Thursday, March 3, 2011

சீடன் - சினிமா விமர்சனம்திருடா திருடி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் சுப்ரமண்யம் சிவா,தொடர்ந்து 5 படங்கள் ஹிட் கொடுத்த தனுஷ்,தனது 50 வது படம் என்ற லேபிளுடன் ஆர்வமாக இசை அமைத்த தினா என ஓரளவு எதிர்பார்ப்புடன் சென்றால்.......

லண்டன் போகப்போகும் வசதியான வீட்டு ஹீரோவுக்கு வீட்டு வேலைக்காரி மேல் லவ்.அதை தனது அம்மாவிடம் சொல்லாமல் காலம் கடத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கும்போது ,ஹீரோ - ஹீரோயின் இருவரையும் சேர்த்து வைக்கும் மாமா... சாரி மாமாங்கம் மாமாங்கமாய் தமிழ் சினிமா ஹீரோக்கள் ஏற்று நடித்த பூந்தோட்ட காவல்காரனாக தனுஷ் அந்த வேலையை கச்சிதமாக முடிக்க...ஸ் ஸ் அப்பாடா என ரசிகர்கள் எஸ்கேப்...


நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா? ( சும்மா ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கத்தான் கேட்கறேன்)கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கும் ஹீரோ லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என வேலைக்காரி பின்னால் அலைவது நம்பும்படி இல்லை.அதே போல் ஹீரோயின் கனவில் கண்ட ஆதர்ஷ கணவன் ஹீரோ போலவே இருப்பதால் அவரும் லவ்வுகிறார்.இவர்கள் இருவரும் லவ்வுவதைப்பார்த்து எனக்கு காதல் மீது இருக்கும் மரியாதையே போயிடுச்சு போங்க.

புதுமுகம் ஜெய் கிருஷ்ணா சுத்த வேஸ்ட்.லவ் பண்ணுவாராம்,கையைப்பிடிப்பாராம். அம்மா கிட்டே மட்டும் சொல்ல மாட்டாராம்.அம்மா தாதாவோ,கொடுமைக்காரியோ இல்லை. லாஜிக் ஓட்டை இல்லை லாஜிக் பள்ளமே விழுதே...அவரது நடிப்பு கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு சரி இல்லாததால் எடுபடவில்லை.ஹீரோயின் அனன்யா...குழந்தைத்தனமான முகம்.பாடல் காட்சிகளில் பாவனா +ஜோதிகா .காதல் காட்சிகளில் தேவயானி . பார்ட்டி கிட்டே சொந்த சரக்கு லேது. இயக்குநர்கள் செய்யும் தப்பு என்னன்னா ஒரு பாட்டு சீன் எடுக்கும்போது இப்படி நடிங்கன்னு சொல்லிக்காட்டறதில்லை. இந்தாம்மா குஷி பட டி வி டி, ஜெயம் கொண்டான் பட டி வி டி, இது மாதிரியே டான்ஸ் ஆடனும் என்கிறார்கள். ஹீரோயின்ஸ் என்ன பண்றாங்க ?அதை நெட்டுரு போட்டு வந்து அப்படியே நடிச்சுடறாஙக். அதான் எடுபடறதில்லை.


படத்துல பாராட்டற மாதிரி ரெண்டே அம்சம். 1. டைட்டில் போடறப்ப மெலோடி மியூசிக்கும் அந்த ஓவியம் டிசைன் ஐடியாவும். 2. ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது.கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.

முன் பனிக்காலம் பாடல் காட்சியில் ஒளீப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார். படத்தில். திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்கலை போட்டதற்கு ஒரு சபாஷ். ( அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்)

போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும்.மயில்சாமியின் செல்ஃபோனை லபக்கும் விவேக் அதை மறைக்க படாத பாடு படும் சீன் மட்டும்தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி.தனுஷ் பாவம் டம்மி கதையில் ஏற்று நடித்த டம்மி கேரக்டர். பாவம் அவர் தான் என்ன பண்ணு வார்?

தனுஷ் வந்து பெரிதாக அந்த குடும்பத்தில் ஏதோ ட்சாதிக்கபோகிறார் என்று பார்த்தால் கோபாலா கோபாலா பட ஆர் பாண்டியராஜன் மாதிரி சமையல் சித்து வேலை செய்து புஷ் ஆகிறார்.

படத்தில் சண்டைக்காட்சிகள், பில்டப் சீன்கள் இல்லை.. அவ்வளவு ஏன் நம்பும்படி கதையோ, சுவராஸ்யமான திரைக்கதையோ இல்லை.

சுஹாசினி ஹீரோவுக்கு அம்மாவாக வருகிறார். ஓவர் மேக்கப்.செயற்கையான சிரிப்பு.( டி வி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பங்கேற்று அவரது நளினம் காணாமல் போய் செயற்கை வந்து ஒட்டிக்கொண்டது.)வசனகர்த்தா மனதை திருடிய இடங்கள்
1. நாம என்னதான் பக்குவமா சமைச்சாலும் கோயில் பிரசாதம் டேஸ்ட் வர்றதில்லையே.. ஏன்? ( ஓசி ல சாப்பிட்டதாலயோ?)

2. அம்மாவுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் எந்த இடத்துலயும் நான் செய்ய மாட்டேன் ( கேப்டன் ஜெ பற்றி பேசற மாதிரியே இருக்குப்பா)

3. ஏய்.. ஏன் திடீர்னு தாவணி போட்டுக்கிட்டே..?

ஆம்பளைங்க இருக்கற வீட்ல அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு தாத்தா சொன்னாரு.. ( அடடா.. இந்த தாத்தாக்களால நமக்கு எவ்வளவு இடஞ்சல்?)

4. ஏய்....1 4 3 அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியுமா?

ம் ம் .. வேலை வெட்டி இல்லாத ஆம்பளைங்க பொண்ணுங்களைப்பார்த்தா அப்படி சொல்வாங்களாம். ( ஹி ஹி எங்க பார்ட் டைம் ஜாப்பே அதானே...)

5. வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா., அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்.. ( ந்நோ கமெண்ட்ஸ்.. செண்ட்டிமெண்ட் வசனம்)

6. இனி உன் சோகம் எல்லாம் என்னுடையது.. என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது... ( ஹீரோ அழகா ஒப்பிச்சாருப்பா.. )

7. சாமி.. கும்பிடறேங்க....

விவேக் - அப்பீட்டாயிக்க நமக....

8. குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?
9. விவேக் - டேய்.. ஒரு போலிச்சாமியாரை எவ்வளவுதாண்டா டார்ச்சர் பண்ணூவீங்க..?

10. இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டி உங்களைக்கூப்பிடுவா...

என்னது.. பாட்டியா..? ச்சீ

அடச்சே.. ஜோசியம் கேட்க.....

11. பெரிய வாழ்க்கையைக்கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு...

12. நீ சமையல் காரனா? மருத்துவனா?

சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

13. எந்த ஒரு பொருளுக்கும் அதனோட ஃஅழகை எடுத்துக்காட்ட ஒரு மாடல்தேவை.

படம் முடியும்போது ஹீரோயின் பாடும் அந்த சோகப்பாட்டைக்கூட சகித்துக்கொள்ளலாம், படம் நெடுக நாடகத்தனமாக நகரும் காட்சிகளைக்கூட மன்னித்து விடலாம்...ஆனால் படம் முடியும்போது தனுஷ் மனிதர் இல்லை பழநி மலை முருகன் என அவரை அவதார புருஷன் ஆக்கும்போதுதான்....

1 comment:

football tickets said...

nice posting about media you used perfact wording