Thursday, March 3, 2011

சீடன் - சினிமா விமர்சனம்திருடா திருடி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் சுப்ரமண்யம் சிவா,தொடர்ந்து 5 படங்கள் ஹிட் கொடுத்த தனுஷ்,தனது 50 வது படம் என்ற லேபிளுடன் ஆர்வமாக இசை அமைத்த தினா என ஓரளவு எதிர்பார்ப்புடன் சென்றால்.......

லண்டன் போகப்போகும் வசதியான வீட்டு ஹீரோவுக்கு வீட்டு வேலைக்காரி மேல் லவ்.அதை தனது அம்மாவிடம் சொல்லாமல் காலம் கடத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கும்போது ,ஹீரோ - ஹீரோயின் இருவரையும் சேர்த்து வைக்கும் மாமா... சாரி மாமாங்கம் மாமாங்கமாய் தமிழ் சினிமா ஹீரோக்கள் ஏற்று நடித்த பூந்தோட்ட காவல்காரனாக தனுஷ் அந்த வேலையை கச்சிதமாக முடிக்க...ஸ் ஸ் அப்பாடா என ரசிகர்கள் எஸ்கேப்...


நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா? ( சும்மா ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கத்தான் கேட்கறேன்)கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கும் ஹீரோ லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என வேலைக்காரி பின்னால் அலைவது நம்பும்படி இல்லை.அதே போல் ஹீரோயின் கனவில் கண்ட ஆதர்ஷ கணவன் ஹீரோ போலவே இருப்பதால் அவரும் லவ்வுகிறார்.இவர்கள் இருவரும் லவ்வுவதைப்பார்த்து எனக்கு காதல் மீது இருக்கும் மரியாதையே போயிடுச்சு போங்க.

புதுமுகம் ஜெய் கிருஷ்ணா சுத்த வேஸ்ட்.லவ் பண்ணுவாராம்,கையைப்பிடிப்பாராம். அம்மா கிட்டே மட்டும் சொல்ல மாட்டாராம்.அம்மா தாதாவோ,கொடுமைக்காரியோ இல்லை. லாஜிக் ஓட்டை இல்லை லாஜிக் பள்ளமே விழுதே...அவரது நடிப்பு கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு சரி இல்லாததால் எடுபடவில்லை.ஹீரோயின் அனன்யா...குழந்தைத்தனமான முகம்.பாடல் காட்சிகளில் பாவனா +ஜோதிகா .காதல் காட்சிகளில் தேவயானி . பார்ட்டி கிட்டே சொந்த சரக்கு லேது. இயக்குநர்கள் செய்யும் தப்பு என்னன்னா ஒரு பாட்டு சீன் எடுக்கும்போது இப்படி நடிங்கன்னு சொல்லிக்காட்டறதில்லை. இந்தாம்மா குஷி பட டி வி டி, ஜெயம் கொண்டான் பட டி வி டி, இது மாதிரியே டான்ஸ் ஆடனும் என்கிறார்கள். ஹீரோயின்ஸ் என்ன பண்றாங்க ?அதை நெட்டுரு போட்டு வந்து அப்படியே நடிச்சுடறாஙக். அதான் எடுபடறதில்லை.


படத்துல பாராட்டற மாதிரி ரெண்டே அம்சம். 1. டைட்டில் போடறப்ப மெலோடி மியூசிக்கும் அந்த ஓவியம் டிசைன் ஐடியாவும். 2. ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது.கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.

முன் பனிக்காலம் பாடல் காட்சியில் ஒளீப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார். படத்தில். திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்கலை போட்டதற்கு ஒரு சபாஷ். ( அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்)

போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும்.மயில்சாமியின் செல்ஃபோனை லபக்கும் விவேக் அதை மறைக்க படாத பாடு படும் சீன் மட்டும்தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி.தனுஷ் பாவம் டம்மி கதையில் ஏற்று நடித்த டம்மி கேரக்டர். பாவம் அவர் தான் என்ன பண்ணு வார்?

தனுஷ் வந்து பெரிதாக அந்த குடும்பத்தில் ஏதோ ட்சாதிக்கபோகிறார் என்று பார்த்தால் கோபாலா கோபாலா பட ஆர் பாண்டியராஜன் மாதிரி சமையல் சித்து வேலை செய்து புஷ் ஆகிறார்.

படத்தில் சண்டைக்காட்சிகள், பில்டப் சீன்கள் இல்லை.. அவ்வளவு ஏன் நம்பும்படி கதையோ, சுவராஸ்யமான திரைக்கதையோ இல்லை.

சுஹாசினி ஹீரோவுக்கு அம்மாவாக வருகிறார். ஓவர் மேக்கப்.செயற்கையான சிரிப்பு.( டி வி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பங்கேற்று அவரது நளினம் காணாமல் போய் செயற்கை வந்து ஒட்டிக்கொண்டது.)வசனகர்த்தா மனதை திருடிய இடங்கள்
1. நாம என்னதான் பக்குவமா சமைச்சாலும் கோயில் பிரசாதம் டேஸ்ட் வர்றதில்லையே.. ஏன்? ( ஓசி ல சாப்பிட்டதாலயோ?)

2. அம்மாவுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் எந்த இடத்துலயும் நான் செய்ய மாட்டேன் ( கேப்டன் ஜெ பற்றி பேசற மாதிரியே இருக்குப்பா)

3. ஏய்.. ஏன் திடீர்னு தாவணி போட்டுக்கிட்டே..?

ஆம்பளைங்க இருக்கற வீட்ல அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு தாத்தா சொன்னாரு.. ( அடடா.. இந்த தாத்தாக்களால நமக்கு எவ்வளவு இடஞ்சல்?)

4. ஏய்....1 4 3 அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியுமா?

ம் ம் .. வேலை வெட்டி இல்லாத ஆம்பளைங்க பொண்ணுங்களைப்பார்த்தா அப்படி சொல்வாங்களாம். ( ஹி ஹி எங்க பார்ட் டைம் ஜாப்பே அதானே...)

5. வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா., அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்.. ( ந்நோ கமெண்ட்ஸ்.. செண்ட்டிமெண்ட் வசனம்)

6. இனி உன் சோகம் எல்லாம் என்னுடையது.. என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது... ( ஹீரோ அழகா ஒப்பிச்சாருப்பா.. )

7. சாமி.. கும்பிடறேங்க....

விவேக் - அப்பீட்டாயிக்க நமக....

8. குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?
9. விவேக் - டேய்.. ஒரு போலிச்சாமியாரை எவ்வளவுதாண்டா டார்ச்சர் பண்ணூவீங்க..?

10. இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டி உங்களைக்கூப்பிடுவா...

என்னது.. பாட்டியா..? ச்சீ

அடச்சே.. ஜோசியம் கேட்க.....

11. பெரிய வாழ்க்கையைக்கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு...

12. நீ சமையல் காரனா? மருத்துவனா?

சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

13. எந்த ஒரு பொருளுக்கும் அதனோட ஃஅழகை எடுத்துக்காட்ட ஒரு மாடல்தேவை.

படம் முடியும்போது ஹீரோயின் பாடும் அந்த சோகப்பாட்டைக்கூட சகித்துக்கொள்ளலாம், படம் நெடுக நாடகத்தனமாக நகரும் காட்சிகளைக்கூட மன்னித்து விடலாம்...ஆனால் படம் முடியும்போது தனுஷ் மனிதர் இல்லை பழநி மலை முருகன் என அவரை அவதார புருஷன் ஆக்கும்போதுதான்....

கேப்டன் பேட்டி - காமெடி1.குமுதம் - அ.தி.மு.க +தே.மு.தி.க கூட்டணி உருவாக ரொம்ப லேட் போல..?

கேப்டன் - பேச்சுவார்த்தையில் இழுபறி...எலக்‌ஷனுக்கு இன்னும் டைம் இருக்கே..இந்த காரணங்கள்தான்..

மனசாட்சி - அந்தம்மா கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவே ஆறு மாசம் ஆகிடுச்சு..போயஸ் தோட்டம் போனா 2 நாள் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. சொல்லி 2 நாள் கேட் அருகிலேயே அமர்ந்திருந்தும் ,2 நாள் கழிச்சு போயிட்டு நாலு நாள் கழிச்சு வாங்கன்னு விரட்டி விடறாங்க...ம் ம்.


2.குமுதம் - ஆட்சியில் பங்கு வேணாம்னு சொல்லீட்டீங்களாமே.. ஏன்?

கேப்டன் - தி.மு.கவை ஆட்சியை விட்டு அகற்றனும்ங்கறதுதான் என் லட்சியம்.அதனால சீட் எண்ணிக்கை பிரச்சனை இல்லை.

மனசாட்சி - என்னமோ அந்தம்மா இந்தா இந்தா அப்படின்னு 80 சீட்டு தூக்கி குடுத்த மாதிரியும், நான் தான் வேணாம் ,வேணாம்னு சொன்ன மாதிரியும் பேசறீங்களே..கடைசிவரை என்னை அவமானப்படுத்தாம விட்டாலே போதும்.. ஹூம் பார்ப்போம்.. அவரோட சரித்திரத்துல அவர் அவமானப்படுத்தாத கூட்டணிக்கட்சித்தலைவரே கிடையாது.. ஆனானப்பட்ட கவர்னரையே அவமானப்படுத்தீட்டாரு...

3. குமுதம் - இப்போ உங்க கூட்டணில 14 கட்சிகள் இருக்கு..தொகுதிப்பங்கீடு,கொள்கை ரீதியா பிரச்சனை வராதா?

கேப்டன் -ஒரு குடும்பத்துல சகோதர சகோதரிகளுக்கிடையே பிரச்சனை வராதா?அதெல்லாம் பேசித்தீர்த்துக்கலாம்.

மனசாட்சி - எவன் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?எப்படியாவது 15 சீட்டாவது ஜெயிச்சா போதும். ஓட்டு 12% ல இருந்து டபுள் ஆகி 24 % வாங்குனா இப்போதைக்கு போதும்.அப்புறம் கொள்கை ரீதியான பிரச்சனையா? ஹா ஹா உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு.. இங்கே அரசியல்ல எல்லாருடைய கொள்கையும் ஒண்ணுதான். நாம நல்லாருக்கனும், நமக்கு பதவி கிடைக்கனும்,முடிஞ்ச வரை சுருட்டணும். மக்கள் எப்படி நாசமாப்போனா என்ன?


4. குமுதம் - ஜெ- கேப்டன் சந்திப்பு எப்போது நடக்கும்?

கேப்டன் -விரைவில்... அதற்கான பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..

மனசாட்சி - யோவ்.. ஏய்யா பீதியை கிளப்பி விடறே..நானே பயந்துட்டு இருக்கேன். அவரை சந்திக்கறப்ப படையப்பா படத்துல வர்ற மாதிரி நிக்க வெச்சே பேசி அவமானப்படுத்தி அனுப்புமோன்னு..5.குமுதம் - காங்கிரஸ்ஸோடு கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்துனதா சொல்லப்படுகிறதே..

கேப்டன் -அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... நாங்க ஏர்போர்ட் பக்கம் போயே 6 மாசம் ஆகுது.. அப்புறம் எங்கேடெல்லி போறது?

மனசாட்சி - எல்லாம் நடத்துனோம்.ஆனா அவங்க எங்களை விட விளைஞ்ச ஆளா இருக்காங்க. காங்கிரஸ் தான் சி எம் வேட்பாளரை நிறுத்தும், நீங்க டெபுடி சி எம் அப்படின்னாங்க..அவங்க ஆதரவுல டெபுடி சி எம் ஆகறதுக்கு அம்மா கிட்டே எடுபுடியா இருக்கறதே பெட்டர்...


6.குமுதம் - எந்தப்பிரச்ச்னையை முன் வைத்து உங்கள் கூட்டணிப்பிரச்சாரம் அமையும்?

கேப்டன் -தமிழ்நாட்ல பிரச்சனைக்கா பஞ்சம்? திரும்புன பக்கம் எல்லாம் பிரச்சனைதான்.உலகமாகா ஊழல் அலைக்கற்றை இருக்க பயம் ஏன்?

மனசாட்சி - ஹூம்.. பிரச்சனையே எங்க கூட்டணிதான். மேடைல அம்மா மட்டும் உக்காந்திருக்கும். நான் நின்னுட்டே இருக்கனும்.பேசறதுக்குக்கூட அவர் கிட்டே அனுமதி கேட்கனும்.லியாகத் அலிகான் இருந்த வரை (கேப்டனின் ஆஸ்தான வசனகர்த்தா)என் சவுகர்யத்துக்குப்பேசி மக்களை கொலையா கொன்னெடுத்தேன்.ஹூம். 20 பக்கம் மனப்பாடம் பண்ணீட்டுப்போறேன்.. அட்லீஸ்ட் 4 வரியாவது பேச விட்டா பரவால்லை.7. குமுதம் - ஜெயலலிதா - விஜயகாந்த் இணைந்து பிரச்சாரம் செய்யும் எண்ணம் உண்டா?

கேப்டன் -இல்லை..இரு தலைவர்கள் தனித்தனியே பிரச்சாரம் பண்றது புதுசில்லை..ஏற்கனவே எம் ஜி ஆர் -கலைஞர் ஒண்ணா இருந்தப்ப 2 பேரும் தனித்தனியேதான் பிரச்சாரம் பண்ணுனாங்க...அதே போல்...நாங்களும்..

மனசாட்சி - எனக்கும் ஆசைதான். ஆனா அதுல ஒரு ஈகோ பிரச்சனை வரும். கூடுன கூட்டம் எனக்காகத்தான் கூடுச்சுன்னு நான் சொல்வேன்.ஆர்ப்பரிக்கும் அலைகடலென திரண்ட கூட்டம் எனக்காக வந்தவைன்னு அவங்க சொல்வாங்க... எதுக்கு வம்பு...?

8. குமுதம் -கடைசி நேரத்தில் தி. மு.கவுடன் கூட கூட்டணிக்கு முயற்சி செஞ்சீங்களாமே...?

கேப்டன் -சே.. சே கற்பனை.. அதெல்லாம் உண்மை இல்லை.

மனசாட்சி - அதென்ன தி மு க கூட... அவ்வளவு இளப்பமா போச்சா?தனியா நின்னு ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கைப்பிரிங்க ரூ 500 கோடி வாங்கிக்குங்கன்னு பேரம் பேசுனாங்க.. நான் அப்படியே கண்ணெல்லாம் சிவக்க பொங்கி எழுந்துட்டேன்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை பேரம் தான். இவங்க மட்டும் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி அசால்ட்டா அடிப்பாங்களாம். நமக்கு மட்டும் பிச்சைக்காரத்தனமா ரூ 500 கோடி மட்டும் தருவாங்களாம்.யார் கிட்டே....? நான் ஃபைனலா ரூ 10,000 கோடி கேட்டேன்.. அரண்டுட்டாங்க...

9. குமுதம் - நடிகர் விஜய் உங்கள் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வாரா?அதற்கான வாய்ப்பு உண்டா?

கேப்டன் -தெரியாது.

மனசாட்சி - தே.மு.தி.க விற்காக முதல்ல அம்மா பிரச்சாரம் பண்ணுவாங்களா? அப்படிங்கறதே டவுட்.. இதுல இது வேறயா?

அம்மாவின் ராசி எண்ணான 9 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது தற்செயலானதா? திட்டமிட்டே போடப்பட்டதா?ன்னு தெரியல.


தமிழ்நாட்டின் மக்களை இனி அந்த ஆண்டவனே வந்தாலும், ஏற்கனவே ஆண்டவரே வந்தாலும், இப்போது ஆண்டவரே மீண்டும் வந்தாலும் காப்பாத்த முடியாது என்பது மட்டும் தெளிவாத்தெரியுது.

Tuesday, March 1, 2011

இயக்குநர் கவுதம் மேணனுக்கு ஒரு கண்டனக்கடிதம்
அன்புள்ள இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு,


வணக்கம்.நான் உங்கள் பரம ரசிகன்.மின்னலே படத்தில் வசீகரா பாட்டும் ,படமாக்கபட்ட விதமும் காதலை காதலோடு பார்க்க வைத்தது.விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு புனர் ஜென்மம் கொடுத்தீர்கள். த்ரிஷாவை மிக அழகாக காட்டினீர்.இன்னும் உங்கள் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லாவற்றையும் மறக்கடித்து விடது உங்கள் லேட்டஸ்ட் படம் நடு நிசி நாய்கள்.


ஊர் உலகத்துல நடக்கறதைத்தானே காட்டறேன் என நீங்கள் சால்ஜாப்பு சொல்லலாம்.சமூகத்தை திருத்தத்தான் ஒரு விழிப்புணர்வுப்படமா எடுத்தேன் என நீங்கள் எஸ்கேப் ஆகலாம்.ஆனால் நான் கேட்கும்,இந்த சினிமா ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை கொஞ்சம் செவி மடுங்கள்.
1. உங்க அம்மா, அப்பாவோட அமர்ந்து இந்தப்படத்தை நீங்க பார்ப்பீர்களா?


2. உங்க பையன் வளர்ந்து பெரியவன் ஆன பின்னாடி இது எங்கப்பா டைரக்ட் பண்ணுன படம்னு பெருமையா சொல்லிக்க முடியுமா?


3.உங்க பட விளம்பரத்துல உண்மை சுடும் ஆனால் உண்மை உண்மைதான் என போட்டிருக்கிறீர்களே...ஈழத்தமிழர்கள் வாழ்வு காங்கிரஸ் ஆட்சியாலும், கலைஞரின் சுயநலத்தாலும் தான் நிர்மூலமானது என்ற உண்மையை தெளிவு படுத்த படமா எடுக்க முன் வருவீங்களா?


4. எங்கோ ஒரு மூலையில் எப்போதாவது நடக்கும் அபூர்வ நிகழ்வை எல்லா இடங்களிலும் நடப்பது போலவும்,தமிழகமே கலாச்சார சீர்கேட்டில் சிக்கி தவிப்பது போலவும் காட்டி இருக்கீங்களே.. மன நோய் பீடித்திருப்பது உங்கள் பட ஹீரோவுக்கா? உங்களுக்கா?


5. படம் ரிலீஸ் ஆகி 2-வது நாளே படம் டப்பா என அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில் விஜய் டி வி , கலைஞர் டி வி என மாறி மாறி வந்து இந்தப்படத்தின் நியாயங்களை எடுத்துரைக்கிறீர்களே.. உங்களுக்கு கூச்சமாக இல்லையா?


6.படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.. ஓகே 18 வயசுக்கு உட்பட்டவர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள்.. ஆனால் டி வி என்பது வீட்டில் இருக்கும் சாதனம். அதில் அனைவரும் பார்க்கும் சாத்தியமே அதிகம் உள்ளது என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அந்த படத்துக்காக வாதாடி,படத்தின் கதைக்கருவை பெண்களுக்கு மத்தியிலும் கூச்சமே இல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறிர்களே.. எப்படி..?


7. ஆங்கிலப்படத்துக்கு நிகராக எடுத்திருக்கிறேன் என வாய் கூசாமல் சொல்கிறீர்களே...அதற்கு பேசாமல் ட்ரிபிள் எக்ஸ் படம் எடுத்திருக்கிறேன் என சொல்லி இருக்கலாமே..?


8. சீன் படங்களை மக்கள் ரசிப்பதில்லையா? என கேட்டிருக்கிறீர்கள்.. ஆம்... ரசிப்பதுண்டுதான். ஆனால் அதே சீன் படமான சிந்து சமவெளி கலாச்சார சீர் கேடு என்று தெரிந்ததும் மக்கள் காரி துப்பி டப்பா ஆக்கவில்லையா? இயக்குநர் சாமி வெளி இடங்களுக்கே சரியாகப்போகாமல் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்காரே... அதைப்பார்த்துமா நீங்க இப்படி ..?


9. நூறாவது நாள் படத்தைப்பார்த்து ஒரு ஆட்டோ சங்கர் உருவான மாதிரி இந்தப்படத்தைப்பார்த்து ஒரு வீரா உருவாகமாட்டான் என்பது என்ன நிச்சயம்..?


10. கற்பழிப்பின்போது ஆரம்பத்தில் எதிர்க்கும் பெண் பின் அதை விரும்புவாள் என்ற தவறான எண்ணத்தை பார்வையாளன் மனதில் விதைத்த நீங்கள் இதனை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு யாரேனும் முயற்சி செய்தாலோ, குற்றங்கள் அதிகரித்தாலோ உங்களால் அதற்கு பதில் சொல்ல முடியுமா?

DRIVE ANGRY - சினிமா விமர்சனம்தமிழனின் காதில் பூ சுற்றும் உரிமையும், திறமையும் நமது தன்மானத்தமிழர் டாக்டர் கலைஞருக்கும், புரட்டுத்தலைவி ஜெவுக்கும் மட்டும் தான் உண்டு என நாம் நம்பி வந்த இந்த கால கட்டத்தில் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் காதில் பூவை மட்டும் அல்ல ,பூக்கூடையையே வைக்கும் கதை ,திரைக்கதையுடன் களம் இறங்கி இருக்கிறார்கள் அதுவும் ரசிக்கும் விதத்தில்.


பொதுவாக தமிழனுக்கு ஒரு பழக்கம் உண்டு... தமிழில் இந்த மாதிரி நம்ப முடியாத கதை வந்தால் கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வாங்களே என எள்ளி நகையாடுவான்.அதுவே ஹாலிவுட்ல வந்தா மம்மியைக்கண்ட ஓ பன்னீர் செல்வம் மாதிரி பம்மிக்கிட்டே படத்தை ரசிப்பாங்க...


சரி .. படத்தோட கதை என்ன? தன்னோட பெண்ணை கொலை செய்த வில்லன் குரூப்பை பழி வாங்குற அப்பாவோட கதை தான்.. இதுல காதுல பூ மேட்டர் என்ன>ன்னு கேக்கறீங்களா? பொண்ணோட அப்பாவும் இறந்துடறாரு. நரகத்துல எம கிங்கரர்கள் அஜாக்கரதையா இருந்தப்ப தப்பி பூலோகத்துக்கு வந்துடறாரு.(ராம்தாஸ் திடீர்னு கலைஞர் கூட்டணிக்கே வந்த மாதிரி).பழி வாங்கும் படலத்தினை முடிச்சுட்டு பேத்தியை (மழலை) ஹீரோயின் கைல ஒப்படைச்சுட்டு மறுபடி கார்ல (புஷ்பக விமானம்!!!) பேக் ட்டூ பெவிலியன் கணக்கா போயிடறாரு.
ஆனா இந்த சாதாரண கதைக்கு திரைக்கதை அமைத்த விதம், காட்சிகளில்,ஒளிப்பதிவில் காட்டி இருக்கும் பிரம்மாண்டம் இதை ஒரு வெற்றிப்படமாக்கி இருக்கு.ஓப்பனிங்க் சீன்ல பார்ல வேலை செய்யற 2 ஃபிகர்கள்ட்ட பேசி தகவல் கறக்கற இடம் செம ஜாலி. அப்போ ஒரு லிப் டூ லிப் சீனும் உண்டு.


அஜால் குஜால் ரசிகர்களை திருப்திப்படுத்தற மாதிரி ஒரு கலக்கலான டாப்லெஸ் சீனும் உண்டு.. எஞ்ஜாய்.


அர்னால்டு ஸ்வார்ஜெனேகர் நடிச்ச த டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்தோட பாதிப்புகள் பல இடத்துல வர்றதை டைரக்டர் தவிர்த்திருக்கலாம்.ஹீரோ நிக்கோலஜ் கேஜ் நல்லா பண்ணி இருக்காரு.. ஜீன் கிளாடு வாண்டம் பண்ண வேண்டிய கேரக்டர்.

ஹீரோயின் நல்ல ஃபிகர் தான். அவர் ஓனரிடம் சண்டை போட்டுட்டு உடனே ரிசைன் பண்ணுவது, காதலன், காதலி வரமாட்டாங்கற நம்பிக்கைல வேற ஒரு ஃபிகர் கூட அவ வீட்லயே ஜல்சா பண்ணிட்டு இருக்கறது, அவளைப்பார்த்ததும் சண்டை போடறது எல்லாமே டிராமா மாதிரி இருந்தாலும் ரசிக்கற மாதிரி இருக்கு. ( ஆமா.. சீன் இருக்குல்ல.. ரசிக்காம..?)


அதுக்குப்பிறகு ஹீரோயின் காதலனை கழட்டி விட்டுட்டு ஹீரோ கூட சேர்ந்து பயணப்படறது முதல் ஆக்‌ஷன் அதகளம்.படம் செம ஸ்பீடு... படம் லாஜிக் ஓட்டைகளையும் , திரைக்கதை சொதப்பல்களையும் மீறி விறுவிறுப்பா போகுதுன்னா டைரக்டரின் சாமார்த்தியமான டைரக்‌ஷன் தான்.
ஹீரோவின் பேத்தி ( 2 மாச அட்டுக்குழந்தை)யை நர பலி கொடுக்க வில்லன் குரூப் முயல்வது.. அதை ஹீரோ தடுப்பது எல்லாம் ராமநாராயனன் படம் மாதிரி இருக்கு.


கடைசில ஹீரோ வில்லனை கொன்னு பழி வாங்குன பிறகு வில்லனோட மண்டை ஓட்டுல ரத்தம் குடிக்கற சீன் ரொம்ப கொடூரம். எப்படி சென்சார்ல விட்டாங்களோ?


நரகத்துல இருந்து கடவுளோட தூதுவனா வர்றவரு (!!!???) ஒவ்வொரு முறை போலீஸ் சூழும்போதும் பதட்டப்படாம ஒரு காய்னை தூக்கி மேலே வீசுவதும், அது கீழே வரும்போது FBI ID CARD டாக வருவதும் கொள்ளை அழகு. செம ஸ்டைலிஸ்ஸான சீன் அது.( கோலிவுட் உல்டா டைரக்டர்ஸ் நோட் டவுன் ப்ளீஸ்)


வேகமாக போகும் படத்தில் வந்த விவேகமான வசனங்கள்
1. ஹீரோ - இது என் பர்ஸ்.. உன் கைக்கு எப்படி வந்தது?
ஹீரோயின் - இது என்ன கேள்வி? திருடுனேன்.


2. ஹீரோயின் - அவனை உங்களுக்கு முதல்லயே தெரியுமா?


ஹீரோ - ம் , அவனோட அக்கா எனக்கு ஃபிரண்டு....


ஹீரோயின் - ஓஹோ, அதான் உங்களை முறைச்சு முறைச்சு பார்த்தானா?


3. வண்டியை நிறுத்து.......


ஸாரி.. எனக்கு வேலை இருக்கு...


டேய்.. இது போலீஸ் உத்தரவு...... துப்பாக்கிக்காவது மரியாதை குடுங்கடா...


4. அடக்கடவுளே......


ஆமா.. நிஜமாவே நான் கடவுள் தான். இன்றைய ட்ரெண்டுக்குத்தக்கபடி கெட்டப் மாத்திக்கிட்டேன்.


5. அய்யய்யோ.. நான் பயத்துலயே செத்துடுவேன் போல இருக்கே...


கவலைப்படாதே.. உனக்கு 72 வயசு வரை ஆயுள் கெட்டி... உனக்குப்பக்கத்துல கவலை இல்லாம தெனாவெட்டா நிக்கறானே.. அவனுக்கு இன்னும் 4 நாள் தான் ஆயுள்....


6. மனைவிக்கு நல்ல கணவனா நடந்துக்காதவன் கூட தன்னோட மகளுக்கு ஒரு நல்ல அப்பாவா நடந்துக்கற அதிசயத்தை நாம தினம் பார்த்துட்டுதான் இருக்கோம்.


7. நமக்குப்பிரியமானவங்களுக்கு நடக்கர கொடுமையை நாம நேர்ல பார்த்துடா அந்த காட்சி காலாகாலத்துக்கும் நம்ம மனக்கண்ல வந்துட்டு வந்துட்டு போறதை தடுக்க முடியாது...