரு படம் பார்த்தமா? வந்தமா?ன்னு இருக்கறவங்க இந்தப்படம் பார்க்கலாம்.


படத்தில் ரசனையான வசனங்களில் நினைவில் நின்றவைகள்
1.யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.. ஆனா சுட்டது யார்னு மத்தவங்களுக்கு தெரியாமயே சுடறதுதான் புத்திசாலித்தனம்.
2. வீல் சேர்ல இருக்கறவனை சுட்டுக்கொல்றவன் எப்படிப்பட்ட கோழையா இருப்பான்,,?


3. வாழ்க்கைல எப்பவும் மனசு சொல்றதை கேளு.. சரியோ தப்போ அதுதான் பெஸ்ட்டா இருக்கும்.அதை ஃபாலோ பண்ண தயங்கக்கூடாது.


4.முடியாதுன்னு நீ எப்பவும் சொல்லக்கூடாது.. எதையும் முடிக்கறவன் நீ...


5. இன்னைக்கு நான் சாத்தானை சந்திக்க விரும்பறேன்..


இந்த ஊசியை போட்டுக்கிட்டா நீங்களே சாத்தானா ஆகிடுவீங்க.. ( விஷ ஊசி)


வழக்கமான ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் வரும் கார் சேஸிங்க் சீன்கள்,டமால்,டுமீல்,இதிலும் உண்டு. எதுவும் ஓவர் டோஸ் ஆகி விடாமல் சரியான கலவையில் தந்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

No comments: